வெள்ளி, 22 நவம்பர், 2013

இரண்டாம் உலகம் - விமர்சனம் 


                        இந்த பிரபஞ்சத்தில் நம் ஒருசூரியகுடும்பம் மட்டுமில்லை , இதுபோல் நிறைய சூரிய குடும்பங்கள் இருக்கின்றன,அங்கே நம்மைப்போன்ற உயிரினங்கள் இருக்கின்றன ஆனால் அங்கே காதல் இல்லை ( காதல் இல்லாமல் பின்ன எப்படி அம்புட்டு மக்கள் தொகை) அந்த காதலை இங்கேருந்து போற ஒருத்தர் அங்கே அறிமுகப்படுத்துறார் இதுதான் படத்தின் ஒன் லைன்.


 இந்த உலகத்துல தன் காதலிய இழந்த ஆரியா இரண்டாம் உலகத்துக்கு மங்கல்யான்ல.... ச்சே...பிரிமியர் பத்மினி கார்ல போய் இறங்கி அங்க காதல அறிமுகப்படுத்தி, எதிரும் புதிருமா  முட்டிட்டு திரியிற இன்னொரு ஆரியா அனுஷ்கா ஜோடிய சேத்து வைக்கிறதுதான் கதை, இதுக்கு அப்புறமும் டைரக்டர் விடுறதா இல்லை மூன்றாம் உலகத்து ஆரியா அனுஷ்காவையும் நமக்கு அறிமுகப்படுத்திட்டுத்தான் படத்த முடிக்கிறார்.... 



 இது ஆரியா காதலிக்கிறவங்க பொட்டுன்னு சாகுற சீசன் போல ராஜா ராணி நஸ்ரியா போல, இதுலயும் அனுஷ்கா பொட்டுன்னு போயிடுறாங்க (எனக்கு வந்த போன்கால் யாருதுன்னு மொபைல குனிஞ்சி பாத்து நிமிர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சி)

   ரெண்டு உலகத்துக்கதை, இதுல ரெண்டாம் உலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ரொம்ப மெனக்கெட்றுக்காங்க நிஜமாவே தமிழுக்கு இது ஒரு நல்ல முயற்சி.... ஆனாலும் என்னபண்ண  கதை சொதப்பிடுச்சே ரெண்டாம் உலகத்துக்கு போற ஆரியா  காதலர்கள  ஒன்னு சேக்குறதுக்கு என்ன பண்ணார்ன்னு யோசிச்சா ஒண்ணுமில்ல... காட்டுல இருக்கிற அனுஷ்காக்கு ரெண்டு மூணு தடவ டிப்பன்  கொண்டுபோய் கொடுக்கிறார் அம்புட்டுதான்

   மொத்தப் படமும் அனுஷ்காவ சுத்திதான் நகருது ஆனாலும் அனுஷ்காவ பத்தி சொல்றதுக்கும் ஒண்ணுமில்ல... 'ஜொள்'றதுக்கும் ஒண்ணுமில்ல நம் உலக அனுஷ்காவாவது பரவாயில்லை ,ரெண்டாம் உலக அனுஷ்காதான் பாவம் மேக்கப் இல்லாம நடிச்சிருக்கங்கன்னு நெனைக்கிறேன்... இப்படியே போனா ரிட்டையர் நடிகைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் ராமநாரயணன் சார் கூட அம்மணிய அம்மன் வேஷம் கட்ட கூப்பிட மாட்டரு.


        ஆரியா சுத்த வேஸ்ட்டு... அவர் வசனம் பேசும் போதெல்லாம் கடுப்பு கடுப்பா வருது.... பல இடங்கள்ல காதல் கொண்டேன் தனுஷ்ஷ ஞாபகபடுத்துறார், அப்புறம் அந்த இரண்டாம் உலக அம்மா (கடவுள்)கேரக்டர்... பல்லு விளக்காமலேயே நடிக்கவந்துடுச்சி போல.... வெள்ளைகாரங்க எல்லாம் தமிழ் பேசுறாங்க அப்படி அவர்கள் தமிழ்ல பேசும்போது தியேட்டரில் ஆங்காங்கே நமுட்டு சிரிப்பொலி... 

            பாடல்கள் இசை ஹாரிஸ்... கேக்ககேக்க பிடிக்குமோ என்னவோ? பின்னணி இசை அனிருத், நல்லா  இருந்தாலும்... பல இடங்களில் ஒரேமாதிரியான BGM, அதாலேயே  ஒருகட்டத்தில் லேசாக தலைவலி வர்றமாதிரி ஒரு உணர்வு. வசனம் எதுவும் மனசுல நிக்கல, செல்வா டச்ன்னு சொல்றதுக்கு ஒரு டாய்லட் சீன் இருக்கு.அப்புறம் இரண்டாம் உலகத்துக்கு வழி காட்டுற நாய் சீனையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

         இறுதியாக... எம்ஜிஆர்,நம்பியார் நடிச்ச கலையரசி படத்த அப்ப எல்லாரும் கிண்டல் பண்ணாங்களாம் ஆனா இப்ப அததான் தமிழின் முதல் விஞ்ஞான படமா குறிப்பிடுறாங்க... அதுபோல இந்தப்படமும் பின்னாளில் ஒரு வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட முதல் பேண்டஸி படம் என்று குறிப்பிடப்படலாம்.

     
     

புதன், 6 நவம்பர், 2013

போலி டாக்டர் வர்றார் எல்லாரும் ஓடுங்க - ஜோக்ஸ்.




பேஷன்ட் : பயமா இருக்கு டாக்டர்... என்ன 'நம்பி' பொண்டாட்டி,ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. 

டாக்டர் :  நான் ஒருத்தன் இருக்குறதயே மறந்துட்டீங்க....பாத்தீங்களா.

_______________________________________________________________________


போலி டாக்டர் : பாதி ஆபரேஷன்ல பேஷன்ட் வயித்துக்கு 'உள்ளே' எத வைக்கிறது எத 'வெளிய' எடுக்கிறதுன்னு குழப்பம் ஆயிடுச்சி. 

மற்றவர் : ஐயோ... அப்புறம்.


போலி டாக்டர் : 'உள்ள' போயிட்டு இப்பதான் ஜாமீன்ல 'வெளிய' வர்றேன்.
_______________________________________________________________________________
வந்தவர் : பெண் குழந்தைதான் வேணும்னு என் பொண்டாட்டி அடம் பிடிக்கிறா அப்படி பிறக்க எதுவும் மருந்து இருக்கா டாக்டர் ?

டாக்டர் : இருக்கே... டுவிட்டர்ல ஒரு அக்கௌன்ட் ஆரம்பிங்க போதும்.

_______________________________________________________________________



பேஷன்ட் : 'ஆபரேஷன்'னாலே எனக்கு அலர்ஜி டாக்டர்.


போலி டாக்டர் : எனக்குக்கூடத்தான்... ஆபரேஷனுக்கு  கத்திய எடுக்கும்போதே குமட்டும் ஆனாலும் அப்பப்ப எலுமிச்சம் பழத்த மோந்துபாத்து சமாளிச்சிப்பேன். 
______________________________________________________________________

சென்றாயன்  : சந்தோசத்துல பெரிய சந்தோசம் 'அடுத்தவன' சந்தோசப்படுத்தி பாக்குறதுதான்.

மற்றவன் : அதுக்காக 'அந்த அடுத்தவன்' பொண்டாட்டிய கூடிட்டு ஓடக்கூடாது மிஸ்டர் சென்றாயன்.
__________________________________________________________________________

சிங்: என்ன மிஸ்டர் PC இந்த வெங்காய விலை நம்ம அடுத்த எலக்ஷன்ல தல தூக்க விடாது போலயே.

ப.சி. : யூ டோன்ட் வொரி மிஸ்டர் P.M.... இந்த ஆஸ்பத்திரி செலவுகளுக்கு 80D டாக்ஸ் எக்ஸம்ஸன் கொடுக்கிறமாதிரி, 50000 ரூபாய் வரைக்கும் வெங்காயம் வாங்குன பில்லுக்கு 80 'O'  ( O for onion )டாக்ஸ் எக்ஸம்ஸன்ன்னு சொல்லி ஓட்ட அள்ளிடலாம்.
__________________________________________________________________________

ஒருத்தி : உம் புருஷன் தூக்கத்துல நடந்தே அடுத்த ஏரியாக்கு போயிடுறார்ன்னு வைத்தியம் பாத்தியே இப்ப முன்னேற்றம் தெரியுதா??

மற்றவள் : ஐயோ அந்த கொடுமைய என் கேக்குற.... காலையில திருப்பதில இருக்கேன்னு போன் பண்னார்.
_____________________________________________________________________

ஒருவர் : 'ஆறு'லயும் சாவு கிடையாது 'நூறு'லயும் சாவுகிடையாது

நண்பர் : யார் அது  ?

ஒருவர் : அந்த 'ஆறு''நூறு' எழுத்துகளுக்குத்தான், அதுல 'சா,வு.' ங்கிற எழுத்தே இல்ல பாருங்க.
_______________________________________________________________________

தொண்டர் : அந்த போலீஸ் ஸ்டேசன கார்ல கடக்கும் போதெல்லாம் தலைவர் கும்பிட்டுப்பார்.

தொண்டர் 2  : எதுக்காக அப்படி செய்றார்?

தொண்டர் 1 : முன்ன தினமும் கையெழுத்துப் போட்டு பழகின இடமாம்.
____________________________________________________________________


ஒருத்தி  : நா வாங்குற சம்பளத்துல முக்கால்வாசி புடவைஎடுக்கிறதுக்கே போயிடுது

இன்னொருத்தி  : அப்ப மீதி?

ஒருத்தி : அந்தப் புடவைங்களுக்கு ஓரம் அடிக்கிறதுக்கு போயிடுது.
________________________________________________________

ஆகவே நண்பர்களே ஜோக்ஸ் பிடிச்சிருந்தா,ட்விட்டர்,fb,g1,தமிழ் மனம் இதுல உங்களுக்கு எதுல அக்கௌன்ட் இருந்தாலும் மறக்காம பகிருங்க. உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமா எழுதுங்க ,அப்புறம் இதுக்கு முந்தய பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி,குறிப்பாக ஜோக்குகள் குடும்பமலர் தரத்துக்கு இருக்குன்னு வாரிய... ச்சே ... வாழ்த்திய அந்த நல்ல உள்ளத்துக்கும் நன்றி.
                                                                           இப்படிக்கு அன்புடன்

                                                                               பொ. முருகன்.





















திங்கள், 4 நவம்பர், 2013

சிரிங்க... சிரிகமுடியலைனா துப்பாதீங்க - நகைச்சுவை ஜோக்ஸ்.



1. பயணி : நான் தனியாதான் வந்திருக்கேன்  எனக்கெதுக்கு லக்கேஜ் போடுறீங்க 


நடத்துனர் : மனசுக்குள்ள சோகம் வண்டி வண்டியா இருக்குன்னு                                                     சொன்னீங்களே.....!!
----------------------------------------------------------------------------------------------------------







2. டாக்டர் : பேஷன்ட்டுக்கு  விறைவீக்க ஆபரேஷன் பண்ணும்னு                  சொன்னவுடனே பேய் முழி முழிச்சாரே அவரு பேஷன்ட்டுக்கு                      என்னவேணும்??

நர்ஸ் : புருஷனாம்...!!!!
-----------------------------------------------------------------------------------------------------------




3. நண்பர் : முறுக்குக்கு பேர் போன ஊர் எதுன்னு சொல்லு பாக்கலாம்?

   நண்பர் :  பேர் போன ஊர் எதுன்னு தெரியல, ஆனா பல்லு போன ஊரு மதுரை...  மாமியார் ஊரு!!
-------------------------------------------------------------------------------------------------


4. கணவர் : சீடைய கடிக்க முடியல ரொம்ப ஹார்டா இருக்கு ?உடைக்க ஏதாவது குடேன்?

    மனைவி : மைசூர் பாக் இருக்குல்ல  அதால உடச்சிக்குங்க?
--------------------------------------------------------------------------------------------------





5. நண்பன் : ஏன்டா கடேசில இப்படி'கவுத்து'ட்ட??

நண்பன் 2 : நீ தானே 'TITANIC'க்க சொன்ன....
------------------------------------------------------------------------------------------




6. ஒருவர் :  40 ல போனா வண்டி லிட்டருக்கு 70 கொடுக்கும்.50 ல போனா 60 கொடுக்கும்

    மற்றவர் : 100 ல போனா ?

    ஒருவர் : உங்களுக்கு திதி கொடுக்கணும்.
------------------------------------------------------------------------------------



7. டாக்டர் : நீங்க கண்டிப்பா தினமும் 5KM வாக்கிங் போகணும்.

  பைனாஸ் கம்பெனி நடத்துறவர்: 5 கிலோ மீட்டரா...?! 50 மீட்டர் மட்டும் வாக்கிங் போற மாதிரி இன்சால் மென்ட் ஸ்கீம் எதுவும் இல்லையா டாக்டர்.

-------------------------------------------------------------------------------------------





8. ஒருவர் :எவனும் பொண்டாட்டிக்கூட சண்டைபோட்டு சாமியாரா போனதா சரித்திரம் இல்லை...

 மற்றவர் : ஏன் அப்படி?

ஒருவர் : ஒரு பொண்டாட்டியையே சமாளிக்கமுடியாதவன் எப்படி............!!
------------------------------------------------------------------------------------------------------------



9. ஜட்ஜ் : ஏன் டைவேர்ஸ் கேக்கிறீங்க?

கணவன் : அலர்ஜியான எதையும் சேத்துக்கக் கூடாதுன்னு டாக்டர்
சொல்லிட்டாருங்க எசமான்!
---------------------------------------------------------------------------------------


10. ஒருவர் : பெண்கள் விடும் கண்ணீர் ரெண்டே வகைதானா எப்படி?

  மற்றவர் : கண்ணீர் கன்னம் வழியா போனா சீரியலுக்கு அழறாங்கன்னு அர்த்தம்,கண்ணீர் காதுக்கு போச்சின்னா சீரியஸா அழறாங்கன்னு அர்த்தம்.

-----------------------------------------------------------------------------------------

ஆகவே மக்களே படிச்சிட்டு நல்லா இருந்தா சிரிச்சிகிட்டே லிங்க பகிருங்க. நல்லா இல்லன்னாலும்.... துப்பிட்டு பகிருங்க!!

சனி, 2 நவம்பர், 2013

பாண்டியநாடு - சினிமா விமர்சனம் 


                   ரோட்ல போறவன் கன்னத்தில் ஒரு அறை விட்டா கோபப்படாம அறை இலவசமா கிடைச்சதுன்னு வாங்கிவர்ற சோதா தம்பி, வயசான அப்பா,கவெர்மென்ட் ஆபிசரா வேலை பார்க்கும் அண்ணன்  அண்ணி அம்மா கொண்ட குடும்பத்தில் அண்ணன் எதிரிகளால் கொல்லப்படு அது ஒரு விபத்துன்னு கேஸ் முடித்து வைக்கப்படுது.இதுல விரக்தியான வயசான அப்பா தன் குடும்பத்துக்கு தெரியாமஒரு பக்கம் அந்த வில்லன கொல்ல காய் நகர்த்துறார்,அது போல சோதா தம்பியும் குடும்பத்துக்கு தெரியாம வில்லன பழிவாங்க நேரம் பாத்து காத்துட்டு இருக்கார். வில்லனும் தன்ன கொல்ல சதி நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டு அந்த வயசான அப்பாவ நெருங்குறார் இறுதியில் என்ன நடந்தது ?



            அதே நான் மாகன் அல்ல வகை  அறச்ச மாவுதான் இருந்தாலும் கொஞ்சம் வித்யாசம் காட்டியிருக்காங்க வழக்கமா  ஹீரோவுக்கு கொடுக்கிற பில்டப்ப இந்தப்படத்துல வில்லனுக்கு கொடுத்திருக்காங்க. ஹீரோ ஆக்ஷன் பிளாக் இடைவேளைக்கு பிறகுதான்.இடைவேளைக்கு முன்னாடி ஒருபக்கம் ஹீரோ லவ்வுல டெவலப் ஆகிறதையும்,இன்னொரு பக்கம் வில்லன் ஒரு அல்லக்கை அவரும்  கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி சிட்டியையே தன் கைக்குள்ள வச்சிக்கிற தாதாவாகிறதையும் நல்லா காட்சி படுத்தியிருக்காங்க. அதுபோல தன் அண்ணன் செத்தப்பிறகு ஹீரோ கண் சிவக்க பஞ்ச் டயலாக் பேசிட்டு ஆக்ரோசமா கிளம்பல தன் பலம் உணர்ந்து வருஷக்கணக்கா(?) திட்டம் போடுறார்,இயல்பான ஆக்ரோஷத்தாலையே வில்லன்ட்ட இருந்து அப்பாவ காபாத்றார்,இயல்பான கோபத்தாலையே வில்லன் குரூப்ப கைமா பண்றார்.


 விஷால் ஹீரோ கம் தயாரிப்பாளர் இருந்தாலும் கடைசி வரைக்கும் எந்த பில்டப்பும் இல்லம இயல்பா வந்துட்டு போறார், சண்டைக்கோழிக்கு அப்புறம் விஷாலுக்கு இது ஒரு வெற்றிப்படம் .லக்ஷ்மி மேனன்  பாவம் அவர இன்னமும் ஒரு பிகரா இந்த உலகம் நம்புறது ஆச்சர்யம் அதுல பை பை ன்னு ஒரு கடுப்பு குத்தாட்டம் வேற. படத்துல விக்ராந்த் பத்து நிமிசமே வந்தாலும் மனசுல நிக்கிறார்,பாரதிராஜா தான் அப்பா... அப்பாஆஆ ஆ. விஷால் அண்ணனா வர்றவர் வில்லன்ட அடிவாங்கின அவமானத்துல முகத்த துடச்சிட்டு வர்ற ரியாக்ஷன் கிளாஸ்.அப்புறம் அந்த முட்டைக்கண் வில்லன் ( எதிர்நீச்சல் படத்துல மகளுக்காக உயிரையே விடுற பாசக்கார அப்பாவா நடிச்வர்ன்னு நினைக்கிறேன்)புதுசா இருக்கனுங்கிறதுக்காக போட்டிருக்காங்க போல. படத்துல சூரியும் இருக்கார்.

                                          மைனஸ்ன்னு பாத்தா இடைவேளைக்கு அப்புறம் விறுவிறுப்ப இன்னமும் கூட்டியிருக்கலாம்.விஷால் திட்டம் போடுறது,வில்லன நோட்டம் விடுறதுலையே முக்கால்வாசி நேரம் போயிடுது.வில்லன் என்னத்தான் பெரிய தாதாவா இருந்தாலும் நடுரோட்டுல மானாவாரியா எதிரிகளை சுட்டுத்தள்றது ரொம்ப ஓவர்.

                             ஆக மொத்தத்தில் இது அதகள படமென்றாலும் குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.

                                    

புதன், 16 அக்டோபர், 2013

ராஜா ராணி part 2 வராமல் தடுப்பது எப்படி? ஒரு காமெடி கலாட்டா 


              ராஜா ராணி ஒரு பிலோ ஆவரேஜ் படம் ஆனா இந்த விஜய் TV நம்ம கழுத்துல கத்தி வைக்காத குறையா பிரமோட் பண்ணி ஓடவச்சிட்டாங்க,போதாகுறைக்கு ஆரியா,நயன் கல்யாணம். ஜெய்,நஸ்ரியா லவ்வுன்னு கிளப்பிவிட்டு சூப்பர் ஹிட் ஆக்கிட்டாங்க.ஆனா படம் பாத்த நமக்குத்தான் தெரியும் அந்தப்படம் அவ்வளவு(ஜெய் போர்ஷன தவிர) ஒர்த் இல்லன்னு.சரி நடந்தது நடந்து போச்சு ஆனா இப்ப நம்ம கவலையெல்லாம் இந்தப்படம் ஹிட் ஆயிடுச்சி அதனால ராஜா ராணி பார்ட் 2 எடுக்கப்போறோம்னு இயக்குனர்  கிளம்பி வந்துடக்கூடாதுங்கிறது தான் அதுக்கு முன்னெச்செரிக்கையா  நாம என்ன தடுப்பு நடவடிக்கை எடுக்கலாம்ங்கிறது தான் இந்தப் பதிவின் நோக்கம்.



    1. கொஞ்சம் அழகான பொண்ணுங்க ரோட்ட,ரயில்வே டிராக்க பேக்கு மாதிரி கிராஸ் பண்ணாம சூதானமா கிராஸ் பண்ணுங்க.நீங்க அடிபட்டு போய் சேந்துடுவீங்க ஆனா இந்த சம்பவத்த பேப்பர்ல/மூஞ்சி புக்குல பாக்குற இயக்குனர் புதுசா ஒரு கதைய உருவாக்கி  ராஜா ராணி 2 ன்னு இட்லி சுட வாய்ப்பிருக்கு  சோ பொண்ணுங்க பொதுநலன் கருதி ரோட்ட/ரயில்வே டிராக்க கவனமா பழி,பாவத்துக்கு பயந்து கிராஸ் பண்ணுங்க.

2. இயக்குனர் ரிலாக்ஸா  இருந்தா தான் ராஜா ராணி 2 எடுக்கத்தோணும் அதனால அவர ரிலாக்ஸா இருக்க விடாம அவர நாம டார்ச்சர் பண்ணிட்டே இருக்கணும் அதாவது... என்ன எப்போதும் வாடா,போடான்னு கூப்பிட்டுட்டு இருந்த என் பொண்டாட்டி ராஜா ராணி பாத்தப்பிறகு என்ன பிரதர்ன்னு கூப்பிடுறா,கண்ணுல வேர்க்குது,மூக்குல அருவி கொட்டுது,காதுல தக்காளி சட்டினி வருதுன்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி பினாத்துறா, குடி பழக்கமே இல்லாத என்ன (????)பீர் வாங்கி கொடுத்து சாப்பிட சொல்றா  இதுக்கெல்லாம் அந்த இயக்குனர்தான் காரணம்னு அவர ஓரண்ட இழுக்கனும். முடிஞ்சா சொல்லுவதெல்லாம் உண்மை மாதிரியான நிகழ்ச்சிக்குஇயக்குனர கூப்பிட்டு வாங்கு வாங்குனு வாங்குனா  மனுசன் பார்ட் 2 ஐடியாவ கண்டிப்பா ட்ராப் பண்ணிடுவாரு.



3.புதுசா வர்ற இயக்குனர்களுக்கெல்லாம் மொத குறி மணி சார் படம் தான் ,நம்ம அண்ணாச்சியிலிருந்து தலைவா,ராஜா ராணி வரை கிட்டத்தட்ட ஒரு 100 படமாவது அவரோட பட கதை சாயல்ல வந்திருக்கும். இதுல அந்தப் படங்களை இயக்கின இயக்குனர்களை சொல்லியும் குத்தமில்லை ஏன்னா மணி சாரே அவரோட 'பகல்நிலவு' படத்த கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணித்தான் 'நாயகனா' கொடுத்தாரு,அதே நாயகன கொஞ்சம் ஆல்ட்ரேஷன் பண்ணி 'தளபதி' கொடுத்தாரு so இப்ப நா என்ன சொல்ல வர்றேன்னா மணி சாரோட பகல் நிலவுல இருந்து அலைபாயுதே(அதுக்கு அப்புறம் வந்த கடல் வரைக்கும் டப்பா யாரும் சுட மாட்டாங்க) வரைக்குமான பட சாயல்ல யாரும் படமெடுக்கக்கூடது அப்படி மீறி படமெடுத்தா பட தயாரிப்பாளருக்கு ஸ்டேட் கவர்மென்ட் 10%ம் சென்ட்ரல் கவர்மென்ட் 10%ம் ( மணி சார் ஒரு தேசிய சொத்து) வரி விதிக்கணும் அப்படி வரி விதிச்சா ராஜா ராணி 2 எடுக்குற ஆசை யாருக்குமே வறாது.

4.பொதுவா இயக்குனர்களோட ரெண்டாவது படம் சொதப்பும் (இதுல ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் விதிவிலக்கு) இந்த காரணத்த தயாரிப்பு காதுல கண்ணுல அடிக்கடி படுற மாதிரி செஞ்சி தயாரிபாளர பயமுறுத்தனா தயாரிப்பு தரப்பு கண்டிப்பா பின் வாங்கும்>

5.நய்யாண்டி தொப்புள் பிரச்சனைல நஷ்ரியாவ மூஞ்சி புத்தகம்/ட்விட்டர் வாழ் மக்களாகிய நாம் அட்டு பிகர் ,டொக்கு மூஞ்சின்னு கழுவி கழுவி ஊத்தி ஓரம் கட்டிவச்சிட்டோம்  அதுமாதிரி நயனையும் என்னமாவது எழுதி,பேசி அவங்கள நிஜமாவே கன்னியாஸ்திரி ஆக்கிட்டா வேற ஜோடி செட்டாகாதுன்னு படம் எடுக்க யோசிப்பாங்க 

6.இதையும் மீறி தயாரிப்பும்,இயக்குனரும் படமெடுக்க கிளம்பிட்டா, படமெடுத்து முடிக்கிற வரைக்கும் காத்திருக்காம அந்தக் கதை என்னோடது,அந்த இயக்குனர் வெளக்குற பேஸ்ட்டுல உப்பு இல்ல,தயாரிப்பாளர் போட்டிருக்கிற பட்டாப்பட்டி என்னுது அப்படின்னு ஏதாவது ஒரு கேஸ் அவங்க மேல போட்டுட்டா இது என்னாடா எழவு படம் ஆரம்பத்துலையே அபசகுனமான்னு அவங்க படத்த டிராப் பண்ண வாய்ப்பிருக்கு 

6.இத்தனையையும் மீறி அவங்க படத்த எடுத்துட்டா???? வேற வழி.... படத்த பாத்துட்டு இது சொட்ட அது சொட்டன்னு ஒரு ரிவ்யூ எழுதி நம்ம கடுப்ப தீத்துக்கவேண்டியது தான்.

         நாளைக்கு இதே மாதிரி ட்ராபிக் போலிஸ்ட்ட இருந்து பைன் கட்டாம தப்பிக்கிறது எப்படின்னு பாக்கலாம். பை பை....

நன்றி: எனது பதிவுகளை ஏற்றுக்கொண்ட தமிழ்மணத்திற்கு நன்றி.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

நய்யாண்டி 

                தேசிய விருது வாங்கியவர்கள் தந்திருக்கும் படம்,அண்ணன் தம்பி மூன்று பேர்களை சுற்றி நடக்கும் கதை... சரி "ஆனந்தம்'மாதிரி ஆனா காமடியான படமா  இருக்கும் என்ற எதிர்பார்ப்போடதான் படத்துக்கு போறோம் ஆனா....


                         

                                 ஹீரோ கிராமத்து திருவிழாவுக்கு வர்றார்,ஹீரோயின் ரொம்பநாள் பகையாய் இருக்கும் பாட்டியை பாக்க அதே  ஊருக்கு வருது, சரி வருஷம் 16,பூவே பூச்சூடவா ரெண்டையும் கலந்து கட்டி ஒரு கதையை சொல்லப்போறாங்கன்னு நிமிர்ந்தா... ஹீரோ மட்டும் வாழ்வே மாயம் கமல் மாதிரி ஒன்சைடா லவ்வுறார் ,வீரம்,காமெடி,ஊருக்கு நல்லதுன்னு என்னென்னமோ மொக்கை மொக்கையா செஞ்ஜி  பாப்பாவ இம்பிரஸ் பண்ணப்பாக்குறார்,இத்தன செஞ்சும் அசைஞ்சி கொடுக்காத அந்தப் பாப்பாக்கு ஹீரோ ஒரு பாட்டிக்கு உதவி செய்யிறத பாத்ததும் லவ் வந்துடுது. சரி... சில பல ராமராஜன் படம் மாதிரி இனிமே கதை நகரும் போலன்னு நாம யோசிச்சி முடிக்குறதுக்குள்ள ஹீரோ தன்னோட அப்பா அம்மாவுக்கு கூட சொல்லாம  டப்புன்னு பாப்பாவுக்கு தாலிய கட்டிடுறாரு.

                         அவசரமா தாலிகட்டியச்சி அப்புறம்.... தாலிகட்டின பொண்டாட்டிய  தன்வீட்டுக்கு முன்னாடி அனுப்பிட்டு  ஹீரோ கொஞ்சம் லேட்டா (ரெண்டுநாள்)பின்னாடி போறார் சரி... கத இனி பாண்டியராஜனின் மனைவி ரெடி மாதிரி  போகும் போலன்னு நெனச்சா ... ஹீரோவோட அப்பாட்ட தான் ஒரு அனாதைன்னு வேலைக்கு சேந்த அந்தப் பாப்பாவ  ,அதே வீட்லயே 40 & 38 வயசாகியும் கல்யானமாகாம இருக்கிற ஹீரோவோட ரெண்டு அண்ணனுங்க  தம்பிப்பொண்டாட்டின்னு தெரியாம ஒன் சைடா லவ்வுறாங்க.(காதலுக்காக உயிரையே தொறப்பாங்க ஆனா இங்கே ஒரு அண்ணன் (ஸ்ரீமான்) தன்னோட சட்ட பட்டனயே தொறக்கிறார்.)அப்படி லவ்வுற அண்ணன்கள்ட்டேருந்து பொண்டாட்டிய பாதுகாக்கிற ஒரு முயற்ச்சியில ஹீரோவுக்கும்  பாப்பாக்கும் கோக்கு மாக்கு ஆகி  பாப்பாக்கு பாப்பா உண்டாகிடுது.( அதெப்படி ஒரு கோக்கு மாக்குலேயே எல்லா தமிழ் ஹீரோயின்களும் உண்டாயிடுறாங்க)

                                      இதை கேள்விப்பட்ட ஹீரோவோட அப்பா லூசு...  அந்த கர்பத்துக்கு யார் காரணம்னு அந்த பாப்பாட்டயே கேட்டு தெரிஞ்சிக்காம ஹீரோவோட அண்ணனுங்களை துவசம் பண்ணுது அத்தோட நிக்காம அந்தப் பாப்பாவையும்  வீட்டைவிட்டு வெளியே தள்ளுது ... நமக்கு நாக்கு தள்ளுது.அப்புறம் வில்லன்  என்ட்ரி, பாப்பாவ கடத்திட்டு போற வில்லன ஹீரோ ஒரு அறுவடை முடிஞ்ச வயக்காட்டுல மடக்குறார் ... சரி 'ரன்' ,'சண்டக்கோழி' கிளைமேக்ஸ் மாதிரி சண்ட அனல் பறக்கபோகுதுன்னு நெனச்சா ரெண்டே மிதில வில்லன் சரண்டர் ஆயிடுறான்.... அடப்போங்கடா..

         தனுஷ் ABT பார்சல் சர்வீஸ் ஆஞ்சிநேயர் மாதிரி கிணத்துமேல பறக்கும் போதே (கிணத்த தாண்டுறாராம் )படத்தோட ரிசல்ட் தெரிஞ்சிடுது

                             ஒரு பாரின் லேடியால கும்பகோண குத்துவிளக்கு வியாபாரிய கண்டுபிடிச்சி 5 லட்ச ரூபாய்க்கு ஆர்டர் குடுக்க முடியுது, ஆனா ஒரு லோக்கல் வில்லனால அந்த வியாபாரிய  மூணு மாசம் தேடிதான் கண்டுபிடிக்கமுடியுதாம்  என்னமோ போடா மாதவா. 

   மனம் கவர்ந்த வசனங்கள் 

1. புரட்சித்தலைவி,தங்கத்தாரகை அம்மாவின் ஆட்சியிலே.

2. நான் தான் முகேஷ் ஹார்னே.

3. நுரையீரல் பஞ்சுபோன்று மென்மையானது .


மனம் கவர்ந்த காட்சிகள் 

1. போத்தீஸ் சாமுத்ரிகாபட்டு (திரிஷா சார்)

2. ஆரம்பம் டிரைலர் ( தல சார்)

                                                 மொத்தத்தில்....  நாங்க கரண்டு கம்பி மேலேயே கபடி விளையாடுவோம்ன்னு படத்துல ஒரு டயலாக் வரும்... நீங்க கபடி விளையாண்டது கரண்டு கம்பி மேல இல்ல.... எங்க உயிர் மேல .



    



                              

சனி, 12 அக்டோபர், 2013

       கிராவிட்டி (ஆங்கிலம் ) 

                 கதை சிம்பிள்...  நாம ஓட்டிட்டு போற வண்டி நடுவுல டேமேஜ் ஆயிட்டா கைய பெசஞ்சிட்டு நிக்காம,  எப்படி யார்ட்டயாவது லிப்ட் கேட்டு வீடு வந்து சேர்ந்துடுவோமோ அதுபோலத்தான் இந்தக் கதையும்.ஆனா இந்தக் கதை வின்வெளியில நடக்குது.

                  அஞ்சுபேரோட விண்வெளி போற ஒரு அமெரிக்க விண்கலம் ஒரு விபத்துல சிக்குறதால நாலு பேரு செத்துடுறாங்க, விண்கலமும் வெடிச்சி சிதறிடுது,தப்பிச்சி நடு வானத்துல மிதக்கிற அந்த ஒரே ஒரு பெண் மொத ரஷ்ய விண்கலத்துல ஏறி,அப்புறம் சீன விண்கலதுல ஏறி ஒரு வழியா பூமிய வந்தடையிறாங்க.



              அமெரிக்க ஷட்டில்ல விண்வெளிக்கு போன வீரர்கள் 5 பேரும் பூமிக்கு திரும்பும் மொதநாள்  பூமியிலருந்து 372 மைல் தொலைவில் அமைந்திருக்கும் மிதக்கும் விண்வெளி மையத்தில்  பழுதாகியிருக்கும் 'டெலஸ் கோப்'பை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுறாங்க. இதுல விண்வெளிக்கு முதன் முதலா போயிருக்கும் பயோ மெடிகல் படிச்ச பெண் டாக்டர் சான்ட்ரா புல்லக்கும்,அனுபவம் வாய்ந்த 'ஜார்ஜ் க்ளூனி'யும் தங்களோட  ஷட்டிலுக்கு வெளியே வந்து ரிப்பேர சரிபாத்துட்டு இருக்காங்க இந்த நேரத்துல விண்வெளி குப்பைகளின் தாக்குதலால் இவர்களின் ஷட்டில் தாக்கப்பட்டு பயனற்று போகிறது மூவர் உடனடியாக உயிரிழக்கின்றனர்,அந்த விண்வெளி மையமும் வெடித்து சிதறிவிடுகிறது.

இந்தப் பெரும் விபத்தில் உயிர் தப்பி,பேஸ் ஸ்டேசனுடன் எந்தவித தொடர்புமில்லாமல் அந்தரத்தில் மிதக்கும் சான்ட்ரா,& ஜார்ஜ்'க்கு ஒரே ஆதரவு தொலைவில் இருக்கும் ரஷ்யாவின் சோயுஸ் வின்கலாம் தான் அதைநோக்கி நகரும் இருவரில் சான்ட்ரா மட்டும் அதை அடைறார்,சீனியர் ஜார்ஜ் ஆக்சிஜன் குறைவால் 'சோயுஸ்'சைஅடைய முடியாமல் உயிர்துறக்கிறார்


ரஷ்ய விண்கலத்தை சான்ட்ரா அடைஞ்சாலும் சோகம் அங்கேயும் தொடறுது,அமெரிக்க விண்கலம் வெடித்து சிதறியதால் ஏற்படும் தொடர்விளைவால பாதிக்கப்படும் ரஷ்ய விண்கலமும் வெடித்து சிதற அதிலிருந்தும் தப்பி நிற்கதியாய் விண்வெளியில் தவிக்கும் சான்ட்ரா தட்டுத் தடுமாறி  அதே தொடர் விளைவை சந்தித்து பாதிப்படைந்து கொண்டிருக்கும்  சீன விண்கலத்தை அடைகிறார் அந்த விண்கலமாவது அவருக்கு உதவியதா? பூமிக்குவந்து ஆனந்தக்கண்ணீரோடு அவர் மண்ணுக்கு முத்தமிட்டாரா என்பதுதான் மீதிகதை.

படம் மொத்தமும் டெக்னிக்கல் பிரமாண்டம் தான், நடிப்ப பத்தி சொல்றதுக்கு இங்கே வேலையே இல்லை.படத்துல ரெண்டே ரெண்டு பேர்தான் நடிச்சிருக்காங்க அதுலயும் ஒருத்தர் பாதியிலேயே போயிடுறார்.டெக்னிக்கல் பிரமாண்டம் & 3D மூலமா மொத சீன்ல இருந்தே  நம்மாள சீட்டு நுனிக்கே கொண்டு வந்துற்றாங்க, இந்த  பிரமாண்ட அனுபவத்த வார்த்தைகளால் சொல்ல முடியாது,நாம என்னைக்குமே நாசாவுக்கோ(5000 டாலர் கொடுத்தா விண்வெளி அனுபவத்த கொடுக்கிறாங்களாமே),அல்லது விண்வெளி நிலையத்துக்கோ போய் விண்வெளி அனுபவத்த அனுபவிக்கப்போறதில்லை,ஆனா இந்தப்படத்த பாக்கிறது மூலமா கண்டிப்பா அந்த அனுபவத்த அடையலாம்.



படம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நாமும் விண்வெளியில் பயணிக்கிறோம், அவங்க கை தவற விட்டு காற்றில் மிதக்கும் போல்ட்ட நாம் பிடிக்க முயற்சி செய்கிறோம்,சிதறுண்ட வின்வெளி நிலைய சிதறல்கள் நம்மை தாக்காமல் தப்பிக்க தலையை சடாரென குனிந்து கொள்கிறோம்,சான்ட்ரா விடும் கண்ணீர்த் துளிகள் ,மிதக்கும் பேனா,ஹெல்மெட்,பூமியில் பட்டுத்தெறிக்கும் சூரியஒளி இப்படி மெய் சிலிர்த்து ரசிக்க படத்தில் நிறைய இருக்கு.

படத்த அல்போன்ஸ் இயக்கியிருக்கார், வார்னர் பிரதர்ஸ் 80 மில்லியன் டாலர்ஸ் செலவுல தயாரிச்சிருக்காங்களாம் (ஒரு மில்லியன் = 10 லட்சம் ஒரு டாலர் = 61 ரூபாய்... மொத்தம் எவ்வளவுன்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க). படம் வெளியான மொத மூணு நாள்லையே 55 மில்லியன் டாலர்ஸ் வசூலாயிடுச்சாம்.படம் இடைவேளையையும் சேர்த்து 1.30 மணி நேரமே ஓடுது. ஆயுத பூஜை லீவ் டைம்ல வந்திருக்கும் மிகச்சிறந்த படம் குழந்தைகளோட போய் ரசிக்கவேண்டிய படம்,மிஸ் பண்ணிடாதீங்க.

படத்த சத்தியம் & மாயாஜால் ரெண்டுலயும் பாத்தேன் சத்தியம் (S2- திருவான்மியூர்) கூட ஒப்பிடும் போது மாஜாஜால் ரொம்ப ரொம்ப சுமார்தான்.




















































செவ்வாய், 8 அக்டோபர், 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்(போச்சுடா நீயுமா)

விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.இந்தப்படத்த பார்த்த பலபேரு அது எப்படி ஒரு 90கிலோ உருவத்த ஒரு சின்னப்பையன் சுமக்கமுடியும்,அவ்வளவு பெரிய ஆபரேஷன் முடிஞ்ச கொஞ்ச நேரத்துல பேஸன்ட் எப்படி நடக்கமுடியும்,எப்படி ஸ்ரீ மொபைல் நம்பர் ஓநாய்க்கு கெடச்சது,இப்படி ஏகப்பட்ட லாஜிக் பாக்குறாங்க இவங்களுக்கு நான் சொல்லவருவது என்னான்னா? படத்து டைட்டல் கார்டுல முன்னணி இசை 'இளயராஜா'ன்னு மட்டும்தான் போட்டுருக்காங்க,இது ஒரு உண்மை சம்பவம் ன்னு எங்கேயும் குறிப்பிடல அதனால மிஷ்கின்ன ஒநாயாவும் ஸ்ரீ ய ஆட்டுக்குட்டியாவும் உருவகப்படுத்திட்டு ரசிங்க லாஜிக் கேள்வி கேக்க தோனாது ( பாட்டி வட சுட்ட கதயில அது எப்படி நரி காக்காட்ட பேசும்ன்னு என்னைக்காவது கேட்டிருக்கோமா)

நடுநிசியில ரோட்டுல ஒருத்தன் குண்டடிப்பட்டு விழுந்துகிடக்கிறத பாத்தா நமக்கு பயத்துல உச்சா வரும்,ஆனா மெடிக்கல் ஸ்டுடென்ட் ஸ்ரீ அந்த பேஷன்ட்ட வீட்டுக்கு தூக்கிட்டுபோயி வயத்துல உப்புமா கிண்டி பொழைக்க வைக்கிறாரு,ஆனா பாருங்க பொழச்ச அந்த ஓநாய் ஆபரேசன் நடந்த கொஞ்ச நேரத்துலயே ஆபரேசன் நடந்த டேபுள சுத்தமா தொடச்சி வச்சிட்டு யாரோட துணையும் இல்லாம ஓனா தப்பிச்சிடுது

அந்த ஒநாய ராத்திரி தோல்ல சுமந்துட்டு ஆஸ்பத்திரி,போலீஸ்பூத்துன்னு ஸ்ரீ சுத்தும்போதெல்லாம் வராத போலீஸ்,ஓநாய் தப்பிச்சபொறகு கரெக்ட்டா என்ட்ரியாகி நீதான நாங்க சுட்ட அந்த ஒநாய காப்பாத்துன அதனால நீயே அந்த ஒநாய சுட்டுக்கொண்ணுடுன்னு (தமிழ்நாட்டுல இருக்குற அத்தன போலீஸ் டிப்பார்ட்மென்ட்டும் ஒன்னுகூடி முடிவெடுத்து) ஸ்ரீ கைல துப்பாக்கிய கொடுத்துவிடுது.இதுக்கு நடுவுல அந்த ஒநாய கொல்ல ஒரு சீக்காளி கரடியும் படைகளோட கிளம்புது

அப்புறம் அந்த ஓநாய இந்த ஆட்டுக்குட்டி சுட்டுக்கொண்ணுச்சா,இல்ல அந்த ஓநாய் இந்த ஆட்டுக்குட்டிய கைமா பண்ணிச்சா இல்ல அந்தக்கரடிகிட்ட ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மாட்டிச்சாங்கிறதுதான் மீதிக்கதை

படத்துல முக்கியமா பாராட்டப்பட வேண்டிய விஷயம்,பிளாஷ்பேக். அம்மாம் பெரிய பிளாஷ்பேக்க விசுவலா சொல்லாம,விஷுவல நம்ம கற்பனைக்கு விட்டுட்டு ஆடு ஓநாய் கதையா ஒரு மூணு நிமிசத்துலயே சொல்லி முடிச்சதுக்கே மிஷ்கின் கைய புடிச்சி முத்தம் கொடுக்கலாம்.

படத்துல பாட்டு,காமெடி இல்ல(அம்புலிமாமா கதையில் எதுக்குங்க பாட்டு காமெடியெல்லாம்),ஆனா பின்னணி இசை இளயராஜா. படம்முழுக்க BGMல ராஜா மிரடியிருக்காருன்னு அவரோட ரசிகர்கள் சிலாகிக்கிறாங்க. ஆனா எனக்கு அப்படி ஒன்னும் தெரியல. ஆனாலும் மெட்ரோ ரயில்வே ஸ்டேசன்ல மிஷ்கின் ஸ்ரீ ய கடத்திட்டு (பிக்கப்)போகும் காட்சியும் அப்போது வரும் BGMம் சூப்பரோ,சூப்பர்.

படத்துல ஸ்ரீ,மிஷ்கின் நடிச்சிருக்காங்க திரில்லர் படத்துக்கு ஸ்ரீ யோட பெரிய 'முட்டைக்கண்'ஒரு பெரிய பிளஸ். 'பாரதி'ங்கிற ஒரு பெண் பிரமாதமா நடிச்சிருக்காங்க அவங்க பெண்ணா, திருநங்கையா என்கிற ஒரு டவுட் எனக்கு இருந்துச்சி. அந்த டவுட் மிஷ்கின் பதிவர் கலந்துறையாடல் நிகழ்ச்சில தெளிவாயிடுச்சி.அந்த கண்ணில்லாதா குட்டிப்பாப்பா கியூட்.அப்புறம் CPCID போலீஸ் அதிகாரியா வர்ற 'ஷாஜி'அவரோட அந்த பாடி லாங்குவேஜும் குரலும் நச்.

படத்துல ஒவ்வொரு காட்சியிலும் ஒரு குறியீடு இருக்குன்னு கலந்துறையாடல்ல மிஷ்கின் சொன்னாராம் ( நான் அவர் பேசும்போது இல்லை) படத்துல ஸ்ரீ போலீஸ் முதுகுல குத்தியிருந்த கத்திய உருவி எடுத்துட்டு மிஷ்கின்ன தேடியோடும்போது இடவேளவிடபோறாங்கங்கிற ஒரு குறியீடு மட்டும் தான் எனக்கு தெரிஞ்சது மத்த எந்த குறியீடும் எனக்கு தெரியல (நம்ம படம் பாக்குற அறிவு அம்புட்டுதான்)

முழு படமும் இரவில் நடகுதுது,இருந்தாலும் நமக்கு சலிப்புவரவில்லை,ஒளிப்பதிவு அப்படி இரவுக்காட்சிகள பிரமாதப்படுத்தியிருக்கு மெட்ரோ ரயிலில் தப்பிக்கும் காட்சி,இடுகாட்டில் பிளாஷ்பேக் சொல்லும் காட்சி,தன்னை சுடப்போகும் வில்லனை 'அய்யா' என அழைத்து விறைப்பாக சல்யூட் அடிக்கும் கான்ஸ்டபிள் அப்புறம் குண்டு பாய்ந்ததும் அய்யாவென அலறி சாயும் காட்சி,பாரதி சாகும் போது கண்களாலேயே ஸ்ரீ யிடம் பேசும் காட்சி இப்படி மனதில் நின்றக் கட்சிகளை வரிசையாக சொல்லிட்டே போகலாம்.

பதிவர் கலந்துறையாடல் நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசும்போது ஆரம்பத்துல முதுகுல சிலுவைய சுமக்குற ஸ்ரீ கிளைமேக்ஷில் சிலுவையை நெஞ்சில் சுமப்பதை கவனித்தீர்களான்னு கேட்டாராம்... கவனித்தோம்,கவனித்தோம்...நெஞ்சில் சிலுவை சுமப்பதோடு வலது கையில் சாத்தானை (துப்பாக்கி)சுமப்பதையும் கவனித்தோம்.

மொத்தத்தில் இது உலக்கப்படம்ன்னு சிலர் புகழ்றாங்க,இது உலக்கப்படமான்னு எனக்குத்தெரியாது ஆனா நல்ல தமிழ் திரில்லர் படம். ஆனந்த விகடன் இந்தப்படத்துக்கு மார்க் போடாம ரெண்டு பக்க பாராட்டு விமர்சனம் மட்டும் போடும்னு நெனச்சேன் ஆனா 51 மார்க் போட்டிருக்கு அந்த மார்க் தகும்தான்.ஆனா என்ன ராஜா ராணிக்கே 43மார்க் எனும்போது இந்த 51 மார்க் ரொம்ப கம்மிதான்.