வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வெல்கம் டு ஆயகார் பவன்



வெல்கம் டு ஆய்கார் பவன்...

வருமான வரித்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

ம்... சொல்லுங்க... வருமான வரி அலுவலகம் வரைக்கும் வந்திருக்கீங்க... செலன் ஃபில் அப் பண்றதுல எதுவும் சந்தேகமாக...?

இல்லைங்க...

வரி கட்டணுமா...?

இல்லைங்க...

பின்ன... வரி கட்றதுல எதுவும் சந்தேகமா...?

ஆமாங்க...

என்ன சந்தேகம் சொல்லுங்க....!?

இந்த வருமான வரி கட்டாம ஏமாத்துறவங்கள பத்தி புகார் கொடுத்தா 15 லட்சரூபா பரிசுன்னு பேப்பர்லயும் TV லயும் பாத்தேன்... அது உண்மையா..?

உண்ம தான்... ஆனா நீங்க புகார்லாம் எழுதித் தரவேண்டியதில்லை... ஆள் யார்னு சொன்னாப் போதும் அவர் வரி கட்டாம ஏய்க்கிறது உண்மைன்னா கண்டிப்பா உங்களுக்கு பணம் கிடைக்கும்... ம்... ஆள் யார்னு சொல்லுங்க...

பேரு G. செல்லத்துரைங்க
32, பிள்ளையார் கோயில் தெரு
திருவான்மியூர்ல குடும்பத்தோட தங்கி ஏஜன்சி பிசினஸ் நடத்துறாருங்க

பரவாயில்லயே இன்ஷியல் மொதக்கொண்டு சொல்றீங்களே...! சரி வரி ஏய்ப்பு செய்றார்னு உங்களுக்கு எப்படி தெரியும்...?

ஆடிட்டர் சொன்னாருங்க


ஓ... ஆடிட்டரே உங்கள்ட உளறிட்டாரோ...? சரி...சரி உங்க பேரயும் அட்ரஸயும் சொல்லுங்க பரிசு பணத்தை தரணும்ல கான்பிடன்ஷியல் தான் வெளிய யாருக்கும் சொல்ல மாட்டோம்...!

எழுதிக்கோங்க...
G.செல்லத்துரை
32 பிள்ளையார் கோயில் தெரு
திருவான்மியூர்

நா கேட்டது உங்க பேர வரி ஏய்ப்பு செஞ்சவர் பேர இல்ல...

அதுவும் நான் தான் இதுவும் நான் தான்...

என்ன...?????

ஆமாங்க தொழில்ல ஒரு லட்சம் வரைக்கும் வரி கட்றமாதிரி இருந்துச்சீங்க இந்த ஆடிட்டர் தான் எனக்கு ஒரு இருபதாயிரம் மட்டும் குடு நீ வரி கட்டாதளவுக்கு கணக்கு எழுதிக் கொடுக்கிறேன்னு எழுதிக் கொடுத்தாருங்க..

தோ இப்ப உண்மைய சொல்லிட்டேங்க என்னப் புடிச்சி நா வெச்சிருக்கிற ஒரு லட்சத்த வாங்கிக்குங்க.... அப்புறம் எனக்கு சேரவேண்டிய 15 லட்சத்தயும் கையோட கொடுத்துட்டீங்கன்னா கிளம்பிடுவேன்...

யோவ்...

பரிசு பணத்த பணமா கொடுப்பீங்களா செக்கா கொடுப்பீங்களா...?

யோவ்... யோவ்..

கேஷா கொடுத்தா ஆயிரம் ரூபா கட்டா கொடுங்க நூறு ரூபா கட்டுங்கன்ணா வெயிட் ஜாஸ்தியாயிடும் தூக்கிட்டு போக சிரமமா இருக்கும்...

@ $ & # .. £ ¥ ¿......

வியாழன், 10 செப்டம்பர், 2015

அஜித் &அரவிந்த்சாமிக்கு ஒரு கதை பார்சல்

                      அஜித் &அரவிந்த்சாமிக்கு ஒரு கதை பார்சல் 


                  அஜித் கூட வில்லன் ரோல் பண்ணத்தயார்ன்னு அரவிந்த்சாமி அறிவிச்சது தான் தாமதம்... ஒருபக்கம் வெங்கட் பிரபு அர்ஜுனை தூக்கிட்டு அதுக்கு பதிலா அரவிந்சாமிய பிட் பண்ணி பரபரான்னு மங்காத்தா 2 கதைய ரெடிபண்ணிட்டிருக்காப்ல பிரேம்ஜி மொத பார்ட்டுலயே செத்துட்டாலும் இதுலயும் மாஸ் பேய் கெட்டப்ல. வந்து நம்ம உயிர வாங்கப்போறதா தகவல்

இன்னொரு பக்கம் பேரரசு ரெண்டு தாதாங்கள பத்தின கதைய ரெடி பண்ணிட்டு சைதாப்பேட்டை ராணிப்பேட்டை குரோம்பேட்டை ஜாபர்கான்பேட்டை ராயப்பேட்டைன்னு நெறய பேட்டைங்க பேர சங்கத்துல படத்தலைப்பா ரெஜிஸ்டர் பண்ணிட்டு தீவிரமா அஜித்துக்கும் அரவிந்த்சாமிக்கும் பேதியாவுற அளவுக்கு ரைமிங்கா டயலாக் எழுத ஆரம்பிச்சிட்டாப்ள


இன்னொரு பக்கம் ஹரி .... ஹரிக்கு இவங்க ரெண்டு பேரயும் வச்சி படம் பண்ண ஆசைதான்... ஆனா ஏற்கனவே சிங்கம் 3 க்கு கமிட் ஆயிட்டதாலும் அடுத்து விக்ரம் கூட ஒரு புராஜெக்ட் இருக்கிறதாலயும் தெய்வாதீனமா ஹரிகிட்ட இப்போதைக்கு அருவா ரெடியா இல்லாததால... சாரி கதை ரெடியா இல்லாததால நாமளும் நம்ம காதும் தப்பிச்சது

இவ்வளவு ஏன் வெட்டியாயிருக்கிறதுக்கு வேஷ்ட்டி விளம்பரத்துல நடிக்கலாமேன்னு நடிச்ச பாரதிராஜாவும்.... என் இனிய தமிழ் மக்களே... இதுவரை இரண்டாவது ஹீரோக்களை சாம்பார்களாக மிக்சர் பார்ட்டிகளாக காட்டி வந்த இந்த பாரதிராஜா அஜித் அரவிந்த்சாமி இருவரையும் வைத்து இரு துருவங்களாக இணைத்து மிரட்ட படப்பிடிப்புக்காக போன வாரம் காட்ராக்ட் ஆபரேஷன் செஞ்ச கண்ணனின் ரெண்டு கண்களையும் கேமராவா எடுத்துட்டு கிளம்பத் தயார்னு அறிவிக்க...

இத்தன பேர் கதயோட கிளம்ப  நம்ம கதை இலாக்கா மட்டும் சும்மாயிருக்குமா... இதோ அவர்களுக்காக கதை ரெடிபண்ண முந்திரி பகோடா சகிதம் ஒக்காந்த ஒரு மாலைப் பொழுதின் நன்நாள்.....

தோ... பாருங்கப்பா கதைப்படி அஜித்தும் அரவிந்த்சாமியும் அண்ணன் தம்பிங்க... பட ஓப்பனிங்ல சின்ன வயசுலயே பிரிஞ்சிடுறாங்க...ம் கதைய ஆரம்பிங்க...

அண்ணே... கதப்படி அம்மா அப்பா நரைச்ச தலையோட இருக்கிற மூனுவயசு அஜித்து வலது கண் புருவத்துல பெரிய மருவோட இருக்கிற அஞ்சு வயசு அரவிந்த்சாமியும் ராத்திரியில வீட்டுக்கு வெளியில நிலா சோறு சாப்புட்டுட்டு இருக்கிறாங்க அப்ப துப்பாக்கியோட திடீர்னு அவங்க முன்னாடி குதிக்கிற ஒருத்தன் அவங்க அப்பாட்ட..... எந்த எந்த கோயில்ல எப்ப எப்ப என்ன என்ன பிரசாதம் போடுவாங்கன்னு ஒரு டேட்டா பேஸ் வெச்சிருக்கியே அத எனக்கு கொடுத்துடுங்கிறான்அதுக்கு அப்பா முடியாதுன்னு சொல்ல....

டுமீல்....

அப்பா செத்துடுறார் அந்த அதிர்சியில அம்மா அண்ணன் தம்பி எல்லாரும் அப்பா பிணத்த அனாதையா விட்டுட்டு ஆளுக்கொரு பக்கமா சிதறி ஓடி பிரிஞ்சிடுறாங்க...

ந்தா...ச்சூ பிச்சக்கார நாயே உண்ணோட கதைல டேட்டா பேஸ் மட்டும்தான் புதுசு... மத்தபடி இது யாதோங்கி பாரத் ஓப்பனிங்

சரிண்னே...கதைல புதுசா ஒரு தங்கச்சி கேரக்டர சேத்துப்போம்...

அடேய்... சுண்டக்கஞ்சி பானத் தலையா இதுவும் காளிக்கோயில் கபாலில வெச்சி வெண்ணிலா வெள்ளித்தட்டு வானிலே முல்லை மொட்டுன்னு பாடிட்டாங்க...

போங்கண்னே... முடிஞ்சா நீங்க ஒரு கதை சொல்லுங்கண்னே...

கதையாட கோமிட்டி தலையா... அஜித்தும் அரவிந்த்சாமியும் அவங்க அம்மா வயத்துல நிறைமாசமா இன்னும் பிறக்காமயே இருக்காங்க அப்ப அப்பா ஒரு சிக்கல்ல மாட்டி ஊர் விட்டே ஓடிப்போக வேண்டிய கட்டாயம் சென்ரல் ஸ்டேஷன்ல நிறை மாச அம்மாவ 3வது பிளாட்பார்மில இருக்கிற ஹவுரா மெயில்ல ஏத்திவிட்ட அப்பா பேக்கு குடிக்கிறதுக்கு தண்ணிய வாங்கிட்டு நாலாவது பிளாட்பார்ம்ல இருக்கிற தாதர்ல ஏறிடுது....

கி....கி..கி... இது திரிசூலம் கதண்னே

சார்.... அப்பா அம்மா அண்ணன் தம்பி கதப்படி அண்ணன் ஒரு அற லூசு அவங்க சின்ன வயசுலயே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்ட வந்து லூசு அண்ணன அப்பாவும் தம்பிய அம்மாவும் எடுத்துட்டு பிரிஞ்சிடுறாங்க...

தோ...நிறுத்து இது கல்யாணராமன் கதை... வேற வேற...

சார் இப்படி வெச்சுக்கலாம்... 40 வயசு அண்ணனுக்கு 10 வயசுல ஒரு தம்பீ 8 வயசுல ஒரு தம்பி அண்ணியோட கொடுமை தாங்காம தம்பிங்க ரெண்டுபேரும் வீட்ட விட்டு கிளம்பிடுறாங்க....
அட்ராசக்க அட்ராசக்க... அதெப்பிடிடா 40 வயசு அண்ணனுக்கு 10,8 வயசுல தம்பிங்க...அதுவுமில்லாம இது படிக்காதவன் ஓப்பனிங்டா....

  

சார் இப்படி வச்சிப்போம் கதப்படி சின்னவயசு அஜித் அரவிந்த்சாமி அப்பா ஒரு திருட்டு விசிடி கட வெச்சி கண்ணியமா பொழப்ப நடத்துறாரு அப்ப ரெய்டு வர்ற விஷால் எல்லா திருட்டு விசிடியையும் தூக்கிப்போட்டு ஒடைக்கிறதோட இல்லாம சின்ன வயசு ரஜினிய... ச்சே... அஜித்த புடிச்சி இவன் அப்பன் ஒரு திருட்டு விசிடி வியாபாரின்னு பச்சை குத்திடுறாப்புல...

இது தீ பட ஓப்பனிங் வேற...

சார் கதப்படி அஜித் அரவிந்த்சாமி ரெண்டுபேரும் ரெட்ட பிறவிங்க அப்பாவும் அம்மாவும் பெரிய கோடீஸ்வரங்க விதி வசத்தால ஒருத்தன திருடன் தூக்கிட்டுப் போய் வளக்குறான்

இது சட்ட ம் என் கையில்.... வேற...

சார்..... அஜித்தும் அரவிந்த்சாமியும் சின்ன வயசுலயே விதி வசத்தாலா பிரிஞ்சிடுறாங்க பின்னாடி ஒருத்தர் பிட்பாக்கெட்டாவும் இன்னொருத்தர் இன்டர்நேஷனல் ஸ்மக்ளராவும் ஆயிடுறாப்ல....

உஸ்ஸ்... அட அட அடா .. இது சவால் கதை சரி வேணாம் விடுங்க... அஜித்தும் அரவிந்த்சாமியும் சின்ன வயசு பிரண்ட்ஸ்ங்கன்னு கதைய வெச்சுப்போம் ம்... இப்ப கதைய சொல்லுங்க...

சார் அஜித் மாடு வெச்சி பால் யாவாரம் பண்ற ஏழை அரவிந்த்சாமி ஸ்டார் ஹோட்டல் நடத்துற பணக்காரர் ..

சார்... எங்க சார் ஓடுறீங்க அது வேணாம்னா இன்னொரு கதை இருக்கு.... அரவிந்த்சாமி ஒரு டிராமா பிரியர் அஜித் அவருக்கு வண்டியோட்ற சாரதி....

சார்...சார்...நில்லுங்க.. எங்க ஓடுறீங்க...இந்த கதையும் நல்லா இல்லையா...?

அட அது இல்லப்பா... பத்து மணிக்கு கடைய மூடிடுவாங்க சரக்க வாங்கி வச்சிட்டு மறுபடியும் டிஸ்கசன  ஆரம்பிப்போம்...