செவ்வாய், 15 அக்டோபர், 2013

நய்யாண்டி 

                தேசிய விருது வாங்கியவர்கள் தந்திருக்கும் படம்,அண்ணன் தம்பி மூன்று பேர்களை சுற்றி நடக்கும் கதை... சரி "ஆனந்தம்'மாதிரி ஆனா காமடியான படமா  இருக்கும் என்ற எதிர்பார்ப்போடதான் படத்துக்கு போறோம் ஆனா....


                         

                                 ஹீரோ கிராமத்து திருவிழாவுக்கு வர்றார்,ஹீரோயின் ரொம்பநாள் பகையாய் இருக்கும் பாட்டியை பாக்க அதே  ஊருக்கு வருது, சரி வருஷம் 16,பூவே பூச்சூடவா ரெண்டையும் கலந்து கட்டி ஒரு கதையை சொல்லப்போறாங்கன்னு நிமிர்ந்தா... ஹீரோ மட்டும் வாழ்வே மாயம் கமல் மாதிரி ஒன்சைடா லவ்வுறார் ,வீரம்,காமெடி,ஊருக்கு நல்லதுன்னு என்னென்னமோ மொக்கை மொக்கையா செஞ்ஜி  பாப்பாவ இம்பிரஸ் பண்ணப்பாக்குறார்,இத்தன செஞ்சும் அசைஞ்சி கொடுக்காத அந்தப் பாப்பாக்கு ஹீரோ ஒரு பாட்டிக்கு உதவி செய்யிறத பாத்ததும் லவ் வந்துடுது. சரி... சில பல ராமராஜன் படம் மாதிரி இனிமே கதை நகரும் போலன்னு நாம யோசிச்சி முடிக்குறதுக்குள்ள ஹீரோ தன்னோட அப்பா அம்மாவுக்கு கூட சொல்லாம  டப்புன்னு பாப்பாவுக்கு தாலிய கட்டிடுறாரு.

                         அவசரமா தாலிகட்டியச்சி அப்புறம்.... தாலிகட்டின பொண்டாட்டிய  தன்வீட்டுக்கு முன்னாடி அனுப்பிட்டு  ஹீரோ கொஞ்சம் லேட்டா (ரெண்டுநாள்)பின்னாடி போறார் சரி... கத இனி பாண்டியராஜனின் மனைவி ரெடி மாதிரி  போகும் போலன்னு நெனச்சா ... ஹீரோவோட அப்பாட்ட தான் ஒரு அனாதைன்னு வேலைக்கு சேந்த அந்தப் பாப்பாவ  ,அதே வீட்லயே 40 & 38 வயசாகியும் கல்யானமாகாம இருக்கிற ஹீரோவோட ரெண்டு அண்ணனுங்க  தம்பிப்பொண்டாட்டின்னு தெரியாம ஒன் சைடா லவ்வுறாங்க.(காதலுக்காக உயிரையே தொறப்பாங்க ஆனா இங்கே ஒரு அண்ணன் (ஸ்ரீமான்) தன்னோட சட்ட பட்டனயே தொறக்கிறார்.)அப்படி லவ்வுற அண்ணன்கள்ட்டேருந்து பொண்டாட்டிய பாதுகாக்கிற ஒரு முயற்ச்சியில ஹீரோவுக்கும்  பாப்பாக்கும் கோக்கு மாக்கு ஆகி  பாப்பாக்கு பாப்பா உண்டாகிடுது.( அதெப்படி ஒரு கோக்கு மாக்குலேயே எல்லா தமிழ் ஹீரோயின்களும் உண்டாயிடுறாங்க)

                                      இதை கேள்விப்பட்ட ஹீரோவோட அப்பா லூசு...  அந்த கர்பத்துக்கு யார் காரணம்னு அந்த பாப்பாட்டயே கேட்டு தெரிஞ்சிக்காம ஹீரோவோட அண்ணனுங்களை துவசம் பண்ணுது அத்தோட நிக்காம அந்தப் பாப்பாவையும்  வீட்டைவிட்டு வெளியே தள்ளுது ... நமக்கு நாக்கு தள்ளுது.அப்புறம் வில்லன்  என்ட்ரி, பாப்பாவ கடத்திட்டு போற வில்லன ஹீரோ ஒரு அறுவடை முடிஞ்ச வயக்காட்டுல மடக்குறார் ... சரி 'ரன்' ,'சண்டக்கோழி' கிளைமேக்ஸ் மாதிரி சண்ட அனல் பறக்கபோகுதுன்னு நெனச்சா ரெண்டே மிதில வில்லன் சரண்டர் ஆயிடுறான்.... அடப்போங்கடா..

         தனுஷ் ABT பார்சல் சர்வீஸ் ஆஞ்சிநேயர் மாதிரி கிணத்துமேல பறக்கும் போதே (கிணத்த தாண்டுறாராம் )படத்தோட ரிசல்ட் தெரிஞ்சிடுது

                             ஒரு பாரின் லேடியால கும்பகோண குத்துவிளக்கு வியாபாரிய கண்டுபிடிச்சி 5 லட்ச ரூபாய்க்கு ஆர்டர் குடுக்க முடியுது, ஆனா ஒரு லோக்கல் வில்லனால அந்த வியாபாரிய  மூணு மாசம் தேடிதான் கண்டுபிடிக்கமுடியுதாம்  என்னமோ போடா மாதவா. 

   மனம் கவர்ந்த வசனங்கள் 

1. புரட்சித்தலைவி,தங்கத்தாரகை அம்மாவின் ஆட்சியிலே.

2. நான் தான் முகேஷ் ஹார்னே.

3. நுரையீரல் பஞ்சுபோன்று மென்மையானது .


மனம் கவர்ந்த காட்சிகள் 

1. போத்தீஸ் சாமுத்ரிகாபட்டு (திரிஷா சார்)

2. ஆரம்பம் டிரைலர் ( தல சார்)

                                                 மொத்தத்தில்....  நாங்க கரண்டு கம்பி மேலேயே கபடி விளையாடுவோம்ன்னு படத்துல ஒரு டயலாக் வரும்... நீங்க கபடி விளையாண்டது கரண்டு கம்பி மேல இல்ல.... எங்க உயிர் மேல .



    



                              

கருத்துகள் இல்லை: