சனி, 12 அக்டோபர், 2013

       கிராவிட்டி (ஆங்கிலம் ) 

                 கதை சிம்பிள்...  நாம ஓட்டிட்டு போற வண்டி நடுவுல டேமேஜ் ஆயிட்டா கைய பெசஞ்சிட்டு நிக்காம,  எப்படி யார்ட்டயாவது லிப்ட் கேட்டு வீடு வந்து சேர்ந்துடுவோமோ அதுபோலத்தான் இந்தக் கதையும்.ஆனா இந்தக் கதை வின்வெளியில நடக்குது.

                  அஞ்சுபேரோட விண்வெளி போற ஒரு அமெரிக்க விண்கலம் ஒரு விபத்துல சிக்குறதால நாலு பேரு செத்துடுறாங்க, விண்கலமும் வெடிச்சி சிதறிடுது,தப்பிச்சி நடு வானத்துல மிதக்கிற அந்த ஒரே ஒரு பெண் மொத ரஷ்ய விண்கலத்துல ஏறி,அப்புறம் சீன விண்கலதுல ஏறி ஒரு வழியா பூமிய வந்தடையிறாங்க.



              அமெரிக்க ஷட்டில்ல விண்வெளிக்கு போன வீரர்கள் 5 பேரும் பூமிக்கு திரும்பும் மொதநாள்  பூமியிலருந்து 372 மைல் தொலைவில் அமைந்திருக்கும் மிதக்கும் விண்வெளி மையத்தில்  பழுதாகியிருக்கும் 'டெலஸ் கோப்'பை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுறாங்க. இதுல விண்வெளிக்கு முதன் முதலா போயிருக்கும் பயோ மெடிகல் படிச்ச பெண் டாக்டர் சான்ட்ரா புல்லக்கும்,அனுபவம் வாய்ந்த 'ஜார்ஜ் க்ளூனி'யும் தங்களோட  ஷட்டிலுக்கு வெளியே வந்து ரிப்பேர சரிபாத்துட்டு இருக்காங்க இந்த நேரத்துல விண்வெளி குப்பைகளின் தாக்குதலால் இவர்களின் ஷட்டில் தாக்கப்பட்டு பயனற்று போகிறது மூவர் உடனடியாக உயிரிழக்கின்றனர்,அந்த விண்வெளி மையமும் வெடித்து சிதறிவிடுகிறது.

இந்தப் பெரும் விபத்தில் உயிர் தப்பி,பேஸ் ஸ்டேசனுடன் எந்தவித தொடர்புமில்லாமல் அந்தரத்தில் மிதக்கும் சான்ட்ரா,& ஜார்ஜ்'க்கு ஒரே ஆதரவு தொலைவில் இருக்கும் ரஷ்யாவின் சோயுஸ் வின்கலாம் தான் அதைநோக்கி நகரும் இருவரில் சான்ட்ரா மட்டும் அதை அடைறார்,சீனியர் ஜார்ஜ் ஆக்சிஜன் குறைவால் 'சோயுஸ்'சைஅடைய முடியாமல் உயிர்துறக்கிறார்


ரஷ்ய விண்கலத்தை சான்ட்ரா அடைஞ்சாலும் சோகம் அங்கேயும் தொடறுது,அமெரிக்க விண்கலம் வெடித்து சிதறியதால் ஏற்படும் தொடர்விளைவால பாதிக்கப்படும் ரஷ்ய விண்கலமும் வெடித்து சிதற அதிலிருந்தும் தப்பி நிற்கதியாய் விண்வெளியில் தவிக்கும் சான்ட்ரா தட்டுத் தடுமாறி  அதே தொடர் விளைவை சந்தித்து பாதிப்படைந்து கொண்டிருக்கும்  சீன விண்கலத்தை அடைகிறார் அந்த விண்கலமாவது அவருக்கு உதவியதா? பூமிக்குவந்து ஆனந்தக்கண்ணீரோடு அவர் மண்ணுக்கு முத்தமிட்டாரா என்பதுதான் மீதிகதை.

படம் மொத்தமும் டெக்னிக்கல் பிரமாண்டம் தான், நடிப்ப பத்தி சொல்றதுக்கு இங்கே வேலையே இல்லை.படத்துல ரெண்டே ரெண்டு பேர்தான் நடிச்சிருக்காங்க அதுலயும் ஒருத்தர் பாதியிலேயே போயிடுறார்.டெக்னிக்கல் பிரமாண்டம் & 3D மூலமா மொத சீன்ல இருந்தே  நம்மாள சீட்டு நுனிக்கே கொண்டு வந்துற்றாங்க, இந்த  பிரமாண்ட அனுபவத்த வார்த்தைகளால் சொல்ல முடியாது,நாம என்னைக்குமே நாசாவுக்கோ(5000 டாலர் கொடுத்தா விண்வெளி அனுபவத்த கொடுக்கிறாங்களாமே),அல்லது விண்வெளி நிலையத்துக்கோ போய் விண்வெளி அனுபவத்த அனுபவிக்கப்போறதில்லை,ஆனா இந்தப்படத்த பாக்கிறது மூலமா கண்டிப்பா அந்த அனுபவத்த அடையலாம்.



படம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நாமும் விண்வெளியில் பயணிக்கிறோம், அவங்க கை தவற விட்டு காற்றில் மிதக்கும் போல்ட்ட நாம் பிடிக்க முயற்சி செய்கிறோம்,சிதறுண்ட வின்வெளி நிலைய சிதறல்கள் நம்மை தாக்காமல் தப்பிக்க தலையை சடாரென குனிந்து கொள்கிறோம்,சான்ட்ரா விடும் கண்ணீர்த் துளிகள் ,மிதக்கும் பேனா,ஹெல்மெட்,பூமியில் பட்டுத்தெறிக்கும் சூரியஒளி இப்படி மெய் சிலிர்த்து ரசிக்க படத்தில் நிறைய இருக்கு.

படத்த அல்போன்ஸ் இயக்கியிருக்கார், வார்னர் பிரதர்ஸ் 80 மில்லியன் டாலர்ஸ் செலவுல தயாரிச்சிருக்காங்களாம் (ஒரு மில்லியன் = 10 லட்சம் ஒரு டாலர் = 61 ரூபாய்... மொத்தம் எவ்வளவுன்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க). படம் வெளியான மொத மூணு நாள்லையே 55 மில்லியன் டாலர்ஸ் வசூலாயிடுச்சாம்.படம் இடைவேளையையும் சேர்த்து 1.30 மணி நேரமே ஓடுது. ஆயுத பூஜை லீவ் டைம்ல வந்திருக்கும் மிகச்சிறந்த படம் குழந்தைகளோட போய் ரசிக்கவேண்டிய படம்,மிஸ் பண்ணிடாதீங்க.

படத்த சத்தியம் & மாயாஜால் ரெண்டுலயும் பாத்தேன் சத்தியம் (S2- திருவான்மியூர்) கூட ஒப்பிடும் போது மாஜாஜால் ரொம்ப ரொம்ப சுமார்தான்.




















































கருத்துகள் இல்லை: