புதன், 31 டிசம்பர், 2014

வாங்க.. வந்து ஒரு அவார்டு வாங்கிட்டு போங்க...

ஒவ்வொரு வருஷமும் அரசும் பல TV சானல்களும் அவங்களுக்கு வேண்டியவங்களுக்கு விருது கொடுத்து மரியாத பண்ணிட்டிருக்கு அந்த வகைல நாமும் நமக்கு தெரிஞ்ச பரிச்சயப்பட்ட நபர்களுக்கு விருதுகள் வழங்கி கவனிச்சா என்னன்னு  எங்க ஒ.உ. சிந்தனைகள் கிளப்  முடிவுசெஞ்சி களமிறங்கி தயாரித்த விருதுகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...ஒ.உ.சிந்தனைகள்ன்னா என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க ண்ணுக்கும் தவாத சிந்தனைகள்ங்கிறதை தான் ஒ.உ.சிந்தனைகள்ன்னு சுருக்கி வச்சிருக்கோம் சரி வாங்க விருதுக்கு போவோம்...

1 கட் அண்ட் ரய்ட் இந்தியன் விருது 

                  அம்பது ரூபா கொடுத்து அம்பதுரூபா டெய்லி பாஸ் கொடுங்கன்னு கேட்டாலும் அம்பது ரூபா சிலரையா இருந்தா கொடு இல்லா கீழ எறங்குன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லும் கண்டக்டர்களுக்கு  கட் அண்ட் ரய்ட் இந்தியன் விருது 

2.இதால இந்தஉலகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்க விருது...

           ஓசியா கிடைச்ச டெய்லி காலண்டர்களில் தன் தேவைக்கு போக மீதியிருப்பதை இல்லாதவங்களுக்கு கொடுக்காம வருஷம் பூறா ஒரு பொக்கிஷமா அப்படியே வச்சிருந்து வருஷம் முடிஞ்சவுடனே அந்த டெய்லி கேக்க அப்படியே  விபூதி குங்குமம் மடிக்க கோயில்ல கொண்டுபோய் வைக்கிறவங்களுக்கு இதால இந்தஉலகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்க விருது...
3.சிறந்த குடிமகன் விருது

      பஸ் கன்டக்டர் தரவேண்டிய 50 பைசா பாக்கிக்காக ஒரு நாளைக்கு 50 பைசான்னா ஒரு மாசத்துக்கு 15 ரூபா ஒரு வருசத்துக்கு 180 ரூபா இப்படி எங்கள்ட்ட கொள்ளையடிக்க எத்தன பேருடா களம்பியிருக்கீங்கன்னு அந்நியன் ரேஞ்சுக்கு டயலாக் பேசிட்டு  டாஸ்மாக்ல வெறும் 50 பைசா பொருமானமுள்ள பிளாஸ்டிக் டம்ளர எந்த கேள்வியும் கேக்காம 5 ரூபா குடுத்து வாங்கி அரசு கஜானாவை வாழவைக்கும் குடிமகனுக்கு சிறந்த குடிமகன் விருது
4.சிறந்த வீணா கீழே போறத அப்படியே காசாக்கு விருது...

      மோட்டல்ல பஸ்ஸ விட்டு எறங்குற பயணிங்க  ஹைவே ஓரமாவே போய் ஒன்னுக்கு அடிச்சா அப்படி போற ஒவ்வொரு ஒண்ணுக்கும்  நமக்கு வரவேண்டிய 5 ரூபா வருமானம் போயிடுமேன்னு யோசிச்சி பயணிகள் அப்படி ஒன்னுக்கு போற இடங்களை கண்டறிந்து கையில் குச்சியோட ஆயாக்களை உக்கார வச்சி தனக்கு வரவேண்டிய வருமானம் ஹைவேயில் வீணா போகாமல் பார்த்துக்கொள்ளும் மோட்டல் கான்ட்ராக்டர்களுக்கு சிறந்த வீணா கீழே போறத அப்படியே காசாக்கு விருது... 
5.சிறந்த யார் தலையிலாவது கட்டிவிடு விருது 

     கெட்டுப்போகப்போற நிலையில இருக்கிற ஒன்னார்ரூபா பெறாத ஸ்வீட்ட சாப்பாட்டுல வச்சி ஸ்பெஷல் மீல்ஸ்ன்னு 15 ரூபா எக்ஸ்ட்ராவா வசூல் செய்யும் ஹோட்டல் முதலாளிகளுக்கு சிறந்த தொழிலதிபர் பில்கேட்ஸ் விருது.
6.சிறந்த மார்க்கெட்டிங் தாதா விருது...

     மார்க்கெட்டிங்க்கு பொய் முக்கியம் ஆனா ஜனங்களுக்கு அது பொய்யின்னு தெரிஞ்சதையே மறுபடியும் மறுபடியும் இது உண்மைன்னு அவங்கள நம்பவச்சி அவங்க தலையிலேயே அத கட்டுவதற்கு அசாத்திய திறமை வேண்டும்... அந்த வகையில் என்னை மிகவும் அசத்தியவர்கள் ட்ரெய்னில் காப்பி டீ விற்பவர்கள்தான் ஆகவே ...  ட்ரெயினில் காப்பி டீ விற்பவர்களுக்கு இந்த வருடத்தின் .சிறந்த மார்க்கெட்டிங் தாதா விருது...
7.எளவு விழலை அதால அழலை விருது..

          எங்கேயாவது தமிழ்,தமிழன்ங்கிற பேர்ல எவனாவது எமோஷனலா முடிவெடுத்து தற்கொலை பண்ணிக்கிட்டா அத கண்டிக்காம அந்த வீட்டுக்கே போய் தாரை தாரையா கண்ணீர் விட்டு அழுது அரசியல் பண்ண தலைவர்களுக்கு  இந்த வருஷம் நல்லவேளையா அதுக்கு வழியில்லாமப் போனதால  அந்த தலைவர்களுக்கு எளவு விழலை அதால அழலை விருது..
8. சாலை விதிகளை கடைபிடி காசை அள்ளு விருது...

          சிகப்பு விழுந்தவுடன பரபரன்னு இயங்கியும் கிரீன் விழுந்தவுடன டக்குன்னு ஒதுங்கியும் சிக்னலை சிறப்பாக மதிக்கும் சிக்னல் பிச்சைக்கரர்களுக்கு சாலை விதிகளை கடைபிடி காசை அள்ளு விருது..
9. மாத்தியோசி விருது...

        பெட்ரோல் விலை ஏற ஏற... அதையே  காரணம் காட்டி மீட்டருக்கு மேல காச கறந்த ஆட்டோ ட்ரைவர்கள் பெட்ரோல் விலை எறங்க எறங்க... எஞ்சின் ஆயில் வில கூடிடுச்சி,பால்விலை கூடிடிச்சி, தோணி ரிடையர் ஆயிட்டாரு,லிங்கா சரியா ஓடலன்னு... இப்படி எதுனா சப்ப காரணத்த சொல்லி மீட்டருக்கு மேல காசு வாங்குறத கைவிடாத ஆட்டோ டிரைவர்களுக்கு...  மாத்தியோசி விருது..
10.சீரியல்கள பாரு குடும்ப கவலைகளை மற விருது...

         தினமும் கிட்டத்தட்ட 18 சீரியல்கள போட்டு  இவ எவன் கூட ஓட்டினா,அவ இவனுக்கு எத்தனாவது பொண்டாட்டி,இவன்அந்த மூணாவது பொண்டாட்டியோட ஒழுங்கா குடும்பம் நடுத்துவானா அத ரெண்டாவது பொண்டாட்டி தடுப்பாளா...இதை யெல்லாம் பாத்தா மொத பொண்டாட்டி போலிசுக்கு போவாளா,நாலாவதா எவ இவனுக்கு வாழ்க்கைப்பாடுவான்னு...இப்படிசீரியல் கவலைகளை குடும்ப பெரியவர்களுக்கு கொடுத்து அவர்களின் சுய கவலைகளை மறக்கச்செய்த சானல்களுக்கு சீரியல்கள பாரு குடும்ப கவலைகளை மற விருது 
11.திடீர் ஆடிட்டர்கள் விருது...

    தனக்கு பிடிச்ச நடிகர் படம் ரிலீஸ் ஆயிட்டா,படம் போட்ட மொத நாள்லயிருந்து படத்த தூக்குற ஏழாவது நாள் வரைக்கும் இன்னைக்கு பத்துகோடி கலெக்ஷன் அமிரிக்கால ஒருலட்சம் டாலர் கலெக்ஷன் செவ்வாய் கிரகத்துல ரெண்டு கோடி மங்கல்யான் கலெக்ஷன்ன்னு fb twitter ல கலெக்ஷன் ரிபோர்ட் வாசிக்கிற ரசிகசிகாமணிகளுக்கு திடீர் ஆடிட்டர்கள் விருது.... 
12.சம்பளம்  வாங்கின சந்தோசத்த அனுபவிக்க விடமாட்டோம் விருது...

        உங்க சம்பளம் கிரிடிட் ஆயிடுச்சின்னு ஆபீஸ் SMS வந்த அடுத்த நிமிசமே இந்த மாதம் 5 ம் தேதி ஹௌசிங் லோன் EMI இருபதாயிரத்து சொச்சம் வருது மறந்துறாம பணத்த முன்கூட்டியே பேங்குல போட்டுடுங்கன்னு SMS அனுப்புற வங்கிகளுக்கு....சம்பளம்  வாங்கின சந்தோசத்த அனுபவிக்க விடமாட்டோம் விருது...

           மேற்படி விருதுகளுக்கானா பரிசுக்கோப்பைகள் காசியப்பன் பாத்திரக்கடையில் ஆர்டர் பண்ணி காசு கொடுத்து வாங்க முடியாமல் அங்கேயே இருக்கிறது சம்பந்த பட்ட விருதுகளுக்குரியவர்கள் என்னிடம் அதற்குரிய பணத்தை செலுத்திவிட்டு அந்த கடையிலேயே நேரடியாக விருதுகளை வாங்கிக்கொள்ளலாம்.... முந்துங்கள் விருதுகள் ஸ்டாக் உள்ளவரையே....
அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 




















திங்கள், 22 டிசம்பர், 2014

உயர்ந்த மனிதரும் தேசிய கட்சி தலைவரும்

       ஒரு உயர்ந்த மனிதர் ஒரு தேசிய கட்சில ஐகிய மாயிருக்காரு அப்படி ஐய்கியமான உயர்ந்த மனிதர்ட்ட அந்த கட்சி தலைவர் ரெண்டு வார்த்த பேசலாம்னு பேச்சு கொடுத்திருக்காரு..
கட்சித்தலைவர் : வணக்கம்
உயர்ந்த மனிதர் : வணக்கம்
க.தலைவர் : நீங்க ஏன் பழைய கட்சிலருந்து இங்க வந்தீங்க...
உயர்ந்த மனிதர்: அந்த கட்சில ஜனநாயகம் இல்ல ..
க.தலைவர் : அப்படியா...!
உயர்ந்த மனிதர் : ஆமா அந்த கட்சில என்ன தவிர வேற யாருக்கும் கிழக்கு சிவக்கையிலே பாட்டு தெரியல
க.தலைவர் : சரி அத விடுங்க உங்கள பத்தி சொல்லுங்க...
உயர்ந்த மனிதர் : கிழக்கு சிவக்கயிலே..
க.தலைவர் : ஓ... பாட்டாவே பாடிட்டீங்களா...?பேஷ் பேஷ் கண்டின்யு
உயர்ந்த மனிதர் : .நா கீர அறுக்கையிலே...
க.தலைவர் : ஓ.. நீங்களும் என்ன மாதிரி தவர பட்சிணியா...? நா கூட உங்க உயர்த்த பாத்து மாமிச பட்சணின்னு தப்பா கணக்கு போட்டுட்டேன்
உயர்ந்த மனிதர் :நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் அடடடா... என் மேல அவ்வளவு பாசமா...? கண்டினியூ... கண்டினியூ
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடிச்சே...
க.தலைவர் : ஓ...நோ... கொஞ்சம் சூதானமா இருந்திருக்க கூடாதா... சரி சரி உங்கள பத்தி இன்னும் சொல்லயே...!?
உயர்ந்த மனிதர்: கிழக்கு சிவக்கயிலே...
க.தலைவர் : மறுபடியுமா...?
உயர்ந்த மனிதர் : நா கீர அறுக்கையிலே...
க.தலைவர் : பேஷ் பேஷ்..
உயர்ந்த மனிதர் : நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் : ஆஹா...
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடுச்சே..
க.தலைவர் : சரி போதும் உங்கள பத்தி சொல்ல ஆரம்பிங்க...
உயர்ந்த மனிதர்: கிழக்கு சிவக்கயிலே..
க.தலைவர் :................
உயர்ந்த மனிதர் : நா கீர அறுக்கையிலே....
க.தலைவர் :.......................
உயர்ந்த மனிதர்: நா உன்ன நெனைக்கையிலே...
க.தலைவர் : .............
உயர்ந்த மனிதர் : பல் அருவா பட்டுடுச்சே.....
:உயர்ந்த மனிதர் சார்... சார்... எங்க ஓடுறீங்க...நீங்க என்ன பத்தி திரும்ப திரும்ப கேடிங்க... நானும் என்ன பத்தி திரும்ப திரும்ப சொன்னேன் அதுக்காக ஓடுனா எப்படி....
க.தலைவர் : அய்யா சாமி...ஒத்த பாட்ட மட்டும் மனப்பாடம் பண்ணி வச்சிட்டுதான் அரசியல்ல மந்திரிவரைக்கும் வந்தீயாய்யா... என்ன உட்ரூ எட்டு பட்டி ராசா..

டிஸ்கி : இது நகைச்சுவை பதிவு மட்டுமே...

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

லிங்காவும் இணயமும்....

          லிங்காவும் இணயமும் 


         மனிதனில் கண்ணா இப்புடுச்சூடு என பறந்து பறந்து அடித்ததை ரசித்தோம் அதே படத்தில் கண்ணிவெடிகளை கேட்ச் பிடித்து அந்தவெடிகளை போட்டவர்கள் மீதே திருப்பி வீசியதை விசிலடித்து ரசித்தோம்...
               அதிசயபிறவியில் மணல் மூட்டைகளை ஒத்தை கையில் தூக்கி விசிறியடித்ததை ரசித்தோம்
                  
             ராஜாதிராஜாவில் கத்தியை சுத்திவிட்டதை ரசித்தோம் 

            முத்துவில் ஒரு மலைமுகட்டிலிருந்து மறு மலை முகட்டுக்கு சாரட்டோடு தாவியதை ரசித்தோம்...
            
             இவ்வளவு ஏன் படையப்பாவில். சுமார் இருபதுவருடங்களுக்கு பிறகும் மாடு அதே இளமையுடன் முட்ட ஓடிவருவதை விசிலடித்து ரசித்தோம்...
        
     இவ்வளவயும்  ரசித்த நம்மால் ஏன் லிங்கா இறுதிக்கட்ட காட்சிகளை ரசிக்க முடியவில்லை... ஏனென்றால் அப்போதெல்லாம் இணயம் நமக்கு பரிட்சயமில்லை... அதனால் படங்களை ரசிக்கமுடிந்தது ஆனால் நாம் இப்போது இணயத்துக்கு அடிமைப்பட்டு நம் சுய ரசிப்புத் தன்மையை இழந்துவிட்டோம் ஒரு படம் வெளிவந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே நூறு விமர்சனங்கள் இணயத்தில் வெளிவருகின்றன  அந்த விமர்சணங்களையெல்லாம் நாம் உள் வாங்கிதான் படத்துக்கு போகிறோம் அப்படி படம் பார்க்கும் போது விமர்சனங்களில் அப்படி சொன்னார்களே இப்படி சொன்னார்களே என்று நமது தனிப்பட்ட ரசிக்கும் திறனை கொன்றுவிட்டுத்தான் படத்தை பார்க்கிறோம்         

                               இணயத்தில் அடுத்தவனின் குறைகளை மட்டுமே பட்டியலிட கற்றுக்கொண்டுவிட்டோம்... படத்தின் பின்னணியில் இருக்கும் ஆறுமாத கடும் உழைப்பை மறந்துவிடுகிறோம் ரஜினி படங்களில் நாம் தூக்கிக்கொண்டாடும் பாட்ஷா அண்ணாமலை இப்போது ரிலீஸாகியிருந்தால் கண்டிப்பாக கழுவி கழுவி ஊற்றியிருப்போம்.. 'கற்றுக்கொண்ட வித்தை'யை வைத்தே ஒரு மனிதனை இரண்டுமாதங்கள் இணையத்தில் சுத்த விட்டு அடித்தவர்கள் தானே நாம்...

            இத்தனையையும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் லிங்கா பிடிக்கவில்லை... ஏனென்றால் நானும் ஒரு இணய அடிமைத்தானே...!

வியாழன், 18 டிசம்பர், 2014

சிரிங்க.... நல்லா சிரிங்க...




தொண்டன் : தலைவா எதிர் கட்சி காரங்க பாரத் மாத 'கீ' ஜே ன்னு கோஷம் போடுறாங்க...

தலைவர் : சரி விடு...நாம  திண்டுக்கல் 'பூட்டு'க்கு  ஜே ன்னு கோஷம் போடுவோம்..
--------------------------------------------------------------------------------------------------------------------


மனைவி : என்னங்க பாத்ரூம்ல கரப்பான் பூச்சி மல்லாக்க விழுந்து உதறுது பாருங்க...

கணவன் : மொத நீ பாடுறத நிறுத்து... அது தானா எழுந்திரிச்சி போயிடும்..
--------------------------------------------------------------------------------------------------------------------


டாக்டர் : தூக்கத்துல 10 கிலோமீட்டர் வரைக்கும் நடந்து போயிடுரீங்கன்னு மருந்து வாங்குனீங்களே இப்ப பரவாயில்லையா..?

பேஷன்ட் : பரவாயில்லை டாக்டர் இப்ப மயிலேஜ் கொஞ்சம் கம்மியாயிடுச்சி... இப்பல்லாம் நாலு கிலோமீட்டர் தான் நடக்குறேன்...
------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பயணி சக பயணியிடம் : இன்னைக்கு நமக்கு மீதி சில்லறை கிடைக்காதுன்னு நெனைக்கிறேன்

பயணி ௨ : ஏன்?

பயணி 1 : டிரைவர் பஸ்ஸ தூங்கிட்டே ஓட்றார்  பாருங்க...
-----------------------------------------------------------------------------------------------------------------------


பேஷன்ட் : டாக்டர் பல் வலி

டாக்டர் : எத்தன 'நாளா'?

பேஷன்ட் : இல்ல ஒன்னே ஒன்னு தான் டாக்டர்.
-------------------------------------------------------------------------------------------------------------------


உறவினர் : டாக்டர் பேஷன்ட்டுக்கு ஆப்பிள் கொடுக்கலாமா..?

டாக்டர் : தாராளமா... ஆனா சைனா மொபைல் மட்டும் வேண்டாம்.. சவுண்ட் பொல்யூசன் ஹெல்த்துக்கு ஆகாது..
-----------------------------------------------------------------------------------------------------------------


தொண்டர் TO தலைவர் : தலைவரே நம்ம கூட்டணி கட்சி தலைவர் பாண்டில நிக்கிறாராம்.

தலைவர் : நின்னுட்டு போகட்டும் நமக்குதான் அங்கே செல்வாக்கு இல்லையே...

தொண்டர் : அதில்ல தலைவரே... கைத்தாங்கலா நிக்கிறாராம் ஒரு கால்டாக்ஸி அனுப்பி பிக்கப் பண்ணிக்க சொல்றார்...
----------------------------------------------------------------------------------------------------------------






ஞாயிறு, 14 டிசம்பர், 2014

திருடன் லிங்காவோட அப்பா யாரு...?

             



              தாத்தா ராஜா லிங்கேஸ்வரன் பேரன் லிங்கா இந்த ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கவேண்டிய அப்பா லிங்கேஸ் என்னவானார்ன்னு படம் வந்ததிலிருந்து காத போட்டு கொடஞ்சிட்டே...ச்சே... மனச போட்டு கொடஞ்சிட்டே இருந்துச்சி.. சரி உண்மை என்னன்னு கண்டுபிடிச்சி இந்த உலகத்துக்கு தெரிவிப்போம்னு களத்துல எறங்கி கன்னிமரா மியூசியம் எல்லாம் போய் ஆதாரத்த தெரட்டுனா பல அதிர்ச்சிகரமான உண்மைகளெல்லாம் தெரிய வந்துச்சி.... அந்த உண்மைகள் என்னன்னா...
                    தாத்தா ராஜா லிங்கேஸ்வரனோட தாத்தா முத்து மகாராஜா... அதான் தன்ன ஏமாத்துன சொந்தத்துக்கே தன்னோட எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டு பையன் முத்துவையும் போனஸா அவங்களுக்கே கொடுத்துட்டு பரதேசியா போனாரே அவரேதான்... அந்த முத்து மகாராஜாவோட மகன் முத்துவுக்கும் மீனாவுக்கும் பொறந்தவருதான் இந்த ராஜா லிங்கேஸ்வரன்...
                      அதான் முத்து எல்லா சொத்தையும் சரத்பாபுக்கே விட்டுகொடுத்துட்டு வந்துட்டாரே அப்புறம் எப்படி ராஜா லிங்கேஸ்வரன் பெரும் பணக்கார் ஆனார்ன்னு கேக்காதீங்க... ஏன்னா அவங்களெல்லாம் ஒரே பாட்டுல பணக்காரனாகிற வம்சத்த சேந்தவங்கங்கிறது உங்களுக்கே தெரியும்... அதுபடி ராஜா லிங்கேஸ்வரன் குத்து மதிப்பா ஒரு பத்து பதினஞ்சு பாட்டுகளை பாடி பெரும் பணக்காரராயிட்டாரு.
                         அப்புறம் வழக்கப்படி ராஜா லிங்கேஸ்வரனும் ஓட்டாண்டி யாகி பரதேசம் புறப்பட்ட பிறகு பிறந்தவருதான் ஊருக்கெல்லாம் வாரி வழங்கினாலும் தனக்கு ஒரு வாரிசு இல்லையேன்னு ஏங்குன நம்ம எஜமான் வானவராயர் அய்யா... அப்படின்னா சோனாக்ஷி தானே  வானவராயருக்கு அம்மாவ வரணும் இதுல மனோரமா அம்மா வா இருக்காங்களே அது எப்படின்னு திருப்பி என்ட கேள்வி கேக்காதீங்க ஏன்னா இதப்பத்தின சரித்திர குறிப்புகள நான் எங்க தேடியும் கிடைக்கல...
                                  
                              சரி சரித்திரத்துக்கு வருவோம்... மனைவி மீனா இறந்த துக்கத்துல இருந்த நம்ம எஜமான் மனைவி சாவுக்கு காரணமானவங்கள ஒரு ஆக்ரோசமான சண்டைக்கப்புறம் திரித்திட்டு விருட்டுன்னு வேலைக்காரியும் கணீர் ஆண் குரலழகியுமான ஐஸ்வர்யாவ இழுத்துட்டு போவாரே... அப்படிப்பட்ட எஜமானுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பிறந்தவருதான் இந்த திருடன் லிங்கா..
                                   
                           சரி... அப்படின்னா இந்த பணக்காரன் உழைப்பாளி அண்ணாமலை பாட்ஷா அருணாசலம் பாண்டியன்லாம் யாருன்னு நீங்க கேட்டா அதுக்கு என்னோட பதில் உலகத்துல ஒரே மாதிரி எழுபேரு இருப்பாங்க... இதுல அருணாசலத்தோடா அப்பா மட்டும் ராஜா லிங்கேஸ்வரனோட ஒன்னு விட்ட சித்தப்பா முறைல வர்றாப்புல...
                           
 ஒரு பின்குறிப்பு : மதன் எழுதின வந்தார்கள் வென்றார்கள் புக்குல மொகலாய பேரரசுல முத்து மகாராஜவோட முன்னோர்களில் ஒருவர் தளபதியா இருந்து அலாவுதீனின் அற்புத விளக்குக்காக கமலோட மல்லு கட்டிருகார்ன்னு ஒரு மறைமுக குறிப்பா சொல்லிருக்கார்...