வியாழன், 5 ஜனவரி, 2017

தோனிvs விஜய்

தோனிvs விஜய்

நிருபர் :என்னங்க சார் திடீர்னு இப்படி ஒரு ராஜினாமா முடிவ எடுத்துட்டீங்க...?
தோனி : அவசியம்னு தோனிச்சி ராஜினாமா பண்ணிட்டேன்...
நிருபர் : அப்படி என்ன சார் அவசியம்....
தோனி : நம்மை விட ஒரு திறமையான ஒரு வீரர் உருவாயிருக்கும் போது அதுக்கு தடையா நான் இருக்கக் கூடாதுல்ல... அவர் அடிச்ச அந்த ஒரு ஷாட் என் கண்ணுக்குள்ளயே நிக்குது....
நிருபர் : உங்களை விட திறமையான வீரரா... ? யாரு கோலிய சொல்றீங்களா...? அவர்தான் ஏற்கனவே உங்க தலமையின் கீழ விளையாண்டவர்தானே...?
தோனி : நான் அவர சொல்லல...
நிருபர் : பின்ன... அஸ்வின சொல்றீங்களா... அவரும் உங்க தலமைல விளையாண்டவரு தானே...
தோனி : அய்யோ நான் அவர சொல்லல...
நீருபர் : பின்ன...!?
தோனி : விஜய்...
நிருபர் : முரளி விஜய்யா...!!!!!???
தோனி : ஆக்டர் விஜய்...
நிருபர் : ஆக்டர் விஜய்....???
தோனி : ஆமா... நேத்து தான் அவரோட பைரவா டிரைலர் பாத்தேன்... அந்த ஒத்த கால தூக்கிட்டு பால அடிக்கிற அந்த ஷாட் சான்ஸே இல்ல.... இத பாத்துட்டு டீம் கோச் அணில் கும்ப்ளேவும் வாவ் இட் இஸ் எ ராஜபாளையம் ஷாட்னு கத்திட்டார்..

நிருபர் : என்னது...?ராஜபாளையம் ஷாட்டா...?

தோனி : ஆமா... நாய்ங்களெல்லாம் சுச்சா போகும் போது ஒரு தினுசா கால தூக்கிட்டு  போகுமே அதுபோல கால தூக்கிட்டு இந்த ஷாட்ட அடிக்கிறதால இந்த பேரு ஃபாரின்ல இதுக்கு அல்சேசன் ஷாட்ன்னு சொல்லுவாங்க...

நிருபர் : ஓ......!!!

தோனி : இதுக்கே வாய பொலந்துடாதீங்க... இந்த ஷாட்ட பாத்துட்டு ரவிசாஸ்திரியும் இந்த பையன் அப்படியே என்னோட சின்னவயச ஞாபகப்படுத்துறாரு விக்க கழட்டிட்டா சேவாக்க ஞாபகப் படுத்துவாருன்னு அசந்துட்டாரு...

நிருபர் : ம்...அப்புறம்...

தோனி : அப்புறம் அந்த பையன பத்தி விசாரிச்சா... பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடியே செமிபைனலுக்குகூட போகாம நேரா ஃபைனலுக்கு போயி கபடில கப்பு வாங்கி கொடுத்திருக்காருன்னு தெரிஞ்சது சரி இத்தன திறமையானவர அணியில சேக்கலாம்னா அணி ஏற்கனவே ஹவுஸ்புல்...சரி நம்ம இடத்த விட்டுக் கொடுத்துடலாம்னு முதல்காரியமா நானே என்னோட. கேப்டன் பதவிய இப்ப  ராஜினாமா பண்ணிட்டேன் நாளைக்கு ப்ளேயிங் 11லருத்தும் விலகிடுவேன்... மார்க் மை வேர்ட்ஸ்... 2019 வேர்ல்ட் கப்ல அந்த யங் பாய்தான் பிளேயர் ஆப்தி மேட்ச் பிளேயர் ஆப் தி சீரிஸ் எல்லாமே... 
நிருபர் : சரி அப்படிப்பட்ட திறமையானவருக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க...?

தோனி : தம்பி விஜய் பிளேயிங் 11க்கு நீ வரலாம் வா... வரலாம் வா...

வியாழன், 17 நவம்பர், 2016

#இன்றய ATM ராசிபலன்கள்

கைப்பிள்ளை
#மேஷ ராசி நேயர்களே... உங்களுக்கு ஏற்கனவே அஷ்டமத்துல சனி,எட்டுல குரு தொட்ட காரியம் எதுவும் வழக்கம் போல விளங்காது... ATM லைன்ல ரெண்டாவது ஆளா நின்னாலும் இருநூறாவது ஆளா நின்னாலும் உங்க டேர்ம் வரும்போது மெஷின்ல பணம் இல்லாம போயிடும் இன்றய உங்கள் அதிர்ஷ்ட எண் 500 மளிகைக்கடையிலிருந்து டீக்கடை வரை இந்த செல்லாத ஒத்த ஐநூறு ரூபாய காட்டியே இந்த வருஷத்த ஓட்டிடுவீங்க... ஆகமொத்தம் இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாள்.
#ரிஷப ராசி நேயர்களே இந்த நாள் உங்களுக்கு பொன்னான நாள்... நீங்க கடந்த ஒருவாரமா தேடிட்டிருந்த என்னைக்கோ ஓபன் பண்ணி மறந்து போன பேங்க் அக்கௌண்ட் பாஸ்புக் இன்னைக்கு கிடைச்சி மத்த இந்திய குடிமகன்கள் மாதிரி நீங்களும் இன்னைக்கு பேங்க் Q'ல போய் நிப்பீங்க ஆனா பாருங்க உங்க தலையெழுத்து நல்லா இருந்தாலும் கையெழுத்து நல்லா இல்லாததால(மறந்து போனதால)பேங்க்ல அக்கௌண்ட் ஓப்பனிங்கப்ப போட்ட பாழாப்போன அந்த இருநூறு ரூபாய எடுக்க முடியாமயே திரும்பிடுவீங்க...
#மிதுன ராசிநேயர்களே இன்று உங்களுக்கு மாலை 5.30 வரை சந்திராஷ்டமம்... அதாவது உங்களுக்கு வாயில் வாஸ்த்து சரியில்ல... பேங்க் Q'ல நிக்கும் போது உங்களுக்கு முன்னாடி நிக்கிறவன் மோடிய புகழ்ந்து பேசுவான் பின்னாடி நிக்கிறவன் திட்டிப் பேசுவான் ரெண்டுக்கும் மையமா தலைய ஆட்டி வைங்க கருத்து சொல்றேன்னு வாயில வெத்தல பாக்கு போட்டுக்காதீங்க...
#கடகம் ATM செக்யூரிட்டி மாதிரியான உயர்பதவிகள் வகிக்கும் யோகம் கொண்ட கடக ராசி நேயர்களே இன்றைக்கும் உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் உம் பொண்டாட்டி யாருக்கூடவோ ஓடிட்டான்னு வந்து சொன்னாக்கூட அதெல்லாம் எனக்கு தெரியாது போய் லைன்லு நில்லுன்னு டென்சனா டெம்பிளேட் பதில சொல்லுவீங்க... இருந்தாலும் லைன்ல நிக்கிற எதுனா ஒரு வசூல்ராஜா கட்டிபிடி வைத்தியம் பண்ணி உங்கள கூல் பண்ற வாய்ப்பு இருக்கு...
#சிம்மம் கம்பீரத்துக்கும் ஜபர்தஸ்த்துக்கும் பேர் போன சிம்ம ராசி நேயர்களே இன்று நீங்க வெளிய கிளம்பும் போது மதிப்பு மிக்க சில்லறை பணமெல்லாம் பாக்கெட்டுல இருக்கான்னு செக் பண்ணிட்டு கிளம்புங்க இல்லைன்னா டீக்கடைல டீயும் பண்ணும் சாப்டுட்டு 500 நோட்டுதான் இருக்குன்னு வழிய நேரும்... மற்றபடி இன்னைக்கும் வழக்கம்போல கால்கடுக்க ATM ல நின்னு மினி ஸ்டேட்மெண்ட் எடுத்துட்டு வருவீங்க....
#கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு யோகமான நாள் உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ATM எல்லாம் கூட்டமில்லாம காலியா இருக்கும் ஆனா கொடுமையா இன்னைக்குப் பாத்து உங்க அக்கௌண்ட்ல பணமிருக்காது... இந்த அவல நிலை தீரனும்னா அதுக்கு இருக்கிற ஒரே பரிகாரம் உங்க அக்கௌண்ட்ல பணத்த போட்டு வச்சிக்கிறதுதான்...
#துலாம் எதையும் சீர்தூக்கி ஆராய்ந்து தீர்ப்பு சொல்லும் துலாம் ராசி நேயர்களே... இந்த பேங்க் கார்டு எடுத்துட்டு போலாமா இல்ல அந்த பேங்க் கார்டு எடுத்துட்டு போலாமான்னு நீங்க ஆராய்ஞ்சிட்டு இருக்கும் போது வீட்டம்மா ரேஷன் கார்ட எடுத்துட்டு போய் சக்கரை வாங்கிட்டு வாங்கன்னு வெரட்டுவாங்க அந்த கடமைய செஞ்சி முடிச்சிட்டு கடேசில இங்கி பிங்கி பாங்கி போட்டு செலக்ட் பண்ண கார்ட எடுத்துட்டுப் போயி ATM ல நின்னு ஆட்சியாளர்கள திட்டுற கடமைய இன்று செவ்வனே ஆத்துவீங்க...
#விருச்சிக ராசி நேயர்களே... உங்களுக்கு விசுவாசமான படை எப்போதுமே உண்டு அதிலும் நீங்கள் கொடுக்கும் காசோலைகள் அனைத்துமே விசுவாசத்துக்கு பேர் போனவை ஒரு முறையாவது வழக்கம்போல அய்யா என உங்களை ரிட்டனாக வந்து பாத்து விட்டுபோகும்... மற்றபடி வேலை பளுவிலிருந்த பேங்க் மேனேஜர் இன்று முதல் செக் ரிட்டன்களுக்காக மறுபடியும் திட்ட ஆரம்பிக்கும் உன்னதமான நாள் இந்நாள்...
#தனுசு ராசி நேயர்களே இந்நாள் உங்களுக்கு சுமாரான நாள்... வங்கி நீண்ட வரிசையில் உங்களுக்கு முன்னால் பத்தாவதாக இருக்கும் ஆள் பான் பராக் போட்டு துப்பினாலும் பத்து நபர்களையும் கடந்து உங்கள் மேல் மட்டுமே சாரல் தெளிக்கும் வரிசையில் முன்னே பின்னே இருப்பவர்களால் உங்கள் கால்கள் மானாவாரியாக மிதிப்பட வாய்ப்புகள் அதிகம் ஆகவே இன்று ATM மற்றும் வங்கிகளுக்கு போகாமல் தவிர்ப்பது நல்லது...
#மகர ராசி நேயர்களே... இன்று உங்களுக்கு நான் என்னத்தை சொல்வது... சுறுக்கமாக சொன்னால் ஜான் ஏறினால் முழம் சறுக்குவீர்கள்.... ATMல் 4000 கேட்டால் ஊஹூம் 2000 மட்டும் தான் அலோவ்டு என இயந்திரம் முரண்டு பிடிக்கும் சரி 2000 கொடு என்றால் உன் அக்கௌண்ட் பேலன்சே எழுபது ரூபாய் முப்பது பைசாதான் என காரி....சாரி... பேப்பரை துப்பும்....
#கும்ப ராசி நேயர்களே... உங்களுக்கு இன்று பூரண கும்ப மரியாதைதான்.. வங்கி வரிசையில் நிற்கும் உங்களைவிட்டு மற்றவர்கள் கொஞ்சம் தள்ளியே நிற்பார்கள் உங்களை பெண்கள் நமுட்டு புன்கையுடன் கடப்பார்கள் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள்... அப்போது ஒருவர் வந்து சொல்லுவார்... சார் ஜிப்ப போடுங்க என்று.... இன்று உங்கள் ராசியான நிறம் பர்பிள் அதுக்காக ATM ல அதே நிறம் கொண்ட 2000 ரூபா நோட்டு வரும்னு எதிர்பார்க்காதீங்க...
#மீன ராசி நேயர்களே இன்று உங்கள் கிரம் அனைத்துமே ஒன்றுக்கொன்று குழப்பமாக சுற்றிக் கொண்டிருக்கிறது குறிப்பாக செவ்வாயை மங்கள்யான் மறைப்பதால் உங்களுக்கு 2000 கிடைப்பது அரிதே... கிரகங்கள் குழப்பமாவே சுத்துவதாலே டாஸமாக் பக்கத்துல இருக்கிற ATM க்கு போகாதீங்க அங்க உங்களுக்கு மினி ஸடேட்மெண்ட் கூட கிடைக்காது.பதிலா எதுனா கல்யாண மண்டபம் பக்கத்துல இருக்கிற ATM ட்ரை பண்ணுங்க ரெண்டரை லட்சத்தோட பொண்ணேக் கூட கிடைக்கலாம்..

வியாழன், 3 மார்ச், 2016

அவசரமா வந்துட்டா...

அவசரமா வந்துட்டா... 

இப்படி நாள் முச்சுடும் வண்டில சென்னைய சுத்து சுத்துன்னு சுத்துறீங்களே... ஒரு அவசரம்னா எங்கே போவீங்க...

அதான் முக்குக்கு முக்கு தெறந்து வச்சிருக்காங்களே அந்த உயர்தர சைவ பவனுக்குத்தான்...
நான் கேட்டது திடீர்னு வயறு கலக்கினா எங்கேப் போவீங்கன்னு...
நானும் அததான் சொல்றேன்....அவசரமா வயத்த பெசஞ்சதுன்னா பக்கத்துல இருக்கிற உயர்தர பவனுக்கு போய் நின்னா வண்டிய பார்க் பண்ண செக்கியூரிட்டி அரும்பாடுபட்டு இடம்லாம் ஒதுக்கி கொடுப்பாரு
அப்படியே வண்டிய சேப்பா பார்க் பண்ணிட்டு ஹோட்டலுக்குள்ள போய் ஜென்ட்டிலா போன வேலைய முடிச்சிட்டு ஹேண்ட்வாஸ்ட்ட போயி அங்க வச்சிருக்கிற சோப் ஆயில ரெண்டு தடவ கையில ஊத்திக் கழுவி கூடவே முகத்தையும் நல்லா கழுவி நாலஞ்சு டிஸ்யூ பேப்பர எடுத்து கையயும் முகத்தையும் நல்லா தொடச்சிட்டு ஃப்ரஸ்சா கல்லாட்ட போனா கிண்ணத்துல திருத்தணி விபூதி குங்கும்மெல்லாம் வச்சிருப்பாங்க அத எடுத்து சின்னதா நெத்தில இட்டுட்டு அப்படியே கல்லாக்கு பின்னாடி போட்டால மொறச்சிட்டிருக்கிற அண்ணாச்சிக்கும் புன்னகையோட இருக்கும் வாரியார் சுவாமிக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு வெளிய வந்தா பார்க்கிங்ல நெருக்கமா சிக்கிட்டு இருக்கிற நம்ம வண்டிய ஒரு சின்னக்கீறல்கூட விழாம சூதானமா வெளிய எடுத்துக்கொடுப்பாரு செக்யூரிட்டி
சுமைய எறக்குன சந்தோஷத்துல வண்டில ஏறி ஸ்ட்ராட் பண்ணுனா செக்யூரிட்டி டிப்ஸ் கிடைக்குங்கிற நப்பாசைல ஒரு சலாம் வச்சி (சாப்டாதான்டா டிப்ஸு )நம்மள வழியனுப்புவார் பாரு இந்த சுகானுபவம் எந்த ஃபாரின் கன்ட்ரிக்கு போனாலும் கிடைக்காது...
அடப்பாவி இதெல்லாம் தப்பு கிடையாதா...
எது தப்பு... மொதநாள் மீந்து போன ஸ்வீட்ட மறுநாள் ஸ்பெசல் மீல்ஸ்ல வெச்சுதற்றாங்களே அது தப்பில்லைன்னா இதுவும் தப்பில்லை...
மொதல்லாம் பொங்கல்ல முந்திரிபருப்ப தேடுவோம் ஆனா இப்ப அந்த பொங்கலையே தேடுற மாதிரி தக்னியூண்டு (மினி டிபன்)வைக்கிறாங்களே அது தப்பில்லைன்னா நான் செய்யுறதும் தப்பில்ல
முன்னல்லாம் ஒரு சாப்பாடு பார்சல் வாங்குனா ரெண்டுபேர் சாப்பிடலாம் ஆனா இப்ப ரெண்டு சாப்பாடு பார்சல் வாங்குனாதான் ஒரு ஆள் சாப்பிடமுடியும்ங்கிற நிலைக்கு கொண்டு வந்திருக்காங்களே அது தப்பில்லைன்னா இதுவும் தப்பில்ல..

---------------------------------------------------------------------------------------------------------
டிஸ்க்கி 


திங்கள், 30 நவம்பர், 2015

ரஜினி சார் நீங்க

ரஜினி சார்.... நீங்க...

ரஜினி சார் நீங்க.....

ஒரு மன்னனா கடேசியா தனக்கு வந்த சொத்தையெல்லாம் உழைக்கும் வர்கத்துக்கே கொடுத்துட்டு விஜயசாந்தியோட அட்டு குடிசைல ஒன்டு குடித்தனம் போனீங்க...
ஒரு பணக்காரனா எனக்கு சொத்து சுகம் வேணாம் சொந்தம் மட்டும் போதும்னு சொத்தை உதறினீங்க...
ஒருஉழைப்பாளியா தனக்கு வந்த சொத்தையெல்லாம் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கே கொடுத்துட்டு என்ட் கார்டு போட்டீங்க....
ஒரு அண்ணாமலையா மறுபடியும் உங்களுக்கு கிடைச்ச சொத்த பிரண்டுக்கே தானம் பண்ணிட்டு மறுபடியும் சைக்கிள எடுத்துட்டு பால் யாவாரத்துக்கே போனீங்க...

ஒரு முத்துவா கேக்கவே வேணாம் அப்பனும் மகனும் சொத்தை தான தர்மம் பண்ணியே அழிச்சீங்க...
ஒரு அருணாசலமா உங்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடி பணத்த மீட்டு மறுபடியும் உங்க அப்பா அமைச்ச டிரஸ்ட்டிக்கே கொடுத்துட்டு துண்ட உதறி தோள்ல போட்டுட்டு கிளம்பிட்டீங்க....
ஒரு பாபாவா வித்தியாசமா தனக்கு கிடைச்ச மந்திரத்த பப்ளிக்குக்காகவே யூஸ் பண்ணி அழிச்சீங்க...

ஒரு சிவாஜியா NRIயா சம்பாதித்த அத்தன சொத்தையும் ஏழை எளிய மாணவர்களுக்காகவே உயிரக்கொடுத்து செலவு பண்ணீங்க....
ஒரு லிங்காவா பொது ஜனங்களுக்காக டேம் கட்டி அதால மொத்த சொத்தையும் இழந்தீங்க....

இவ்வளவு இழந்தப்பிறகும் புயல் வெள்ளம் பாதித்த மக்களுக்காக எதாவது செய்யனும்னு ஃபீல் பண்றீங்க பாருங்க யூ ஆர் வெரி கிரேட்....!

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வெல்கம் டு ஆயகார் பவன்வெல்கம் டு ஆய்கார் பவன்...

வருமான வரித்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

ம்... சொல்லுங்க... வருமான வரி அலுவலகம் வரைக்கும் வந்திருக்கீங்க... செலன் ஃபில் அப் பண்றதுல எதுவும் சந்தேகமாக...?

இல்லைங்க...

வரி கட்டணுமா...?

இல்லைங்க...

பின்ன... வரி கட்றதுல எதுவும் சந்தேகமா...?

ஆமாங்க...

என்ன சந்தேகம் சொல்லுங்க....!?

இந்த வருமான வரி கட்டாம ஏமாத்துறவங்கள பத்தி புகார் கொடுத்தா 15 லட்சரூபா பரிசுன்னு பேப்பர்லயும் TV லயும் பாத்தேன்... அது உண்மையா..?

உண்ம தான்... ஆனா நீங்க புகார்லாம் எழுதித் தரவேண்டியதில்லை... ஆள் யார்னு சொன்னாப் போதும் அவர் வரி கட்டாம ஏய்க்கிறது உண்மைன்னா கண்டிப்பா உங்களுக்கு பணம் கிடைக்கும்... ம்... ஆள் யார்னு சொல்லுங்க...

பேரு G. செல்லத்துரைங்க
32, பிள்ளையார் கோயில் தெரு
திருவான்மியூர்ல குடும்பத்தோட தங்கி ஏஜன்சி பிசினஸ் நடத்துறாருங்க

பரவாயில்லயே இன்ஷியல் மொதக்கொண்டு சொல்றீங்களே...! சரி வரி ஏய்ப்பு செய்றார்னு உங்களுக்கு எப்படி தெரியும்...?

ஆடிட்டர் சொன்னாருங்க


ஓ... ஆடிட்டரே உங்கள்ட உளறிட்டாரோ...? சரி...சரி உங்க பேரயும் அட்ரஸயும் சொல்லுங்க பரிசு பணத்தை தரணும்ல கான்பிடன்ஷியல் தான் வெளிய யாருக்கும் சொல்ல மாட்டோம்...!

எழுதிக்கோங்க...
G.செல்லத்துரை
32 பிள்ளையார் கோயில் தெரு
திருவான்மியூர்

நா கேட்டது உங்க பேர வரி ஏய்ப்பு செஞ்சவர் பேர இல்ல...

அதுவும் நான் தான் இதுவும் நான் தான்...

என்ன...?????

ஆமாங்க தொழில்ல ஒரு லட்சம் வரைக்கும் வரி கட்றமாதிரி இருந்துச்சீங்க இந்த ஆடிட்டர் தான் எனக்கு ஒரு இருபதாயிரம் மட்டும் குடு நீ வரி கட்டாதளவுக்கு கணக்கு எழுதிக் கொடுக்கிறேன்னு எழுதிக் கொடுத்தாருங்க..

தோ இப்ப உண்மைய சொல்லிட்டேங்க என்னப் புடிச்சி நா வெச்சிருக்கிற ஒரு லட்சத்த வாங்கிக்குங்க.... அப்புறம் எனக்கு சேரவேண்டிய 15 லட்சத்தயும் கையோட கொடுத்துட்டீங்கன்னா கிளம்பிடுவேன்...

யோவ்...

பரிசு பணத்த பணமா கொடுப்பீங்களா செக்கா கொடுப்பீங்களா...?

யோவ்... யோவ்..

கேஷா கொடுத்தா ஆயிரம் ரூபா கட்டா கொடுங்க நூறு ரூபா கட்டுங்கன்ணா வெயிட் ஜாஸ்தியாயிடும் தூக்கிட்டு போக சிரமமா இருக்கும்...

@ $ & # .. £ ¥ ¿......