வெள்ளி, 22 நவம்பர், 2013

இரண்டாம் உலகம் - விமர்சனம் 


                        இந்த பிரபஞ்சத்தில் நம் ஒருசூரியகுடும்பம் மட்டுமில்லை , இதுபோல் நிறைய சூரிய குடும்பங்கள் இருக்கின்றன,அங்கே நம்மைப்போன்ற உயிரினங்கள் இருக்கின்றன ஆனால் அங்கே காதல் இல்லை ( காதல் இல்லாமல் பின்ன எப்படி அம்புட்டு மக்கள் தொகை) அந்த காதலை இங்கேருந்து போற ஒருத்தர் அங்கே அறிமுகப்படுத்துறார் இதுதான் படத்தின் ஒன் லைன்.


 இந்த உலகத்துல தன் காதலிய இழந்த ஆரியா இரண்டாம் உலகத்துக்கு மங்கல்யான்ல.... ச்சே...பிரிமியர் பத்மினி கார்ல போய் இறங்கி அங்க காதல அறிமுகப்படுத்தி, எதிரும் புதிருமா  முட்டிட்டு திரியிற இன்னொரு ஆரியா அனுஷ்கா ஜோடிய சேத்து வைக்கிறதுதான் கதை, இதுக்கு அப்புறமும் டைரக்டர் விடுறதா இல்லை மூன்றாம் உலகத்து ஆரியா அனுஷ்காவையும் நமக்கு அறிமுகப்படுத்திட்டுத்தான் படத்த முடிக்கிறார்.... 



 இது ஆரியா காதலிக்கிறவங்க பொட்டுன்னு சாகுற சீசன் போல ராஜா ராணி நஸ்ரியா போல, இதுலயும் அனுஷ்கா பொட்டுன்னு போயிடுறாங்க (எனக்கு வந்த போன்கால் யாருதுன்னு மொபைல குனிஞ்சி பாத்து நிமிர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சி)

   ரெண்டு உலகத்துக்கதை, இதுல ரெண்டாம் உலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ரொம்ப மெனக்கெட்றுக்காங்க நிஜமாவே தமிழுக்கு இது ஒரு நல்ல முயற்சி.... ஆனாலும் என்னபண்ண  கதை சொதப்பிடுச்சே ரெண்டாம் உலகத்துக்கு போற ஆரியா  காதலர்கள  ஒன்னு சேக்குறதுக்கு என்ன பண்ணார்ன்னு யோசிச்சா ஒண்ணுமில்ல... காட்டுல இருக்கிற அனுஷ்காக்கு ரெண்டு மூணு தடவ டிப்பன்  கொண்டுபோய் கொடுக்கிறார் அம்புட்டுதான்

   மொத்தப் படமும் அனுஷ்காவ சுத்திதான் நகருது ஆனாலும் அனுஷ்காவ பத்தி சொல்றதுக்கும் ஒண்ணுமில்ல... 'ஜொள்'றதுக்கும் ஒண்ணுமில்ல நம் உலக அனுஷ்காவாவது பரவாயில்லை ,ரெண்டாம் உலக அனுஷ்காதான் பாவம் மேக்கப் இல்லாம நடிச்சிருக்கங்கன்னு நெனைக்கிறேன்... இப்படியே போனா ரிட்டையர் நடிகைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் ராமநாரயணன் சார் கூட அம்மணிய அம்மன் வேஷம் கட்ட கூப்பிட மாட்டரு.


        ஆரியா சுத்த வேஸ்ட்டு... அவர் வசனம் பேசும் போதெல்லாம் கடுப்பு கடுப்பா வருது.... பல இடங்கள்ல காதல் கொண்டேன் தனுஷ்ஷ ஞாபகபடுத்துறார், அப்புறம் அந்த இரண்டாம் உலக அம்மா (கடவுள்)கேரக்டர்... பல்லு விளக்காமலேயே நடிக்கவந்துடுச்சி போல.... வெள்ளைகாரங்க எல்லாம் தமிழ் பேசுறாங்க அப்படி அவர்கள் தமிழ்ல பேசும்போது தியேட்டரில் ஆங்காங்கே நமுட்டு சிரிப்பொலி... 

            பாடல்கள் இசை ஹாரிஸ்... கேக்ககேக்க பிடிக்குமோ என்னவோ? பின்னணி இசை அனிருத், நல்லா  இருந்தாலும்... பல இடங்களில் ஒரேமாதிரியான BGM, அதாலேயே  ஒருகட்டத்தில் லேசாக தலைவலி வர்றமாதிரி ஒரு உணர்வு. வசனம் எதுவும் மனசுல நிக்கல, செல்வா டச்ன்னு சொல்றதுக்கு ஒரு டாய்லட் சீன் இருக்கு.அப்புறம் இரண்டாம் உலகத்துக்கு வழி காட்டுற நாய் சீனையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

         இறுதியாக... எம்ஜிஆர்,நம்பியார் நடிச்ச கலையரசி படத்த அப்ப எல்லாரும் கிண்டல் பண்ணாங்களாம் ஆனா இப்ப அததான் தமிழின் முதல் விஞ்ஞான படமா குறிப்பிடுறாங்க... அதுபோல இந்தப்படமும் பின்னாளில் ஒரு வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட முதல் பேண்டஸி படம் என்று குறிப்பிடப்படலாம்.

     
     

கருத்துகள் இல்லை: