சனி, 8 பிப்ரவரி, 2014

பண்ணையாரும் பத்மினியும்

     

                  ஒரு வெள்ளந்தி மனிதருக்கு தற்காலிகமாக கிடைக்கும் பிரீமியர் பத்மினி காரும் அதைச் சுற்றி நடக்கும் உணர்வுபோராட்டங்களும் தான் கதை ஒரு பழைய பத்மினி காரை இரண்டரை மணிநேரம் உணர்வுகளால் கட்டி இழுத்திருக்கிறார்கள் படம் கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ரசிக்கமுடிகிறது,சில இடங்களில் படீரென வாய்விட்டுசிரிக்க முடிகிறது , சில இடங்களில் கலங்கவும் செய்கிறது

                      பண்ணையார் ஜெயபிரகாஷ் தான் படத்தின் ஹீரோ,தன்னிடம் அடைக்கலமாக  வந்த காரை டிரைவர் கிளீனர் வைத்து பராமரிப்பதும்,காருக்கு ஒன்று என்றதும் உடைந்து போவதும், மனைவிக்காக கார் ஓட்ட கற்றுக்கொள்ள துடிப்பதும்,நடுஜாமத்தில் கார் ஓட்டுவது பற்றிய சந்தேகத்தை கேப்பதும் என நடிப்பில் பிரமாத படுத்தியிருக்கிறார் அவருக்கு மனைவியாக வருபவரும் மர்மமாக புன்னகைத்து மறைவாக அழுது பண்ணையார் மனைவியாகவே வாழ்ந்திருக்கிறார் 

              விஜய் சேதுபதிக்கு இதில் கார் டிரைவர் வேலை எங்கே பண்ணையார் கார் ஓட்ட கத்த்துகிட்டா தனக்கு டிரைவர் வேலை போயிடுமோ என பதறி நாலு நாள் தொடர்ந்து ஓட்டுனா பத்துநாள் ரெஸ்ட் கொடுக்கணும் என்பதும் பின்னர் பண்ணையார், பண்ணையார் மனைவி இருவரின் பரஸ்பர நேசத்தை கண்டு உருகி மனசு மாறுவதும் என சில பவுன்ரிகளை விளாசுகிறார்.படத்தில் மிகப்பெரிய பிளஸ் எதிர்பார நேரத்தில் வெடிக்கும் ஒன்லைனர் காமெடிகள் தான் (இந்த நல்லதெல்லாம் உனக்கு எங்க நடக்கப்போகுது,கார ஏண்டா வைக்கோல் மேல போட்ட... ) இதன் குறும்படத்தில் டிரைவராக நடித்தவர் இதில் கிளீனராக வேஷம் கட்டியிருக்கிறார்  இவர் வரும் காட்சிகளெல்லாம் பட்டாசு... பழைய மனமகளே வா பட SSசந்திரன் காமெடியை உறுவியிருக்கிறார்கள் என்றாலும் ரசிக்கமுடிகிறது நாயகிக்கு இதில் வேலையில்லை... சினேகா இடைவேளை சர்ப்ரைஸ்.

       படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, நீலிமா காரை எடுத்துட்டு போகும்போதே... மகனப்போல வளர்த்த கார் போனா என்ன  மகனா  நீ எங்களுக்கு கிடைச்சிருக்கியே அதுபோதும்ன்னு  படத்த முத்தாய்ப்பு வசனத்தோட முடிகிற மாதிரி படத்த கொண்டுபோயிருக்கலாம்.நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள்1960 ரேஞ்சுக்கு இருப்பதை தவிர்த்திருக்கலாம்,படத்துக்கு துளியும் சம்பந்தமில்லாத மினிபஸ் காட்சிகள் எதுக்குன்னு தெரியல, அதுவும் இல்லாம அண்ணாமலை காலத்தில் ஏதுங்க மினி பஸ்.இசையை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை

           மற்றபடி படத்தில் சில அறிமுகக் குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்பதி கிடைத்ததை மறுப்பதற்கில்லை..