திங்கள், 30 நவம்பர், 2015

ரஜினி சார் நீங்க

ரஜினி சார்.... நீங்க...

ரஜினி சார் நீங்க.....

ஒரு மன்னனா கடேசியா தனக்கு வந்த சொத்தையெல்லாம் உழைக்கும் வர்கத்துக்கே கொடுத்துட்டு விஜயசாந்தியோட அட்டு குடிசைல ஒன்டு குடித்தனம் போனீங்க...
ஒரு பணக்காரனா எனக்கு சொத்து சுகம் வேணாம் சொந்தம் மட்டும் போதும்னு சொத்தை உதறினீங்க...
ஒருஉழைப்பாளியா தனக்கு வந்த சொத்தையெல்லாம் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கே கொடுத்துட்டு என்ட் கார்டு போட்டீங்க....
ஒரு அண்ணாமலையா மறுபடியும் உங்களுக்கு கிடைச்ச சொத்த பிரண்டுக்கே தானம் பண்ணிட்டு மறுபடியும் சைக்கிள எடுத்துட்டு பால் யாவாரத்துக்கே போனீங்க...

ஒரு முத்துவா கேக்கவே வேணாம் அப்பனும் மகனும் சொத்தை தான தர்மம் பண்ணியே அழிச்சீங்க...
ஒரு அருணாசலமா உங்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடி பணத்த மீட்டு மறுபடியும் உங்க அப்பா அமைச்ச டிரஸ்ட்டிக்கே கொடுத்துட்டு துண்ட உதறி தோள்ல போட்டுட்டு கிளம்பிட்டீங்க....
ஒரு பாபாவா வித்தியாசமா தனக்கு கிடைச்ச மந்திரத்த பப்ளிக்குக்காகவே யூஸ் பண்ணி அழிச்சீங்க...

ஒரு சிவாஜியா NRIயா சம்பாதித்த அத்தன சொத்தையும் ஏழை எளிய மாணவர்களுக்காகவே உயிரக்கொடுத்து செலவு பண்ணீங்க....
ஒரு லிங்காவா பொது ஜனங்களுக்காக டேம் கட்டி அதால மொத்த சொத்தையும் இழந்தீங்க....

இவ்வளவு இழந்தப்பிறகும் புயல் வெள்ளம் பாதித்த மக்களுக்காக எதாவது செய்யனும்னு ஃபீல் பண்றீங்க பாருங்க யூ ஆர் வெரி கிரேட்....!

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வெல்கம் டு ஆயகார் பவன்



வெல்கம் டு ஆய்கார் பவன்...

வருமான வரித்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

ம்... சொல்லுங்க... வருமான வரி அலுவலகம் வரைக்கும் வந்திருக்கீங்க... செலன் ஃபில் அப் பண்றதுல எதுவும் சந்தேகமாக...?

இல்லைங்க...

வரி கட்டணுமா...?

இல்லைங்க...

பின்ன... வரி கட்றதுல எதுவும் சந்தேகமா...?

ஆமாங்க...

என்ன சந்தேகம் சொல்லுங்க....!?

இந்த வருமான வரி கட்டாம ஏமாத்துறவங்கள பத்தி புகார் கொடுத்தா 15 லட்சரூபா பரிசுன்னு பேப்பர்லயும் TV லயும் பாத்தேன்... அது உண்மையா..?

உண்ம தான்... ஆனா நீங்க புகார்லாம் எழுதித் தரவேண்டியதில்லை... ஆள் யார்னு சொன்னாப் போதும் அவர் வரி கட்டாம ஏய்க்கிறது உண்மைன்னா கண்டிப்பா உங்களுக்கு பணம் கிடைக்கும்... ம்... ஆள் யார்னு சொல்லுங்க...

பேரு G. செல்லத்துரைங்க
32, பிள்ளையார் கோயில் தெரு
திருவான்மியூர்ல குடும்பத்தோட தங்கி ஏஜன்சி பிசினஸ் நடத்துறாருங்க

பரவாயில்லயே இன்ஷியல் மொதக்கொண்டு சொல்றீங்களே...! சரி வரி ஏய்ப்பு செய்றார்னு உங்களுக்கு எப்படி தெரியும்...?

ஆடிட்டர் சொன்னாருங்க


ஓ... ஆடிட்டரே உங்கள்ட உளறிட்டாரோ...? சரி...சரி உங்க பேரயும் அட்ரஸயும் சொல்லுங்க பரிசு பணத்தை தரணும்ல கான்பிடன்ஷியல் தான் வெளிய யாருக்கும் சொல்ல மாட்டோம்...!

எழுதிக்கோங்க...
G.செல்லத்துரை
32 பிள்ளையார் கோயில் தெரு
திருவான்மியூர்

நா கேட்டது உங்க பேர வரி ஏய்ப்பு செஞ்சவர் பேர இல்ல...

அதுவும் நான் தான் இதுவும் நான் தான்...

என்ன...?????

ஆமாங்க தொழில்ல ஒரு லட்சம் வரைக்கும் வரி கட்றமாதிரி இருந்துச்சீங்க இந்த ஆடிட்டர் தான் எனக்கு ஒரு இருபதாயிரம் மட்டும் குடு நீ வரி கட்டாதளவுக்கு கணக்கு எழுதிக் கொடுக்கிறேன்னு எழுதிக் கொடுத்தாருங்க..

தோ இப்ப உண்மைய சொல்லிட்டேங்க என்னப் புடிச்சி நா வெச்சிருக்கிற ஒரு லட்சத்த வாங்கிக்குங்க.... அப்புறம் எனக்கு சேரவேண்டிய 15 லட்சத்தயும் கையோட கொடுத்துட்டீங்கன்னா கிளம்பிடுவேன்...

யோவ்...

பரிசு பணத்த பணமா கொடுப்பீங்களா செக்கா கொடுப்பீங்களா...?

யோவ்... யோவ்..

கேஷா கொடுத்தா ஆயிரம் ரூபா கட்டா கொடுங்க நூறு ரூபா கட்டுங்கன்ணா வெயிட் ஜாஸ்தியாயிடும் தூக்கிட்டு போக சிரமமா இருக்கும்...

@ $ & # .. £ ¥ ¿......

வியாழன், 10 செப்டம்பர், 2015

அஜித் &அரவிந்த்சாமிக்கு ஒரு கதை பார்சல்

                      அஜித் &அரவிந்த்சாமிக்கு ஒரு கதை பார்சல் 


                  அஜித் கூட வில்லன் ரோல் பண்ணத்தயார்ன்னு அரவிந்த்சாமி அறிவிச்சது தான் தாமதம்... ஒருபக்கம் வெங்கட் பிரபு அர்ஜுனை தூக்கிட்டு அதுக்கு பதிலா அரவிந்சாமிய பிட் பண்ணி பரபரான்னு மங்காத்தா 2 கதைய ரெடிபண்ணிட்டிருக்காப்ல பிரேம்ஜி மொத பார்ட்டுலயே செத்துட்டாலும் இதுலயும் மாஸ் பேய் கெட்டப்ல. வந்து நம்ம உயிர வாங்கப்போறதா தகவல்

இன்னொரு பக்கம் பேரரசு ரெண்டு தாதாங்கள பத்தின கதைய ரெடி பண்ணிட்டு சைதாப்பேட்டை ராணிப்பேட்டை குரோம்பேட்டை ஜாபர்கான்பேட்டை ராயப்பேட்டைன்னு நெறய பேட்டைங்க பேர சங்கத்துல படத்தலைப்பா ரெஜிஸ்டர் பண்ணிட்டு தீவிரமா அஜித்துக்கும் அரவிந்த்சாமிக்கும் பேதியாவுற அளவுக்கு ரைமிங்கா டயலாக் எழுத ஆரம்பிச்சிட்டாப்ள


இன்னொரு பக்கம் ஹரி .... ஹரிக்கு இவங்க ரெண்டு பேரயும் வச்சி படம் பண்ண ஆசைதான்... ஆனா ஏற்கனவே சிங்கம் 3 க்கு கமிட் ஆயிட்டதாலும் அடுத்து விக்ரம் கூட ஒரு புராஜெக்ட் இருக்கிறதாலயும் தெய்வாதீனமா ஹரிகிட்ட இப்போதைக்கு அருவா ரெடியா இல்லாததால... சாரி கதை ரெடியா இல்லாததால நாமளும் நம்ம காதும் தப்பிச்சது

இவ்வளவு ஏன் வெட்டியாயிருக்கிறதுக்கு வேஷ்ட்டி விளம்பரத்துல நடிக்கலாமேன்னு நடிச்ச பாரதிராஜாவும்.... என் இனிய தமிழ் மக்களே... இதுவரை இரண்டாவது ஹீரோக்களை சாம்பார்களாக மிக்சர் பார்ட்டிகளாக காட்டி வந்த இந்த பாரதிராஜா அஜித் அரவிந்த்சாமி இருவரையும் வைத்து இரு துருவங்களாக இணைத்து மிரட்ட படப்பிடிப்புக்காக போன வாரம் காட்ராக்ட் ஆபரேஷன் செஞ்ச கண்ணனின் ரெண்டு கண்களையும் கேமராவா எடுத்துட்டு கிளம்பத் தயார்னு அறிவிக்க...

இத்தன பேர் கதயோட கிளம்ப  நம்ம கதை இலாக்கா மட்டும் சும்மாயிருக்குமா... இதோ அவர்களுக்காக கதை ரெடிபண்ண முந்திரி பகோடா சகிதம் ஒக்காந்த ஒரு மாலைப் பொழுதின் நன்நாள்.....

தோ... பாருங்கப்பா கதைப்படி அஜித்தும் அரவிந்த்சாமியும் அண்ணன் தம்பிங்க... பட ஓப்பனிங்ல சின்ன வயசுலயே பிரிஞ்சிடுறாங்க...ம் கதைய ஆரம்பிங்க...

அண்ணே... கதப்படி அம்மா அப்பா நரைச்ச தலையோட இருக்கிற மூனுவயசு அஜித்து வலது கண் புருவத்துல பெரிய மருவோட இருக்கிற அஞ்சு வயசு அரவிந்த்சாமியும் ராத்திரியில வீட்டுக்கு வெளியில நிலா சோறு சாப்புட்டுட்டு இருக்கிறாங்க அப்ப துப்பாக்கியோட திடீர்னு அவங்க முன்னாடி குதிக்கிற ஒருத்தன் அவங்க அப்பாட்ட..... எந்த எந்த கோயில்ல எப்ப எப்ப என்ன என்ன பிரசாதம் போடுவாங்கன்னு ஒரு டேட்டா பேஸ் வெச்சிருக்கியே அத எனக்கு கொடுத்துடுங்கிறான்அதுக்கு அப்பா முடியாதுன்னு சொல்ல....

டுமீல்....

அப்பா செத்துடுறார் அந்த அதிர்சியில அம்மா அண்ணன் தம்பி எல்லாரும் அப்பா பிணத்த அனாதையா விட்டுட்டு ஆளுக்கொரு பக்கமா சிதறி ஓடி பிரிஞ்சிடுறாங்க...

ந்தா...ச்சூ பிச்சக்கார நாயே உண்ணோட கதைல டேட்டா பேஸ் மட்டும்தான் புதுசு... மத்தபடி இது யாதோங்கி பாரத் ஓப்பனிங்

சரிண்னே...கதைல புதுசா ஒரு தங்கச்சி கேரக்டர சேத்துப்போம்...

அடேய்... சுண்டக்கஞ்சி பானத் தலையா இதுவும் காளிக்கோயில் கபாலில வெச்சி வெண்ணிலா வெள்ளித்தட்டு வானிலே முல்லை மொட்டுன்னு பாடிட்டாங்க...

போங்கண்னே... முடிஞ்சா நீங்க ஒரு கதை சொல்லுங்கண்னே...

கதையாட கோமிட்டி தலையா... அஜித்தும் அரவிந்த்சாமியும் அவங்க அம்மா வயத்துல நிறைமாசமா இன்னும் பிறக்காமயே இருக்காங்க அப்ப அப்பா ஒரு சிக்கல்ல மாட்டி ஊர் விட்டே ஓடிப்போக வேண்டிய கட்டாயம் சென்ரல் ஸ்டேஷன்ல நிறை மாச அம்மாவ 3வது பிளாட்பார்மில இருக்கிற ஹவுரா மெயில்ல ஏத்திவிட்ட அப்பா பேக்கு குடிக்கிறதுக்கு தண்ணிய வாங்கிட்டு நாலாவது பிளாட்பார்ம்ல இருக்கிற தாதர்ல ஏறிடுது....

கி....கி..கி... இது திரிசூலம் கதண்னே

சார்.... அப்பா அம்மா அண்ணன் தம்பி கதப்படி அண்ணன் ஒரு அற லூசு அவங்க சின்ன வயசுலயே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்ட வந்து லூசு அண்ணன அப்பாவும் தம்பிய அம்மாவும் எடுத்துட்டு பிரிஞ்சிடுறாங்க...

தோ...நிறுத்து இது கல்யாணராமன் கதை... வேற வேற...

சார் இப்படி வெச்சுக்கலாம்... 40 வயசு அண்ணனுக்கு 10 வயசுல ஒரு தம்பீ 8 வயசுல ஒரு தம்பி அண்ணியோட கொடுமை தாங்காம தம்பிங்க ரெண்டுபேரும் வீட்ட விட்டு கிளம்பிடுறாங்க....
அட்ராசக்க அட்ராசக்க... அதெப்பிடிடா 40 வயசு அண்ணனுக்கு 10,8 வயசுல தம்பிங்க...அதுவுமில்லாம இது படிக்காதவன் ஓப்பனிங்டா....

  

சார் இப்படி வச்சிப்போம் கதப்படி சின்னவயசு அஜித் அரவிந்த்சாமி அப்பா ஒரு திருட்டு விசிடி கட வெச்சி கண்ணியமா பொழப்ப நடத்துறாரு அப்ப ரெய்டு வர்ற விஷால் எல்லா திருட்டு விசிடியையும் தூக்கிப்போட்டு ஒடைக்கிறதோட இல்லாம சின்ன வயசு ரஜினிய... ச்சே... அஜித்த புடிச்சி இவன் அப்பன் ஒரு திருட்டு விசிடி வியாபாரின்னு பச்சை குத்திடுறாப்புல...

இது தீ பட ஓப்பனிங் வேற...

சார் கதப்படி அஜித் அரவிந்த்சாமி ரெண்டுபேரும் ரெட்ட பிறவிங்க அப்பாவும் அம்மாவும் பெரிய கோடீஸ்வரங்க விதி வசத்தால ஒருத்தன திருடன் தூக்கிட்டுப் போய் வளக்குறான்

இது சட்ட ம் என் கையில்.... வேற...

சார்..... அஜித்தும் அரவிந்த்சாமியும் சின்ன வயசுலயே விதி வசத்தாலா பிரிஞ்சிடுறாங்க பின்னாடி ஒருத்தர் பிட்பாக்கெட்டாவும் இன்னொருத்தர் இன்டர்நேஷனல் ஸ்மக்ளராவும் ஆயிடுறாப்ல....

உஸ்ஸ்... அட அட அடா .. இது சவால் கதை சரி வேணாம் விடுங்க... அஜித்தும் அரவிந்த்சாமியும் சின்ன வயசு பிரண்ட்ஸ்ங்கன்னு கதைய வெச்சுப்போம் ம்... இப்ப கதைய சொல்லுங்க...

சார் அஜித் மாடு வெச்சி பால் யாவாரம் பண்ற ஏழை அரவிந்த்சாமி ஸ்டார் ஹோட்டல் நடத்துற பணக்காரர் ..

சார்... எங்க சார் ஓடுறீங்க அது வேணாம்னா இன்னொரு கதை இருக்கு.... அரவிந்த்சாமி ஒரு டிராமா பிரியர் அஜித் அவருக்கு வண்டியோட்ற சாரதி....

சார்...சார்...நில்லுங்க.. எங்க ஓடுறீங்க...இந்த கதையும் நல்லா இல்லையா...?

அட அது இல்லப்பா... பத்து மணிக்கு கடைய மூடிடுவாங்க சரக்க வாங்கி வச்சிட்டு மறுபடியும் டிஸ்கசன  ஆரம்பிப்போம்...


ஞாயிறு, 15 மார்ச், 2015

டிராபிக் ராமசாமியும் ராமஜெயம் கொலை வழக்கும்


கடேசியா மங்கள்யான் தந்த இன்பர்மேஷன் படி ராமஜெயத்த கொன்னது ஒரு தாத்தாதானாம் அதனால் தான் டிராபிக் ராமசாமிய விசாரணைக்காக பிடிச்சிவெச்சிருக்காங்களாம்.... ராமஜெயம் மாதிரி ஒரு உருவ பொம்மைய செஞ்சி நிறுத்திவெச்சி டிராபிக் கைல ஆயுதத்தை கொடுத்து டேய் உண்ண கொல்லாம விடமாட்டேன்டான்னு ஆவேசமா இந்தியன் பட ஸ்டைல்ல குத்தச் சொல்லி ஆயுதம் எவ்வளவு தூரம் பாஞ்சிருக்குன்னு கணக்கெடுக்கப் போறாங்களாம்...டிராபிக் ராமசாமிக்கு அடுத்து அன்னா ஹசாரேவையும் கூப்ட்டு விசாரிக்கிறதா உத்தேசமாம்... இந்த டெஸ்ட்ங்களால கலங்கிப் போயிருக்கிறது வயசானா நம்ம மதுரை ஆதினம் தானம் அவருக்கும் இந்தக்கொலைக்கும் எந்த சம்பந்தமில்லைன்னாலும் கன்னோட போலிஷ் வர்றது ஆகம விதிப்படி மடத்துக்கு நல்லதில்லையாம் அதனால எப்படியாவது சிவபெருமான் ஆட்சியாளர்கள் கனவுல வந்து நெத்திக்கண்ண காட்டி ஆதீனத்த விசாரிக்கக் கூடாதுன்னு உத்தரவிடுவார்ன்னு ரொம்ப நம்புறாராம்....இது தவிர 70 வயசுக்குமேல தமிழ்நாட்டு டீக் கடைகளில தீவிர அரசியல் பேசுற பெருசுகள ரகசியமா கணக்கெடுக்கிற வேலையும் தொடங்கியாச்சாம்.... # வரும் வாரம் வருவிருக்கும் ஜூனியர் விகடனுக்காக கழுகார் எழுதிவைத்த சுட்ட குறிப்புகளிலிருந்து.....

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

காக்கிச்சட்டை - சினிமா

அநியாயத்துக்கு துணை போற இன்ஸ்பெக்டர்ட்ட ஒரு கான்ஸ்டபிள் பொங்குறார் அதுக்கு அந்த இன்ஸ் இதெல்லாம் துக்கடா கேசு  தொட்டா பத்திக்கிற மாதிரி ஒரு கேச கொண்டுவான்னு அப்ப நா யார்ன்னு காட்றேன்னு அப்போதைக்கு சமாதான படுத்தி அனுப்புறார்... ஆனா நிஜமாவே அந்த கான்ஸ் தொட்டா பத்திக்கிற மாதிரியான கேச கொண்டுவர்றார்... ஆனாக்க பாவம் அந்த தொட்டா பத்திக்கிற கேசுல அந்த இன்ஸ்சும் பத்தி எறிஞ்சி போயிடுறார் அதுக்கப்புறம் அந்த கான்ஸ் என்ன பன்னார் எப்படி அந்த கேச டீல் பண்ணார் அதனால் வந்த ஆபத்துகள எப்படி சமாளிச்சர்ங்கிறது தான் கதை....



 சிவ கார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவா பிரமோஷன்  ஆகியிருக்கார் வாழ்த்துகள்... ஆனா நிறைய எடத்துல விஜய்ய இமிட்டேட் பண்றார்... மிமிகிரி பண்றதுதான் காமெடின்னா அதுக்கு மயில்சாமி இருக்கார் ஹீரோ ஆயிட்ட நீங்க பழச மறக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா எப்படி சிவா சார்... ஸ்ரீ திவ்யா கொள்ளை அழகு...சின்னவீடு கல்பனா சுகர் வந்த மாதிரியே இருக்காங்க... சொலுங்கண்ணே சொல்லுங்க அண்ணாச்சிக்கு நிறைவான ரோல்...

                    செம திர்லிங்கா இன்ட்ரவல் பிளாக் வச்சிட்டு... அதுக்கேத்த மாதிரி பின் பாதிய கொண்டுபோகாம காமா,சோமான்னு படத்த கொண்டுபோய் முடிச்சிருக்காங்க.... 

ஒருக்கா பாக்கலாம். 

புதன், 25 பிப்ரவரி, 2015

Rajan Radhamanalan: ஊழ்வலி

Rajan Radhamanalan: ஊழ்வலி: சங்கமாங்குளத்தினுள் ஒரு கிளுவை மரத்தினடியில் குட்டியப்பனும் சகாக்களும் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர். உண்மையில் சீட்டுக்கள் எல்லாம் கே...

கைப்பிள்ளை

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலர் தினம் - கார்டூன்


காதலர் தின வாழ்த்துகள் 


அனேகன் - சினிமா

வழக்கமா முன்ஜென்மம் சம்பந்தப்பட்ட  கதைகளில் ஒரு பேயோ பிசாசோ மறு ஜென்மத்துல அந்த வில்லன பழிவாங்கும்... ஆனா அனேகன்ல அப்படியில்ல டைரக்டர் தான்தன்ன நம்பி வந்த ஆடியன்ஸ்ச பலிவாங்குறார்...


                       ரெண்டு ஜென்மமா சாவுல முடியிற காதல் மூணாவது ஜென்மத்துல சுபமா முடியுது. மூணு ஜென்மத்தையும் ரெண்டுமணி நேரம் மாத்தி மாத்தி போட்டு அறச்சி,அறச்சி...நம்மள கடுப்பேத்தி கார்த்திக் தான் வில்லன்னு சொல்லி நிமிர வைக்கிற டைரக்டர் இதுவரைக்கும் கதாநாயகி கண்டதெல்லாம் முன்ஜென்மம் இல்ல  இல்யூஷன் தான்னு புதுசா முடிப்பார்ன்னு பார்த்தா... ஒரு யூஸ்வல் கிளைமேக்ஸ் வச்சி எழுந்து போங்கையான்னு நம்ம வெரட்டி விட்றார்...

படத்துல தனுஷுக்கு மூணு ரோல்,ஹீரோயினிக்கு மூனுரோல்,ஜெகனுக்கு ரெண்டு ரோல்,கார்த்திக் க்கு ரெண்டுரோல்,ஆஷிஷ் வித்யார்த்திக்கு ரெண்டுரோல்,மியூசிக் போட்டவருக்கு ஒரிஜினல்,எங்கேயோ கேட்டது மாதிரியிருக்கேன்னு ரெண்டு ரோல்..அப்புறம் இன்னொருவில்லனுக்கு ரெண்டு ரோல்... போதும் கன்ட்ரோல்,கன்ட்ரோல்...

  படத்துல பெரிய ஆறுதல் கார்த்திக்,மற்றும் டங்கா மாறி. டங்காமாறி எப்படி படம் பிடிச்சிருக்காங்கன்னு பாக்க முடியல தியேட்டர்ல பாதிக்கு மேற்பட்ட கூட்டம் ஸ்க்ரீன்ன மறச்சி ஆட்டம் போட்டதால முழுசா பாக்க முடியல...

படத்துல நிறைய ஓட்டைகள்... பல கோடிரூபாய் சொத்துக்கு ஓனரான ஹீரோயின ஏன்யா நாப்பதாயிரம் அம்பதாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு அனுப்புறன்னு நம்ம சார்பா தனுஷ் கேள்வி கேட்டதுக்கே டைரக்டர் பதில் சொல்லல  நாம கேட்டா டைரக்டர் பதில் சொல்லப் போறார்

மற்றபடி இதை மாற்றானோட கம்பேர் பண்ணும்போது அனேகன் ஒரு படி கீழேதான்.. 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

புதன், 21 ஜனவரி, 2015

ஐ ஏமாத்திட்டீங்களே ஷங்கர் சார்...

பொதுவா ஷங்கர் சார் ரெண்டுவகையான படங்களை மட்டுமே கொடுப்பார் ஒன்னு ஜென்டில்மேன் இந்தியன் முதல்வன் மாதிரியான படங்கள கொடுத்து நாட்ட திருத்துவாரு... இன்னொன்னு ஜீன்ஸ் பாய்ஸ் மாதிரி படங்கள கொடுத்துட்டு இது நாம கொடுக்கவேண்டிய படமில்லைன்னு தன்னையே திருத்திட்டு ரெகுலர் ட்ராக்குக்கு திரும்பிடுவாரு... அதுல இந்த 'ஐ' அதுக்கும் மேல... சரி வாங்க போவோம்...


     ஒரு  மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வாங்கிய ஹீரோ 4+!=5 வில்லன்களால் உருக்குலைக்கப் படுகிறார்...அதே பாணியில் ஹீரோ வில்லன்களை பழிவாங்குவதுதான் உவ்வேக்...ஒன் லைன்..

ஓப்பன் பண்ணா ஃபிளாஷ் பேக்குல இந்தப்பக்கம் கட்டுமஸ்த்தான ஹீரோ வெறும் ஜட்டியோட சுமார் அரைமணிநேரம் உலாத்துறார்... அந்தப்பக்கம் ஹீரோயின் விதவிதமான டூ பீசோட ஒரு அரைமணிநேரம்  சுத்துது... இது போதாதுன்னு வெறும் ரெண்டு இஞ்ச் உயர டவுசரோட ஒரு அரவாணியும் ஹீரோவ ஒரு காமணி நேரம் டாவு கட்டுது...பதிலுக்கு ஹீரோவும் ஊரோரம் புளியமரம் பாட்ட பாடி கும்மியடிக்கிறார்.... என்ன கருமாந்திரம்டா இது...

   படத்த பாத்து பாத்து செதுக்கும் ஷங்கர் & கோ இந்த தடவ நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ்ச மான வாரியா பண்ணிருக்காங்க....

  •      எமிய தூக்கிட்டு போன விக்கிரம துரத்திட்டு போற போலீஸ் ஒரு ரயில்வே லெவல் கிராஸ்சிங்கில் விக்ரம் யூஸ் பண்ண வண்டிய பாத்துட்டு அவன் எந்தப்பக்கம் போன ட்ரைன்ல ஏறிப் போனானோன்னு திரும்பிடுது... ஒவ்வவொரு ரயில்வே கிராசிங்லயும் நின்னு ஆளுங்க ஏத்திட்டு போற ரயில எப்ப விட்டாங்கன்னு தெர்ல...
  • சந்தானம் பேக்கரி காரங்க யூஸ் பண்ணற ட்ரை சைக்கிள மிதிச்சிட்டு ஐஸ் வித்துட்டு ஜிம் வில்லன் வீட்டுக்கு போறார்...
  • விக்ரம் ஜிம் வில்லன் மேல எண்ணைய ஊத்தி கொளுத்திவிட்டுட்டு சரியா அறுபது செகண்ட் கழிச்சி தண்ணில நனாச்ச சாக்க போட்டு அணைக்கணும் ஆனா ஸ்டாப் வாட்ச ஆப் பண்ணிட்டு அப்புறம் சாக்க தண்ணில நனைச்சி போடுறார்...
  • விக்ரம் ராம்குமார் மேல சீனித்தண்ணிய உத்தி டயலாக் பேசுறார்.. நீச்சல் குளத்து கரையிலேயே நிக்குற அந்த பேக்கு ராம்குமார் நீச்சல் குளத்துல குதிச்சி தப்பிக்காம தேனிகள் கடிய வாங்கிக்குது...பேக்கு பேக்கு...
  • உன் டிப்பன் பாக்ஸ்ல எச்சிய துப்பிட்டேன் ரகம்தான்... அரவாணி யூஸ் பண்ற கிரீம்களில்ல ஆடுக்கொழுப்பு இன்னும் பிற அயிட்டங்கள சேக்குறது...
  • 110 KVA பஸ் பார்சுண்டு விரல் பட்டாலே உடம்பு கரிக்கட்டையாகத்தான் விழும் ஹை வோல்டேஜ வில்லனை  தொடவைத்து தேவையான அளவு கருக்க விட்டு தள்ளிவிடுவது...சுத்தப்பேத்தல்...
  • டாக்டரை வீழ்த்த மருந்து மாற்றுவது.... நமக்கு பதில் சந்தானமே சொல்லிட்டார் கண்ணாமுச்சி ரே ரே.. காத குட்ட ரே ரே,பீ முட்ட தின்னுட்டு நல்ல முட்ட கொண்டுவா என்று.. 
  • இறுதியில் அந்த ஐந்து வில்லன்களையும் சந்தானம் காலய்ப்பது... படம் பார்ப்பவர்களை எரிச்சல் படத்தான் வைக்கிறது... அதிலும் குறிப்பாக மாடலிங் வில்லன் தோற்றத்தை சந்தானம் கலாய்க்கும் போது ஓடிபோய் சந்தானத்தை ஒரு அப்பு அப்பத் தோன்றுகிறது.
                      வசனம் சுபா திறமையானவர்தான்...  பட் இந்த படத்துக்கு இவர் செட்டாகல... அண்ணன் நாலு பேர போட்டுருக்கார்க்கு சந்தானம் கொடுக்கும் கவுண்டர்...கொடுமைடா சாமி இதுவே நம்ம வாத்தியார் சுஜாதா (போச்சுடா நீயுமா)இருந்திருந்தா... அயல அயலா பாட்டுக்குள்லையே வில்லன் சீண்டல்,சுரேஷ் கோபி தலையிடல்,விக்கிரம புது மாடலா ரம்குமார் அப்ரூவல்ன்னு அந்த ஒரு பாட்டுக்குள்ளேயே  எல்லா பஞ்சாயத்தையும் முடிச்சிட்டு மெயின் பழிவாங்கும் கதைக்கு நிறைய தீனி போட்டிருப்பார்... 

மியூசிக் ரஹுமான்... இந்த படத்துக்கு இவ்வளவு அமஞ்சதே அதிகம்... ஆனா ரகுமான் சார்.. ஜீன்ஸ்ல பிரஷாந்தும் ஐஷும் சந்திக்கும் போதெல்லாம் ஒரு பீஜிஎம் வருமே.... ஸ..ஸ...ரி...ஸ.. ச...ரி..க..ம... இந்த மாதிரி ஒரு பிஜிஎம் மறுபடியும் எப்ப சார் குடுப்பீங்க...

விக்ரம்... உண்மையை சொன்னா நடிக்க நல்ல வாய்ப்பிருந்தும் நடிக்க  வைக்கப்படவில்லை முகத்தை அகோரமாக்கி ஆடுறா ராமா வித்தை காட்ட வைக்கபட்டிருக்கிறார்...ஐந்து வில்லன்களை ஒருசேர சந்திக்குமிடத்தில் வசனமும் காட்சிகளும் பொறி பறந்திருக்கவேண்டாமா... என்னமோ போடா மாதவா... இந்த வகையில் கிருஷ்ணா அவிலாஞ்சி கொடுத்த AL விஜய் போற்றுதலுக்குரியவர்... விகரம் சார் இனிமே கிருஷ்ணா மாதிரியான ரோல்ல ஒரு படம் சாமி மாதிரியான ரோல்ல ஒரு படம்ன்னு வருஷத்துக்கு ரெண்டு படம் பண்ணுங்க... இந்தஉடம்ப கூட்டி குறைக்கிறதெல்லாம் வேண்டாம்...

மொத்தத்துல இந்த படத்த ஆனந்தவிகடன் எப்படி கழுவி ஊத்தப்போதுன்னு காண ஆவலாய் காத்திருக்கிறேன்....


           
           







செவ்வாய், 20 ஜனவரி, 2015

கேப்டன்ஜி.....

நிருபர் : ஒரே கூட்டணில இருந்தும் நீங்க ஏன்சென்னை வந்த பாஜக தலைவர் 'அமித்ஷா'வ பாக்க போகல...


கேப்டன்ஜி : அவங்க ஒவ்வொரு வாட்டியும் ஏமாத்துறாங்க சார்... 'சந்தான பாரதிய' கூப்டு உக்கரவச்சிட்டு இவர்தான் அமித்ஷா'ன்னு ஏமாத்துறாங்க சார்... கரகாட்டக்காரன்லருந்து அவர பாக்குறேன் எனக்கு அடையாளம் தெரியமா போயிடுமா...? போங்க.... சார் போங்க நீங்களும் அவங்க கூட சேந்துட்டு பேசவந்துட்டீங்க...!

சனி, 17 ஜனவரி, 2015

ஆம்பள


                                                    தனது முதல் படமான 'முறைமாமன்'நாய் காமெடியிலிருந்து கடேசியாக வந்த அரண்மனை பேய் காமெடிவரை அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் பிச்சி புதுசா ஒரு காக்டெய்லா ரெடி பண்ணிட்டு விஷாலுக்காக ரெண்டு சுமோவ பார்பர் ஷாப் சேர் மாதிரி சுத்தவுட்டு சில பல ஸ்கார்பியோ அம்பாசிடர் கார்களை அந்தரத்தில் பறக்க விட்டு ரெண்டரை மணி நேர படமாக கொடுத்தால் 'ஆம்பளை'ரெடி...


                                          கதைக்காக டைரக்டர் ரொம்ப சிரமப்படல... படம் ஆரம்பிச்ச அஞ்சு நிமிசத்துலையே விஷால்,ஹன்சிகா,சந்தானம் எல்லாரும் ஆஜர் ஆயிடுறாங்க... கதை மட்டும் இடைவேளைக்கு கொஞ்சம் முன்னாடி வந்து சேந்துக்குது... அதுவும் 80% கதையை சம்பந்தப்பட்ட நடிகர்களே தன் வாயாலேயே சொல்லிடுறாங்க... மீதி 20% டதான் நாம விஷுவல பாக்குறோம்...படத்துல டுவிஸ்ட்ன்னு குறிப்பிட்டு சொலனும்னா விஷால் வைபவ் தான் தன் தம்பின்னு கண்டுபிடிக்கிற டுவிஸ்ட் இருக்கே.... வாறே வாவ்...கைய கொடுங்க சுந்தர் சி.சார்... சான்சே இல்லை...

                                            படத்துல நம்மை சற்றாவது ஆறுதல் படுத்துபவர்கள்... சந்தானமும்... கனல் கண்ணனும் மட்டும் தான்... மற்றவர்கள் படுத்துகின்றனர்... கிளைமேக்ஷில் கனல் கண்ணன்  ஒரு பாட்டில் தண்ணிக்கா இம்புட்டு அக்கப்போரு என புலம்புவது செம காமெடி கலாட்டா... 


                                                             விஷால்,பிரபு,துளசி,ஹன்சிகா,ரம்யாகிருஷ்ணன்,கிரண்,ஐஸ்வர்யா,என ஏகப்பட்ட நட்சத்திரங்கள கூட்டிட்டு போன சுந்தர் சி.ஒரு தையல் காரரையும் கூட கூட்டிட்டு போயிருந்திருக்கலாம்... பாவம் ஹன்சிகா படம் ஓப்னிங்லருந்து...எண்டு கார்டு போடுற வரைக்கும் தொடைவரைக்கும் கிழிஞ்ச பாவாடைகளையே போட்டுட்டு வர்றாங்க...

                               அப்புறம் படத்த பத்தி பாசிட்டிவா சொல்லனும்னா.. படம் மூணேகால் மணி நேரம் இழுக்காம... ரெண்டேகால் மணி நேரத்துலையே முடிஞ்சுடுது... நாலு பாட்டு இருக்கு ரிலாக்ஸா கேண்டின் போய் வரலாம்...

                            மொத்தத்தில் படத்த ரசிக்கிறதும் ரசிகாததும் உங்கப்பாடு... நான் இப்ப போயிட்டு அப்பாலிக்கா வர்றேன்..















திங்கள், 12 ஜனவரி, 2015

சென்னை புத்தக கண்காட்சி

கார்ட்டூன் மதன் சாரோடது... கருத்து என்னோடது....

                                                                                                              நன்றி: மதன் சார்.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஒ.உ. போட்டூன்

செய்தி : ஸ்டாலின் முகவரி இல்லதவர் - அழகிரி





செய்தி : ஸ்டாலின் கட்சியிலிருந்து ராஜினாமா...?????