சனி, 2 நவம்பர், 2013

பாண்டியநாடு - சினிமா விமர்சனம் 


                   ரோட்ல போறவன் கன்னத்தில் ஒரு அறை விட்டா கோபப்படாம அறை இலவசமா கிடைச்சதுன்னு வாங்கிவர்ற சோதா தம்பி, வயசான அப்பா,கவெர்மென்ட் ஆபிசரா வேலை பார்க்கும் அண்ணன்  அண்ணி அம்மா கொண்ட குடும்பத்தில் அண்ணன் எதிரிகளால் கொல்லப்படு அது ஒரு விபத்துன்னு கேஸ் முடித்து வைக்கப்படுது.இதுல விரக்தியான வயசான அப்பா தன் குடும்பத்துக்கு தெரியாமஒரு பக்கம் அந்த வில்லன கொல்ல காய் நகர்த்துறார்,அது போல சோதா தம்பியும் குடும்பத்துக்கு தெரியாம வில்லன பழிவாங்க நேரம் பாத்து காத்துட்டு இருக்கார். வில்லனும் தன்ன கொல்ல சதி நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டு அந்த வயசான அப்பாவ நெருங்குறார் இறுதியில் என்ன நடந்தது ?



            அதே நான் மாகன் அல்ல வகை  அறச்ச மாவுதான் இருந்தாலும் கொஞ்சம் வித்யாசம் காட்டியிருக்காங்க வழக்கமா  ஹீரோவுக்கு கொடுக்கிற பில்டப்ப இந்தப்படத்துல வில்லனுக்கு கொடுத்திருக்காங்க. ஹீரோ ஆக்ஷன் பிளாக் இடைவேளைக்கு பிறகுதான்.இடைவேளைக்கு முன்னாடி ஒருபக்கம் ஹீரோ லவ்வுல டெவலப் ஆகிறதையும்,இன்னொரு பக்கம் வில்லன் ஒரு அல்லக்கை அவரும்  கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி சிட்டியையே தன் கைக்குள்ள வச்சிக்கிற தாதாவாகிறதையும் நல்லா காட்சி படுத்தியிருக்காங்க. அதுபோல தன் அண்ணன் செத்தப்பிறகு ஹீரோ கண் சிவக்க பஞ்ச் டயலாக் பேசிட்டு ஆக்ரோசமா கிளம்பல தன் பலம் உணர்ந்து வருஷக்கணக்கா(?) திட்டம் போடுறார்,இயல்பான ஆக்ரோஷத்தாலையே வில்லன்ட்ட இருந்து அப்பாவ காபாத்றார்,இயல்பான கோபத்தாலையே வில்லன் குரூப்ப கைமா பண்றார்.


 விஷால் ஹீரோ கம் தயாரிப்பாளர் இருந்தாலும் கடைசி வரைக்கும் எந்த பில்டப்பும் இல்லம இயல்பா வந்துட்டு போறார், சண்டைக்கோழிக்கு அப்புறம் விஷாலுக்கு இது ஒரு வெற்றிப்படம் .லக்ஷ்மி மேனன்  பாவம் அவர இன்னமும் ஒரு பிகரா இந்த உலகம் நம்புறது ஆச்சர்யம் அதுல பை பை ன்னு ஒரு கடுப்பு குத்தாட்டம் வேற. படத்துல விக்ராந்த் பத்து நிமிசமே வந்தாலும் மனசுல நிக்கிறார்,பாரதிராஜா தான் அப்பா... அப்பாஆஆ ஆ. விஷால் அண்ணனா வர்றவர் வில்லன்ட அடிவாங்கின அவமானத்துல முகத்த துடச்சிட்டு வர்ற ரியாக்ஷன் கிளாஸ்.அப்புறம் அந்த முட்டைக்கண் வில்லன் ( எதிர்நீச்சல் படத்துல மகளுக்காக உயிரையே விடுற பாசக்கார அப்பாவா நடிச்வர்ன்னு நினைக்கிறேன்)புதுசா இருக்கனுங்கிறதுக்காக போட்டிருக்காங்க போல. படத்துல சூரியும் இருக்கார்.

                                          மைனஸ்ன்னு பாத்தா இடைவேளைக்கு அப்புறம் விறுவிறுப்ப இன்னமும் கூட்டியிருக்கலாம்.விஷால் திட்டம் போடுறது,வில்லன நோட்டம் விடுறதுலையே முக்கால்வாசி நேரம் போயிடுது.வில்லன் என்னத்தான் பெரிய தாதாவா இருந்தாலும் நடுரோட்டுல மானாவாரியா எதிரிகளை சுட்டுத்தள்றது ரொம்ப ஓவர்.

                             ஆக மொத்தத்தில் இது அதகள படமென்றாலும் குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.

                                    

கருத்துகள் இல்லை: