செவ்வாய், 8 அக்டோபர், 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்(போச்சுடா நீயுமா)

விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.இந்தப்படத்த பார்த்த பலபேரு அது எப்படி ஒரு 90கிலோ உருவத்த ஒரு சின்னப்பையன் சுமக்கமுடியும்,அவ்வளவு பெரிய ஆபரேஷன் முடிஞ்ச கொஞ்ச நேரத்துல பேஸன்ட் எப்படி நடக்கமுடியும்,எப்படி ஸ்ரீ மொபைல் நம்பர் ஓநாய்க்கு கெடச்சது,இப்படி ஏகப்பட்ட லாஜிக் பாக்குறாங்க இவங்களுக்கு நான் சொல்லவருவது என்னான்னா? படத்து டைட்டல் கார்டுல முன்னணி இசை 'இளயராஜா'ன்னு மட்டும்தான் போட்டுருக்காங்க,இது ஒரு உண்மை சம்பவம் ன்னு எங்கேயும் குறிப்பிடல அதனால மிஷ்கின்ன ஒநாயாவும் ஸ்ரீ ய ஆட்டுக்குட்டியாவும் உருவகப்படுத்திட்டு ரசிங்க லாஜிக் கேள்வி கேக்க தோனாது ( பாட்டி வட சுட்ட கதயில அது எப்படி நரி காக்காட்ட பேசும்ன்னு என்னைக்காவது கேட்டிருக்கோமா)

நடுநிசியில ரோட்டுல ஒருத்தன் குண்டடிப்பட்டு விழுந்துகிடக்கிறத பாத்தா நமக்கு பயத்துல உச்சா வரும்,ஆனா மெடிக்கல் ஸ்டுடென்ட் ஸ்ரீ அந்த பேஷன்ட்ட வீட்டுக்கு தூக்கிட்டுபோயி வயத்துல உப்புமா கிண்டி பொழைக்க வைக்கிறாரு,ஆனா பாருங்க பொழச்ச அந்த ஓநாய் ஆபரேசன் நடந்த கொஞ்ச நேரத்துலயே ஆபரேசன் நடந்த டேபுள சுத்தமா தொடச்சி வச்சிட்டு யாரோட துணையும் இல்லாம ஓனா தப்பிச்சிடுது

அந்த ஒநாய ராத்திரி தோல்ல சுமந்துட்டு ஆஸ்பத்திரி,போலீஸ்பூத்துன்னு ஸ்ரீ சுத்தும்போதெல்லாம் வராத போலீஸ்,ஓநாய் தப்பிச்சபொறகு கரெக்ட்டா என்ட்ரியாகி நீதான நாங்க சுட்ட அந்த ஒநாய காப்பாத்துன அதனால நீயே அந்த ஒநாய சுட்டுக்கொண்ணுடுன்னு (தமிழ்நாட்டுல இருக்குற அத்தன போலீஸ் டிப்பார்ட்மென்ட்டும் ஒன்னுகூடி முடிவெடுத்து) ஸ்ரீ கைல துப்பாக்கிய கொடுத்துவிடுது.இதுக்கு நடுவுல அந்த ஒநாய கொல்ல ஒரு சீக்காளி கரடியும் படைகளோட கிளம்புது

அப்புறம் அந்த ஓநாய இந்த ஆட்டுக்குட்டி சுட்டுக்கொண்ணுச்சா,இல்ல அந்த ஓநாய் இந்த ஆட்டுக்குட்டிய கைமா பண்ணிச்சா இல்ல அந்தக்கரடிகிட்ட ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மாட்டிச்சாங்கிறதுதான் மீதிக்கதை

படத்துல முக்கியமா பாராட்டப்பட வேண்டிய விஷயம்,பிளாஷ்பேக். அம்மாம் பெரிய பிளாஷ்பேக்க விசுவலா சொல்லாம,விஷுவல நம்ம கற்பனைக்கு விட்டுட்டு ஆடு ஓநாய் கதையா ஒரு மூணு நிமிசத்துலயே சொல்லி முடிச்சதுக்கே மிஷ்கின் கைய புடிச்சி முத்தம் கொடுக்கலாம்.

படத்துல பாட்டு,காமெடி இல்ல(அம்புலிமாமா கதையில் எதுக்குங்க பாட்டு காமெடியெல்லாம்),ஆனா பின்னணி இசை இளயராஜா. படம்முழுக்க BGMல ராஜா மிரடியிருக்காருன்னு அவரோட ரசிகர்கள் சிலாகிக்கிறாங்க. ஆனா எனக்கு அப்படி ஒன்னும் தெரியல. ஆனாலும் மெட்ரோ ரயில்வே ஸ்டேசன்ல மிஷ்கின் ஸ்ரீ ய கடத்திட்டு (பிக்கப்)போகும் காட்சியும் அப்போது வரும் BGMம் சூப்பரோ,சூப்பர்.

படத்துல ஸ்ரீ,மிஷ்கின் நடிச்சிருக்காங்க திரில்லர் படத்துக்கு ஸ்ரீ யோட பெரிய 'முட்டைக்கண்'ஒரு பெரிய பிளஸ். 'பாரதி'ங்கிற ஒரு பெண் பிரமாதமா நடிச்சிருக்காங்க அவங்க பெண்ணா, திருநங்கையா என்கிற ஒரு டவுட் எனக்கு இருந்துச்சி. அந்த டவுட் மிஷ்கின் பதிவர் கலந்துறையாடல் நிகழ்ச்சில தெளிவாயிடுச்சி.அந்த கண்ணில்லாதா குட்டிப்பாப்பா கியூட்.அப்புறம் CPCID போலீஸ் அதிகாரியா வர்ற 'ஷாஜி'அவரோட அந்த பாடி லாங்குவேஜும் குரலும் நச்.

படத்துல ஒவ்வொரு காட்சியிலும் ஒரு குறியீடு இருக்குன்னு கலந்துறையாடல்ல மிஷ்கின் சொன்னாராம் ( நான் அவர் பேசும்போது இல்லை) படத்துல ஸ்ரீ போலீஸ் முதுகுல குத்தியிருந்த கத்திய உருவி எடுத்துட்டு மிஷ்கின்ன தேடியோடும்போது இடவேளவிடபோறாங்கங்கிற ஒரு குறியீடு மட்டும் தான் எனக்கு தெரிஞ்சது மத்த எந்த குறியீடும் எனக்கு தெரியல (நம்ம படம் பாக்குற அறிவு அம்புட்டுதான்)

முழு படமும் இரவில் நடகுதுது,இருந்தாலும் நமக்கு சலிப்புவரவில்லை,ஒளிப்பதிவு அப்படி இரவுக்காட்சிகள பிரமாதப்படுத்தியிருக்கு மெட்ரோ ரயிலில் தப்பிக்கும் காட்சி,இடுகாட்டில் பிளாஷ்பேக் சொல்லும் காட்சி,தன்னை சுடப்போகும் வில்லனை 'அய்யா' என அழைத்து விறைப்பாக சல்யூட் அடிக்கும் கான்ஸ்டபிள் அப்புறம் குண்டு பாய்ந்ததும் அய்யாவென அலறி சாயும் காட்சி,பாரதி சாகும் போது கண்களாலேயே ஸ்ரீ யிடம் பேசும் காட்சி இப்படி மனதில் நின்றக் கட்சிகளை வரிசையாக சொல்லிட்டே போகலாம்.

பதிவர் கலந்துறையாடல் நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசும்போது ஆரம்பத்துல முதுகுல சிலுவைய சுமக்குற ஸ்ரீ கிளைமேக்ஷில் சிலுவையை நெஞ்சில் சுமப்பதை கவனித்தீர்களான்னு கேட்டாராம்... கவனித்தோம்,கவனித்தோம்...நெஞ்சில் சிலுவை சுமப்பதோடு வலது கையில் சாத்தானை (துப்பாக்கி)சுமப்பதையும் கவனித்தோம்.

மொத்தத்தில் இது உலக்கப்படம்ன்னு சிலர் புகழ்றாங்க,இது உலக்கப்படமான்னு எனக்குத்தெரியாது ஆனா நல்ல தமிழ் திரில்லர் படம். ஆனந்த விகடன் இந்தப்படத்துக்கு மார்க் போடாம ரெண்டு பக்க பாராட்டு விமர்சனம் மட்டும் போடும்னு நெனச்சேன் ஆனா 51 மார்க் போட்டிருக்கு அந்த மார்க் தகும்தான்.ஆனா என்ன ராஜா ராணிக்கே 43மார்க் எனும்போது இந்த 51 மார்க் ரொம்ப கம்மிதான்.

கருத்துகள் இல்லை: