புதன், 31 டிசம்பர், 2014

வாங்க.. வந்து ஒரு அவார்டு வாங்கிட்டு போங்க...

ஒவ்வொரு வருஷமும் அரசும் பல TV சானல்களும் அவங்களுக்கு வேண்டியவங்களுக்கு விருது கொடுத்து மரியாத பண்ணிட்டிருக்கு அந்த வகைல நாமும் நமக்கு தெரிஞ்ச பரிச்சயப்பட்ட நபர்களுக்கு விருதுகள் வழங்கி கவனிச்சா என்னன்னு  எங்க ஒ.உ. சிந்தனைகள் கிளப்  முடிவுசெஞ்சி களமிறங்கி தயாரித்த விருதுகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...ஒ.உ.சிந்தனைகள்ன்னா என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க ண்ணுக்கும் தவாத சிந்தனைகள்ங்கிறதை தான் ஒ.உ.சிந்தனைகள்ன்னு சுருக்கி வச்சிருக்கோம் சரி வாங்க விருதுக்கு போவோம்...

1 கட் அண்ட் ரய்ட் இந்தியன் விருது 

                  அம்பது ரூபா கொடுத்து அம்பதுரூபா டெய்லி பாஸ் கொடுங்கன்னு கேட்டாலும் அம்பது ரூபா சிலரையா இருந்தா கொடு இல்லா கீழ எறங்குன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லும் கண்டக்டர்களுக்கு  கட் அண்ட் ரய்ட் இந்தியன் விருது 

2.இதால இந்தஉலகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்க விருது...

           ஓசியா கிடைச்ச டெய்லி காலண்டர்களில் தன் தேவைக்கு போக மீதியிருப்பதை இல்லாதவங்களுக்கு கொடுக்காம வருஷம் பூறா ஒரு பொக்கிஷமா அப்படியே வச்சிருந்து வருஷம் முடிஞ்சவுடனே அந்த டெய்லி கேக்க அப்படியே  விபூதி குங்குமம் மடிக்க கோயில்ல கொண்டுபோய் வைக்கிறவங்களுக்கு இதால இந்தஉலகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்க விருது...
3.சிறந்த குடிமகன் விருது

      பஸ் கன்டக்டர் தரவேண்டிய 50 பைசா பாக்கிக்காக ஒரு நாளைக்கு 50 பைசான்னா ஒரு மாசத்துக்கு 15 ரூபா ஒரு வருசத்துக்கு 180 ரூபா இப்படி எங்கள்ட்ட கொள்ளையடிக்க எத்தன பேருடா களம்பியிருக்கீங்கன்னு அந்நியன் ரேஞ்சுக்கு டயலாக் பேசிட்டு  டாஸ்மாக்ல வெறும் 50 பைசா பொருமானமுள்ள பிளாஸ்டிக் டம்ளர எந்த கேள்வியும் கேக்காம 5 ரூபா குடுத்து வாங்கி அரசு கஜானாவை வாழவைக்கும் குடிமகனுக்கு சிறந்த குடிமகன் விருது
4.சிறந்த வீணா கீழே போறத அப்படியே காசாக்கு விருது...

      மோட்டல்ல பஸ்ஸ விட்டு எறங்குற பயணிங்க  ஹைவே ஓரமாவே போய் ஒன்னுக்கு அடிச்சா அப்படி போற ஒவ்வொரு ஒண்ணுக்கும்  நமக்கு வரவேண்டிய 5 ரூபா வருமானம் போயிடுமேன்னு யோசிச்சி பயணிகள் அப்படி ஒன்னுக்கு போற இடங்களை கண்டறிந்து கையில் குச்சியோட ஆயாக்களை உக்கார வச்சி தனக்கு வரவேண்டிய வருமானம் ஹைவேயில் வீணா போகாமல் பார்த்துக்கொள்ளும் மோட்டல் கான்ட்ராக்டர்களுக்கு சிறந்த வீணா கீழே போறத அப்படியே காசாக்கு விருது... 
5.சிறந்த யார் தலையிலாவது கட்டிவிடு விருது 

     கெட்டுப்போகப்போற நிலையில இருக்கிற ஒன்னார்ரூபா பெறாத ஸ்வீட்ட சாப்பாட்டுல வச்சி ஸ்பெஷல் மீல்ஸ்ன்னு 15 ரூபா எக்ஸ்ட்ராவா வசூல் செய்யும் ஹோட்டல் முதலாளிகளுக்கு சிறந்த தொழிலதிபர் பில்கேட்ஸ் விருது.
6.சிறந்த மார்க்கெட்டிங் தாதா விருது...

     மார்க்கெட்டிங்க்கு பொய் முக்கியம் ஆனா ஜனங்களுக்கு அது பொய்யின்னு தெரிஞ்சதையே மறுபடியும் மறுபடியும் இது உண்மைன்னு அவங்கள நம்பவச்சி அவங்க தலையிலேயே அத கட்டுவதற்கு அசாத்திய திறமை வேண்டும்... அந்த வகையில் என்னை மிகவும் அசத்தியவர்கள் ட்ரெய்னில் காப்பி டீ விற்பவர்கள்தான் ஆகவே ...  ட்ரெயினில் காப்பி டீ விற்பவர்களுக்கு இந்த வருடத்தின் .சிறந்த மார்க்கெட்டிங் தாதா விருது...
7.எளவு விழலை அதால அழலை விருது..

          எங்கேயாவது தமிழ்,தமிழன்ங்கிற பேர்ல எவனாவது எமோஷனலா முடிவெடுத்து தற்கொலை பண்ணிக்கிட்டா அத கண்டிக்காம அந்த வீட்டுக்கே போய் தாரை தாரையா கண்ணீர் விட்டு அழுது அரசியல் பண்ண தலைவர்களுக்கு  இந்த வருஷம் நல்லவேளையா அதுக்கு வழியில்லாமப் போனதால  அந்த தலைவர்களுக்கு எளவு விழலை அதால அழலை விருது..
8. சாலை விதிகளை கடைபிடி காசை அள்ளு விருது...

          சிகப்பு விழுந்தவுடன பரபரன்னு இயங்கியும் கிரீன் விழுந்தவுடன டக்குன்னு ஒதுங்கியும் சிக்னலை சிறப்பாக மதிக்கும் சிக்னல் பிச்சைக்கரர்களுக்கு சாலை விதிகளை கடைபிடி காசை அள்ளு விருது..
9. மாத்தியோசி விருது...

        பெட்ரோல் விலை ஏற ஏற... அதையே  காரணம் காட்டி மீட்டருக்கு மேல காச கறந்த ஆட்டோ ட்ரைவர்கள் பெட்ரோல் விலை எறங்க எறங்க... எஞ்சின் ஆயில் வில கூடிடுச்சி,பால்விலை கூடிடிச்சி, தோணி ரிடையர் ஆயிட்டாரு,லிங்கா சரியா ஓடலன்னு... இப்படி எதுனா சப்ப காரணத்த சொல்லி மீட்டருக்கு மேல காசு வாங்குறத கைவிடாத ஆட்டோ டிரைவர்களுக்கு...  மாத்தியோசி விருது..
10.சீரியல்கள பாரு குடும்ப கவலைகளை மற விருது...

         தினமும் கிட்டத்தட்ட 18 சீரியல்கள போட்டு  இவ எவன் கூட ஓட்டினா,அவ இவனுக்கு எத்தனாவது பொண்டாட்டி,இவன்அந்த மூணாவது பொண்டாட்டியோட ஒழுங்கா குடும்பம் நடுத்துவானா அத ரெண்டாவது பொண்டாட்டி தடுப்பாளா...இதை யெல்லாம் பாத்தா மொத பொண்டாட்டி போலிசுக்கு போவாளா,நாலாவதா எவ இவனுக்கு வாழ்க்கைப்பாடுவான்னு...இப்படிசீரியல் கவலைகளை குடும்ப பெரியவர்களுக்கு கொடுத்து அவர்களின் சுய கவலைகளை மறக்கச்செய்த சானல்களுக்கு சீரியல்கள பாரு குடும்ப கவலைகளை மற விருது 
11.திடீர் ஆடிட்டர்கள் விருது...

    தனக்கு பிடிச்ச நடிகர் படம் ரிலீஸ் ஆயிட்டா,படம் போட்ட மொத நாள்லயிருந்து படத்த தூக்குற ஏழாவது நாள் வரைக்கும் இன்னைக்கு பத்துகோடி கலெக்ஷன் அமிரிக்கால ஒருலட்சம் டாலர் கலெக்ஷன் செவ்வாய் கிரகத்துல ரெண்டு கோடி மங்கல்யான் கலெக்ஷன்ன்னு fb twitter ல கலெக்ஷன் ரிபோர்ட் வாசிக்கிற ரசிகசிகாமணிகளுக்கு திடீர் ஆடிட்டர்கள் விருது.... 
12.சம்பளம்  வாங்கின சந்தோசத்த அனுபவிக்க விடமாட்டோம் விருது...

        உங்க சம்பளம் கிரிடிட் ஆயிடுச்சின்னு ஆபீஸ் SMS வந்த அடுத்த நிமிசமே இந்த மாதம் 5 ம் தேதி ஹௌசிங் லோன் EMI இருபதாயிரத்து சொச்சம் வருது மறந்துறாம பணத்த முன்கூட்டியே பேங்குல போட்டுடுங்கன்னு SMS அனுப்புற வங்கிகளுக்கு....சம்பளம்  வாங்கின சந்தோசத்த அனுபவிக்க விடமாட்டோம் விருது...

           மேற்படி விருதுகளுக்கானா பரிசுக்கோப்பைகள் காசியப்பன் பாத்திரக்கடையில் ஆர்டர் பண்ணி காசு கொடுத்து வாங்க முடியாமல் அங்கேயே இருக்கிறது சம்பந்த பட்ட விருதுகளுக்குரியவர்கள் என்னிடம் அதற்குரிய பணத்தை செலுத்திவிட்டு அந்த கடையிலேயே நேரடியாக விருதுகளை வாங்கிக்கொள்ளலாம்.... முந்துங்கள் விருதுகள் ஸ்டாக் உள்ளவரையே....
அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 




















திங்கள், 22 டிசம்பர், 2014

உயர்ந்த மனிதரும் தேசிய கட்சி தலைவரும்

       ஒரு உயர்ந்த மனிதர் ஒரு தேசிய கட்சில ஐகிய மாயிருக்காரு அப்படி ஐய்கியமான உயர்ந்த மனிதர்ட்ட அந்த கட்சி தலைவர் ரெண்டு வார்த்த பேசலாம்னு பேச்சு கொடுத்திருக்காரு..
கட்சித்தலைவர் : வணக்கம்
உயர்ந்த மனிதர் : வணக்கம்
க.தலைவர் : நீங்க ஏன் பழைய கட்சிலருந்து இங்க வந்தீங்க...
உயர்ந்த மனிதர்: அந்த கட்சில ஜனநாயகம் இல்ல ..
க.தலைவர் : அப்படியா...!
உயர்ந்த மனிதர் : ஆமா அந்த கட்சில என்ன தவிர வேற யாருக்கும் கிழக்கு சிவக்கையிலே பாட்டு தெரியல
க.தலைவர் : சரி அத விடுங்க உங்கள பத்தி சொல்லுங்க...
உயர்ந்த மனிதர் : கிழக்கு சிவக்கயிலே..
க.தலைவர் : ஓ... பாட்டாவே பாடிட்டீங்களா...?பேஷ் பேஷ் கண்டின்யு
உயர்ந்த மனிதர் : .நா கீர அறுக்கையிலே...
க.தலைவர் : ஓ.. நீங்களும் என்ன மாதிரி தவர பட்சிணியா...? நா கூட உங்க உயர்த்த பாத்து மாமிச பட்சணின்னு தப்பா கணக்கு போட்டுட்டேன்
உயர்ந்த மனிதர் :நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் அடடடா... என் மேல அவ்வளவு பாசமா...? கண்டினியூ... கண்டினியூ
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடிச்சே...
க.தலைவர் : ஓ...நோ... கொஞ்சம் சூதானமா இருந்திருக்க கூடாதா... சரி சரி உங்கள பத்தி இன்னும் சொல்லயே...!?
உயர்ந்த மனிதர்: கிழக்கு சிவக்கயிலே...
க.தலைவர் : மறுபடியுமா...?
உயர்ந்த மனிதர் : நா கீர அறுக்கையிலே...
க.தலைவர் : பேஷ் பேஷ்..
உயர்ந்த மனிதர் : நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் : ஆஹா...
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடுச்சே..
க.தலைவர் : சரி போதும் உங்கள பத்தி சொல்ல ஆரம்பிங்க...
உயர்ந்த மனிதர்: கிழக்கு சிவக்கயிலே..
க.தலைவர் :................
உயர்ந்த மனிதர் : நா கீர அறுக்கையிலே....
க.தலைவர் :.......................
உயர்ந்த மனிதர்: நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் : .............
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடுச்சே.....
:உயர்ந்த மனிதர் சார்... சார்... எங்க ஓடுறீங்க...நீங்க என்ன பத்தி திரும்ப திரும்ப கேடிங்க... நானும் என்ன பத்தி திரும்ப திரும்ப சொன்னேன் அதுக்காக ஓடுனா எப்படி....
க.தலைவர் : அய்யா சாமி...ஒத்த பாட்ட மட்டும் மனப்பாடம் பண்ணி வச்சிட்டுதான் அரசியல்ல மந்திரிவரைக்கும் வந்தீயாய்யா... என்ன உட்ரூ எட்டு பட்டி ராசா..

டிஸ்கி : இது நகைச்சுவை பதிவு மட்டுமே...

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

லிங்காவும் இணயமும்....

          லிங்காவும் இணயமும் 


         மனிதனில் கண்ணா இப்புடுச்சூடு என பறந்து பறந்து அடித்ததை ரசித்தோம் அதே படத்தில் கண்ணிவெடிகளை கேட்ச் பிடித்து அந்தவெடிகளை போட்டவர்கள் மீதே திருப்பி வீசியதை விசிலடித்து ரசித்தோம்...
               அதிசயபிறவியில் மணல் மூட்டைகளை ஒத்தை கையில் தூக்கி விசிறியடித்ததை ரசித்தோம்
                  
             ராஜாதிராஜாவில் கத்தியை சுத்திவிட்டதை ரசித்தோம் 

            முத்துவில் ஒரு மலைமுகட்டிலிருந்து மறு மலை முகட்டுக்கு சாரட்டோடு தாவியதை ரசித்தோம்...
            
             இவ்வளவு ஏன் படையப்பாவில். சுமார் இருபதுவருடங்களுக்கு பிறகும் மாடு அதே இளமையுடன் முட்ட ஓடிவருவதை விசிலடித்து ரசித்தோம்...
        
     இவ்வளவயும்  ரசித்த நம்மால் ஏன் லிங்கா இறுதிக்கட்ட காட்சிகளை ரசிக்க முடியவில்லை... ஏனென்றால் அப்போதெல்லாம் இணயம் நமக்கு பரிட்சயமில்லை... அதனால் படங்களை ரசிக்கமுடிந்தது ஆனால் நாம் இப்போது இணயத்துக்கு அடிமைப்பட்டு நம் சுய ரசிப்புத் தன்மையை இழந்துவிட்டோம் ஒரு படம் வெளிவந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே நூறு விமர்சனங்கள் இணயத்தில் வெளிவருகின்றன  அந்த விமர்சணங்களையெல்லாம் நாம் உள் வாங்கிதான் படத்துக்கு போகிறோம் அப்படி படம் பார்க்கும் போது விமர்சனங்களில் அப்படி சொன்னார்களே இப்படி சொன்னார்களே என்று நமது தனிப்பட்ட ரசிக்கும் திறனை கொன்றுவிட்டுத்தான் படத்தை பார்க்கிறோம்         

                               இணயத்தில் அடுத்தவனின் குறைகளை மட்டுமே பட்டியலிட கற்றுக்கொண்டுவிட்டோம்... படத்தின் பின்னணியில் இருக்கும் ஆறுமாத கடும் உழைப்பை மறந்துவிடுகிறோம் ரஜினி படங்களில் நாம் தூக்கிக்கொண்டாடும் பாட்ஷா அண்ணாமலை இப்போது ரிலீஸாகியிருந்தால் கண்டிப்பாக கழுவி கழுவி ஊற்றியிருப்போம்.. 'கற்றுக்கொண்ட வித்தை'யை வைத்தே ஒரு மனிதனை இரண்டுமாதங்கள் இணையத்தில் சுத்த விட்டு அடித்தவர்கள் தானே நாம்...

            இத்தனையையும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் லிங்கா பிடிக்கவில்லை... ஏனென்றால் நானும் ஒரு இணய அடிமைத்தானே...!

வியாழன், 18 டிசம்பர், 2014

சிரிங்க.... நல்லா சிரிங்க...




தொண்டன் : தலைவா எதிர் கட்சி காரங்க பாரத் மாத 'கீ' ஜே ன்னு கோஷம் போடுறாங்க...

தலைவர் : சரி விடு...நாம  திண்டுக்கல் 'பூட்டு'க்கு  ஜே ன்னு கோஷம் போடுவோம்..
--------------------------------------------------------------------------------------------------------------------


மனைவி : என்னங்க பாத்ரூம்ல கரப்பான் பூச்சி மல்லாக்க விழுந்து உதறுது பாருங்க...

கணவன் : மொத நீ பாடுறத நிறுத்து... அது தானா எழுந்திரிச்சி போயிடும்..
--------------------------------------------------------------------------------------------------------------------


டாக்டர் : தூக்கத்துல 10 கிலோமீட்டர் வரைக்கும் நடந்து போயிடுரீங்கன்னு மருந்து வாங்குனீங்களே இப்ப பரவாயில்லையா..?

பேஷன்ட் : பரவாயில்லை டாக்டர் இப்ப மயிலேஜ் கொஞ்சம் கம்மியாயிடுச்சி... இப்பல்லாம் நாலு கிலோமீட்டர் தான் நடக்குறேன்...
------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பயணி சக பயணியிடம் : இன்னைக்கு நமக்கு மீதி சில்லறை கிடைக்காதுன்னு நெனைக்கிறேன்

பயணி ௨ : ஏன்?

பயணி 1 : டிரைவர் பஸ்ஸ தூங்கிட்டே ஓட்றார்  பாருங்க...
-----------------------------------------------------------------------------------------------------------------------


பேஷன்ட் : டாக்டர் பல் வலி

டாக்டர் : எத்தன 'நாளா'?

பேஷன்ட் : இல்ல ஒன்னே ஒன்னு தான் டாக்டர்.
-------------------------------------------------------------------------------------------------------------------


உறவினர் : டாக்டர் பேஷன்ட்டுக்கு ஆப்பிள் கொடுக்கலாமா..?

டாக்டர் : தாராளமா... ஆனா சைனா மொபைல் மட்டும் வேண்டாம்.. சவுண்ட் பொல்யூசன் ஹெல்த்துக்கு ஆகாது..
-----------------------------------------------------------------------------------------------------------------


தொண்டர் TO தலைவர் : தலைவரே நம்ம கூட்டணி கட்சி தலைவர் பாண்டில நிக்கிறாராம்.

தலைவர் : நின்னுட்டு போகட்டும் நமக்குதான் அங்கே செல்வாக்கு இல்லையே...

தொண்டர் : அதில்ல தலைவரே... கைத்தாங்கலா நிக்கிறாராம் ஒரு கால்டாக்ஸி அனுப்பி பிக்கப் பண்ணிக்க சொல்றார்...
----------------------------------------------------------------------------------------------------------------






ஞாயிறு, 14 டிசம்பர், 2014

திருடன் லிங்காவோட அப்பா யாரு...?

             



              தாத்தா ராஜா லிங்கேஸ்வரன் பேரன் லிங்கா இந்த ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கவேண்டிய அப்பா லிங்கேஸ் என்னவானார்ன்னு படம் வந்ததிலிருந்து காத போட்டு கொடஞ்சிட்டே...ச்சே... மனச போட்டு கொடஞ்சிட்டே இருந்துச்சி.. சரி உண்மை என்னன்னு கண்டுபிடிச்சி இந்த உலகத்துக்கு தெரிவிப்போம்னு களத்துல எறங்கி கன்னிமரா மியூசியம் எல்லாம் போய் ஆதாரத்த தெரட்டுனா பல அதிர்ச்சிகரமான உண்மைகளெல்லாம் தெரிய வந்துச்சி.... அந்த உண்மைகள் என்னன்னா...
                    தாத்தா ராஜா லிங்கேஸ்வரனோட தாத்தா முத்து மகாராஜா... அதான் தன்ன ஏமாத்துன சொந்தத்துக்கே தன்னோட எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டு பையன் முத்துவையும் போனஸா அவங்களுக்கே கொடுத்துட்டு பரதேசியா போனாரே அவரேதான்... அந்த முத்து மகாராஜாவோட மகன் முத்துவுக்கும் மீனாவுக்கும் பொறந்தவருதான் இந்த ராஜா லிங்கேஸ்வரன்...
                      அதான் முத்து எல்லா சொத்தையும் சரத்பாபுக்கே விட்டுகொடுத்துட்டு வந்துட்டாரே அப்புறம் எப்படி ராஜா லிங்கேஸ்வரன் பெரும் பணக்கார் ஆனார்ன்னு கேக்காதீங்க... ஏன்னா அவங்களெல்லாம் ஒரே பாட்டுல பணக்காரனாகிற வம்சத்த சேந்தவங்கங்கிறது உங்களுக்கே தெரியும்... அதுபடி ராஜா லிங்கேஸ்வரன் குத்து மதிப்பா ஒரு பத்து பதினஞ்சு பாட்டுகளை பாடி பெரும் பணக்காரராயிட்டாரு.
                         அப்புறம் வழக்கப்படி ராஜா லிங்கேஸ்வரனும் ஓட்டாண்டி யாகி பரதேசம் புறப்பட்ட பிறகு பிறந்தவருதான் ஊருக்கெல்லாம் வாரி வழங்கினாலும் தனக்கு ஒரு வாரிசு இல்லையேன்னு ஏங்குன நம்ம எஜமான் வானவராயர் அய்யா... அப்படின்னா சோனாக்ஷி தானே  வானவராயருக்கு அம்மாவ வரணும் இதுல மனோரமா அம்மா வா இருக்காங்களே அது எப்படின்னு திருப்பி என்ட கேள்வி கேக்காதீங்க ஏன்னா இதப்பத்தின சரித்திர குறிப்புகள நான் எங்க தேடியும் கிடைக்கல...
                                  
                              சரி சரித்திரத்துக்கு வருவோம்... மனைவி மீனா இறந்த துக்கத்துல இருந்த நம்ம எஜமான் மனைவி சாவுக்கு காரணமானவங்கள ஒரு ஆக்ரோசமான சண்டைக்கப்புறம் திரித்திட்டு விருட்டுன்னு வேலைக்காரியும் கணீர் ஆண் குரலழகியுமான ஐஸ்வர்யாவ இழுத்துட்டு போவாரே... அப்படிப்பட்ட எஜமானுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பிறந்தவருதான் இந்த திருடன் லிங்கா..
                                   
                           சரி... அப்படின்னா இந்த பணக்காரன் உழைப்பாளி அண்ணாமலை பாட்ஷா அருணாசலம் பாண்டியன்லாம் யாருன்னு நீங்க கேட்டா அதுக்கு என்னோட பதில் உலகத்துல ஒரே மாதிரி எழுபேரு இருப்பாங்க... இதுல அருணாசலத்தோடா அப்பா மட்டும் ராஜா லிங்கேஸ்வரனோட ஒன்னு விட்ட சித்தப்பா முறைல வர்றாப்புல...
                           
 ஒரு பின்குறிப்பு : மதன் எழுதின வந்தார்கள் வென்றார்கள் புக்குல மொகலாய பேரரசுல முத்து மகாராஜவோட முன்னோர்களில் ஒருவர் தளபதியா இருந்து அலாவுதீனின் அற்புத விளக்குக்காக கமலோட மல்லு கட்டிருகார்ன்னு ஒரு மறைமுக குறிப்பா சொல்லிருக்கார்...

சனி, 5 ஜூலை, 2014

FB அடிக்ட்டரும் மன நோயாளியும்...

ஒரு ஊர்ல ஒரு FB அடிக்ட் இருந்தாராம் அவருக்கு தினமும் ஏதாவது சமூகசேவை செஞ்சி அத FB ல போட்டு லைக் வாங்கலைன்னா அவருக்கு தூக்கமே வராது. அப்படி சமூக சேவை செய்ய எதுவுமே கிடைக்கலானா நல்லாயிருக்கிற தெரு நாய் கால உடச்சி கட்டு போட்டாவது அத FBல அப்லோட் பண்ணி ஒரு நூறு லைக்காவது வாங்கிடுவாரு அப்பிடி ஒரு FB அடிக்ட் 

அப்படித்தான் மனுஷன் அன்றைய FB டார்கெட்டா ரொம்ப ரொம்ப அழுக்கான குளிச்சி ரொம்ப வருஷமான  ஒரு 30 வயசு மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்டவர வீட்டுக்கு தர தரவென இழுத்து வந்து... குளிப்பாட்டினாரு ஒரு சோப்பில்ல ரெண்டு சோப்பில்ல முழுசா நாலு ஹமாம் சோப்பு காலியாகியும் அழுக்கு போனபாடில்லை
என்னடா எப்புட்டு தேச்சாலும் அழுக்கு போகமாட்டேங்குதேன்னு கடுப்பான சேவகர் அஞ்சாவதா ஒரு செங்கல்ல கொண்டுவது அந்தப் தேய்ச்சு குளிப்பாட்ட ஆரம்பிச்சிட்டாரு அப்பிடி கடுப்புல தேய்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல அந்த மனநலம் பாதிக்கப் பட்டவரோடமுதுகுத்தோல் பெருசா உரிய ஆரம்பிச்சிடுச்சி.... கிட்டத்தட்ட ஒரு முழம் அளவுக்குன்னா பாத்துக்குங்களேன்

இதுல ஒரு பியூட்டி என்னான்னா முதுகுதோல் அவ்வளவு பிஞ்சு தொங்குனாலும் அந்தப்பைத்தியம் கத்தல கதறல... அதுசரி மனநலம் பாதிக்கப்பட்டவங்க என்னைக்கு வலியால அழுதிருக்காங்க... இருந்தாலும் பயந்துபோன FB அடிக்ட் அந்த மனநலம் பாதிக்கப்பட்டவர ஒரு ஆம்புலன்ஸ் வரவளிச்சி அள்ளிப்போட்டு ஹாஸ்பிடல் கொண்டுபோனாரு

அங்க ஹாஸ்பிடல்ல அம்பதாயிரம் அடவான்ஸ ICICI கார்ட தேச்சி கொடுத்துட்டு பேஷண்ட்ட ICU குள்ள அனுப்பி வச்சிட்டு... டென்ஷன்ல நகத்த கடிக்க ஆரம்பிச்சிட்டார்... சும்மாவா பேஷன்ட்டுக்கு எதுனா ஆச்சுன்னா கொலை கேஷாயிடுமே...

அரைமணி நேரமாச்சு...

இந்த அரைமணி நேரத்துல நம்ம FB அடிக்ட் வேண்டாத தெய்வமில்லை... லோக்கல் அய்யனாரிலிருந்து... மலேசியா NRI முருகன் வரை பேஷன்ட்டுக்கு எதுவும் ஆகக்கூடாது வேண்டிகிட்டார்..

ஒரு மணி நேரமாச்சு... நாம தமிழ் சினிமால வழக்கமா பாக்குற மாதிரி ICU கதவ தெறந்துகிட்டு நெத்தி வியர்வைய ( ICU ல எப்படியா வேர்க்கும்ன்னு லாஜிக் கொஸ்டின யெல்லாம் இங்க கேக்கக்கூடாது) தொடச்சப்படி வெளிய வந்த டாக்டர் நம்ம FB அடிக்ட்ட பாத்து நத்திங் டு வொரி ன்னார்.

நம்மாளுக்கு ஆச்சர்யம் தாங்காம... என்ன டாக்டர் நிஜமாவே நத்திங் டு வொரியா...

யெஸ்... இன்னும் பத்து நிமிஷத்துல பேஷண்ட்ட நீங்க கூட்டி போகலாம்

பத்து நிமிஷமா...? அப்ப அந்த முதுகுத் தோல்...

அது முதுகுத்தோல் இல்லை... அந்த பேஷன்ட் சின்ன வயசுல போட்ட பனியன்....

சனி, 8 பிப்ரவரி, 2014

பண்ணையாரும் பத்மினியும்

     

                  ஒரு வெள்ளந்தி மனிதருக்கு தற்காலிகமாக கிடைக்கும் பிரீமியர் பத்மினி காரும் அதைச் சுற்றி நடக்கும் உணர்வுபோராட்டங்களும் தான் கதை ஒரு பழைய பத்மினி காரை இரண்டரை மணிநேரம் உணர்வுகளால் கட்டி இழுத்திருக்கிறார்கள் படம் கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ரசிக்கமுடிகிறது,சில இடங்களில் படீரென வாய்விட்டுசிரிக்க முடிகிறது , சில இடங்களில் கலங்கவும் செய்கிறது

                      பண்ணையார் ஜெயபிரகாஷ் தான் படத்தின் ஹீரோ,தன்னிடம் அடைக்கலமாக  வந்த காரை டிரைவர் கிளீனர் வைத்து பராமரிப்பதும்,காருக்கு ஒன்று என்றதும் உடைந்து போவதும், மனைவிக்காக கார் ஓட்ட கற்றுக்கொள்ள துடிப்பதும்,நடுஜாமத்தில் கார் ஓட்டுவது பற்றிய சந்தேகத்தை கேப்பதும் என நடிப்பில் பிரமாத படுத்தியிருக்கிறார் அவருக்கு மனைவியாக வருபவரும் மர்மமாக புன்னகைத்து மறைவாக அழுது பண்ணையார் மனைவியாகவே வாழ்ந்திருக்கிறார் 

              விஜய் சேதுபதிக்கு இதில் கார் டிரைவர் வேலை எங்கே பண்ணையார் கார் ஓட்ட கத்த்துகிட்டா தனக்கு டிரைவர் வேலை போயிடுமோ என பதறி நாலு நாள் தொடர்ந்து ஓட்டுனா பத்துநாள் ரெஸ்ட் கொடுக்கணும் என்பதும் பின்னர் பண்ணையார், பண்ணையார் மனைவி இருவரின் பரஸ்பர நேசத்தை கண்டு உருகி மனசு மாறுவதும் என சில பவுன்ரிகளை விளாசுகிறார்.படத்தில் மிகப்பெரிய பிளஸ் எதிர்பார நேரத்தில் வெடிக்கும் ஒன்லைனர் காமெடிகள் தான் (இந்த நல்லதெல்லாம் உனக்கு எங்க நடக்கப்போகுது,கார ஏண்டா வைக்கோல் மேல போட்ட... ) இதன் குறும்படத்தில் டிரைவராக நடித்தவர் இதில் கிளீனராக வேஷம் கட்டியிருக்கிறார்  இவர் வரும் காட்சிகளெல்லாம் பட்டாசு... பழைய மனமகளே வா பட SSசந்திரன் காமெடியை உறுவியிருக்கிறார்கள் என்றாலும் ரசிக்கமுடிகிறது நாயகிக்கு இதில் வேலையில்லை... சினேகா இடைவேளை சர்ப்ரைஸ்.

       படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, நீலிமா காரை எடுத்துட்டு போகும்போதே... மகனப்போல வளர்த்த கார் போனா என்ன  மகனா  நீ எங்களுக்கு கிடைச்சிருக்கியே அதுபோதும்ன்னு  படத்த முத்தாய்ப்பு வசனத்தோட முடிகிற மாதிரி படத்த கொண்டுபோயிருக்கலாம்.நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள்1960 ரேஞ்சுக்கு இருப்பதை தவிர்த்திருக்கலாம்,படத்துக்கு துளியும் சம்பந்தமில்லாத மினிபஸ் காட்சிகள் எதுக்குன்னு தெரியல, அதுவும் இல்லாம அண்ணாமலை காலத்தில் ஏதுங்க மினி பஸ்.இசையை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை

           மற்றபடி படத்தில் சில அறிமுகக் குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்பதி கிடைத்ததை மறுப்பதற்கில்லை..

         

              


செவ்வாய், 14 ஜனவரி, 2014

வீரம் ஒரு பார்வை...

                      எங்கே தனக்கு கல்யாணமாயிட்டா வர்றவ தன் தம்பிங்க நாலு பேரையும் பிரிச்சிடுவாளோன்ட்டு கல்யாணமே வேணாம்னு 'வானத்தைப்போல' வாழும் தல...   தமனா சொல்ற ராமரையும் லெஷ்மனரையும் பிரிக்கக்கூடாதுங்கிற ஒத்த டயலாக்கால  தமனா மேல லவ்வுல விழுந்துடுறார் அம்மணியும் அதுபோல தல மேல லவ்வுல விழுந்துடுறாங்க  இப்ப சிக்கல் என்னன்னா தல விரோதிக்கு விருந்து போட்டு கும்முற டைப்பு, தமனா தரப்போ அன்பே சிவம் டைப்பு இந்த சிக்கல தல எப்படி சமாளிச்சி தமனாவ கைப்பிடிக்கிறார் என்பதுதான் மீதி கதை...



                படத்துல ஓப்பனிங்ல இருந்து எண்டு வரைக்கும் தல சாம்ராஜ்யம் தான் ஆனா இதை எல்லாம் ரசிக்கமுடியுதான்னா ஒரு கட்டத்துக்கு மேல இல்லன்னுதான் சொல்லணும்..அதுலயும்  தமனாவோட டூயட் கொஞ்சம் கூட ரசிக்கவே முடியல இனி வரும் அடுத்தடுத்த படங்களில் தல டை அடிக்காம டூயட் ஆட்டுனா அவர அந்த ஆண்டவனாலக்கூட காப்பாத்த முடியாது. அப்புறம் அந்த டயலாக் டெலிவரி... அவங்கள தொடனுனா என்ன்ன்ன்....ன தாண்ண்ண்...டி தொட்ட்ட்... றா இந்த இழுவை தேவையா தல. 

                படத்துல 4 தம்பிங்க எல்லாருமே 'தல'க்கு மேல வளர்ந்த சேவிங்க்கூட பண்ண நேரமில்லாத கொழு,கொழு தம்பிங்க நல்ல வேளை டைரக்டர் அவங்களுக்கு டூயட் வைக்கல... 

                 தமனா டூயட்டுக்கு யூஸ் பண்ணிருக்காங்க கூட ஒன்னு ரெண்டு சென்டிமென்ட் சீனுக்கு வந்து போறாங்க தல கூட டூயட் ஆடும் போது ஆனந்த யாழை மீட்டுகிறாள் தேவையில்லாம மனசுக்குள்ள வந்து போகுது...

                சந்தானம் ஜோக்கடிக்கிறார் ஆனா சிரிப்பு வரமாட்டேங்குது ஒரு வேளை சந்தானம் ஜோக்கடிச்சா சிரிக்கக்கூடாதுன்னு எனக்கு  மைண்ட் செட் ஆயிடிச்சோ என்னவோ...

           நாசார் 'ஆயுதம் செய்வோம்' படத்துல செஞ்சத( அகிம்சாவாதி) அப்படியே இதுலயும் செஞ்சிருக்கார்,மெயின் வில்லன் அதுல் குல்கர்னி ரன் கிளைமேக்ஸ்ல அடிவாங்குற மாதிரியே இதுலயும் வாங்குறார்.. தனுஷ் நடிச்ச படிக்காதவன் டுவிஸ்ட்ட டைரக்டர் இதுல வெச்சிருக்கர் கொடுமை என்னான்னா அதுலயும் வில்லன் குல்கர்னி இதுலயும் குல்கர்னி அதுலயும் தமனா இதுலயும் தமனா... என்னமோ போடா மாதவா...


            வீரத்துக்கு DSP மியூசிக் பெரிய மைனஸ்.இதைத்தவிர இசையை பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்லை,டைரக்டர் சிறுத்தை சிவா ஆந்திரா காரத்தை அப்படியே இங்க இறக்குமதி பண்ணியிருக்கார்... அதுலயும் அந்த குழந்தைய 8 எண்ணவிட்டு தல விரோதிகள வீழ்த்துறது... அந்த பாப்பா எந்த ஸ்கூல்ல படிக்குது... எட்டு என்ன பத்து நிமிஷம் எடுத்துக்குது

                    மொத்தத்தில் தல ரசிகர்கள்  மட்டுமே ரசிபதற்காக எடுக்கப்பட்ட ஒரு ஆந்திரா ஆவக்காய் ஸ்பெசல் இந்த 'வீரம்'. 





 

ஜில்லா ஒரு பார்வை

ஜில்லா 


                    உள்ளே வெளியே போலீஸ் கதையில் கொஞ்சம் ஆக்சன் கொஞ்சம் உளுத்துபோனா சென்டிமென்ட்ஸ் கலந்து வச்சா ஜில்லா பொங்கல்..


                      பிரமாதமா  கதை சொல்லி தயாரிப்பாளர்(அதுவும் R.B சௌத்ரி),ரெண்டு பெரிய நடிகர்களை பிடிக்க தெரிஞ்ச டைரக்டருக்கு அத பிரமாதமான படமா எடுக்கத் தெரியல கடேசியில் வழக்கம் போல ஏமாந்தது விஜயும் விஜய்ய நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்களும் மட்டும் தான். 

                       லால்... இந்தே ஸ்ஷிவேன் இல்லேன்னா ஸ்ஷக்தி இல்லன்னு மதுரை பின்னணியில் கேரள ஸ்லாங்கில் பேசுறார்... இந்த மாதிரி கேரக்டரில் ராஜ்கிரனை பார்த்துப் பார்த்து புளிச்சிபோச்சுன்னு ஒரு விமர்சனம் வந்துடக்கூடாதுன்னுதான் புதுசா லால போட்டிருக்காங்க போல  


                விஜய்... வழக்கமா அவர் கையாள்ர கதாபாத்திரம் தான்.. சிலிண்டர் வெடிப்புகளுக்கு அப்புறம் அவர் காட்டுற முகபாவனைகள்.... உஸ்ஸ்ஸ்ஸ்...ஸப்பா, ஆனாலும் மனுஷன் என்ன லேகியம் சாப்பிடுறார்ன்னு தெரியல படத்துக்கு படம் மனுஷன் மெருகேரிட்டே போறார்... 


           முட்டக் கண்ணி காஜல்.... போலீசாம்... பாவாம் விஜய் மட்டும் தனியா டூயட் பாடமுடியாதுன்னு துணைக்கு போட்டிருக்காங்க மற்றும் சூரி.. சூரியும்,விஜயும் சேர்ந்து சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சி பண்ணிருக்காங்க இந்த இடத்தில் நீங்க சிரிக்கணும்ன்னு ஒரு சப் டைட்டில் போட்டிருந்தா சிரிக்க வசதியா இருந்திருக்கும்.அதுவும் பின்பக்கம் மாவு பிசயுறது என்ன வகை காமெடியோ? இந்த படத்துல பூர்ணிமா பாக்கியராஜ அம்மாவா பிரமோட் பண்ணிருக்காங்க... சரண்யா பொன்வண்ணனுக்கு டப் பைட் கொடுக்க வாய்ப்பில்லை.

                படத்தோட ரொம்ப பெரிய பிளஸ் இமான் இசை தான் மனுஷன் பின்னிட்டார்... கண்டாங்கி கண்டாங்கி,எப்ப மாமா ட்ரீட்டு  இந்த ரெண்டு பாட்டும் மிகப்பெரிய ஹிட் 

            ஒரு வார்த்தைல சொல்றத 5 நிமிஷ பாட்டா இழுத்துட்டான்..இப்படி ஒரு வசனத்த சூரி சொல்வார் இது இயக்குனர் நேசனுக்கும் பொருந்தும் என்னதான் விஜய் நடிச்சிருந்தாலும் 3 மணி நேரம் படமென்பது ரொம்ப இழுவை... இந்த தக்கச்சி கல்யாணம் இழுவையெல்லாம் தேவையா மிஸ்டர் நேசன்.. அதுலயும் விஜய் பந்தில உக்காந்து தானே சாப்ட்றார் அதுக்கு எதுக்கு மண் சோறு சாப்பிடற அளவுக்கு சென்டிமென்ட் பிழிதல்.., எதுக்கு அந்த ஓப்பனிங் சண்டைக்காட்சி.. அப்புறம் இந்த கண்டாங்கி பாட்டுக்கு காஜலுக்கு  மாடர்ன் டிரஸ்...  என்னமாதிரி  ரசனையோ?


 மொத்தத்தில் படம் பார்க்கலாம்... ஆனால் துப்பாக்கி,கில்லிய எதிர்பார்த்து போகாதீங்க... அடுத்து விஜய் ARM கூட படம் பண்றாராம் அந்தப்படம் பிரமாதமாக வர எனது வாழ்த்துகள்.... 
 

           

         











திங்கள், 13 ஜனவரி, 2014

Rajan Leaks: விறலி

Rajan Leaks: விறலி: சாலையைக் கடந்து பேருந்து நிலையத்திற்குள் நுழையும் அவசரத்தில் மூன்றாவது முறையாக அவனுடைய எண்ணுக்கு முயற்சித்துக்கொண்டிருந்தேன்.கிட்டத்தட்ட...

கைப்பிள்ளை

வியாழன், 9 ஜனவரி, 2014

யாழ் பாடி...: வீரம் - திரைவிமர்சனம்!!!

யாழ் பாடி...: வீரம் - திரைவிமர்சனம்!!!: தங்களது 100வது தயாரிப்பாக தரமான ஒரு குடும்பத்துடன் சந்தோசமாக பார்க்க வல்ல படத்தை கொடுத்த ‘ வியஜா பிரொடக்‌ஷன் ’ வெருமனையே 50 செக்கன்களில் தக...

கைப்பிள்ளை

மனதில் உறுதி வேண்டும்.: ஜில்லா -விமர்சனம்

மனதில் உறுதி வேண்டும்.: ஜில்லா -விமர்சனம்: ப ழிவாங்கல் கதைதான்.  மதுரை ஜில்லாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல தாதா 'சிவன்' மோகன்லால். கிரானைட் குவாரியிலிருந்...

கைப்பிள்ளை

யுவகிருஷ்ணா: ஜில்லா

யுவகிருஷ்ணா: ஜில்லா: ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சா...

கைப்பிள்ளை