புதன், 21 ஜனவரி, 2015

ஐ ஏமாத்திட்டீங்களே ஷங்கர் சார்...

பொதுவா ஷங்கர் சார் ரெண்டுவகையான படங்களை மட்டுமே கொடுப்பார் ஒன்னு ஜென்டில்மேன் இந்தியன் முதல்வன் மாதிரியான படங்கள கொடுத்து நாட்ட திருத்துவாரு... இன்னொன்னு ஜீன்ஸ் பாய்ஸ் மாதிரி படங்கள கொடுத்துட்டு இது நாம கொடுக்கவேண்டிய படமில்லைன்னு தன்னையே திருத்திட்டு ரெகுலர் ட்ராக்குக்கு திரும்பிடுவாரு... அதுல இந்த 'ஐ' அதுக்கும் மேல... சரி வாங்க போவோம்...


     ஒரு  மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வாங்கிய ஹீரோ 4+!=5 வில்லன்களால் உருக்குலைக்கப் படுகிறார்...அதே பாணியில் ஹீரோ வில்லன்களை பழிவாங்குவதுதான் உவ்வேக்...ஒன் லைன்..

ஓப்பன் பண்ணா ஃபிளாஷ் பேக்குல இந்தப்பக்கம் கட்டுமஸ்த்தான ஹீரோ வெறும் ஜட்டியோட சுமார் அரைமணிநேரம் உலாத்துறார்... அந்தப்பக்கம் ஹீரோயின் விதவிதமான டூ பீசோட ஒரு அரைமணிநேரம்  சுத்துது... இது போதாதுன்னு வெறும் ரெண்டு இஞ்ச் உயர டவுசரோட ஒரு அரவாணியும் ஹீரோவ ஒரு காமணி நேரம் டாவு கட்டுது...பதிலுக்கு ஹீரோவும் ஊரோரம் புளியமரம் பாட்ட பாடி கும்மியடிக்கிறார்.... என்ன கருமாந்திரம்டா இது...

   படத்த பாத்து பாத்து செதுக்கும் ஷங்கர் & கோ இந்த தடவ நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ்ச மான வாரியா பண்ணிருக்காங்க....

  •      எமிய தூக்கிட்டு போன விக்கிரம துரத்திட்டு போற போலீஸ் ஒரு ரயில்வே லெவல் கிராஸ்சிங்கில் விக்ரம் யூஸ் பண்ண வண்டிய பாத்துட்டு அவன் எந்தப்பக்கம் போன ட்ரைன்ல ஏறிப் போனானோன்னு திரும்பிடுது... ஒவ்வவொரு ரயில்வே கிராசிங்லயும் நின்னு ஆளுங்க ஏத்திட்டு போற ரயில எப்ப விட்டாங்கன்னு தெர்ல...
  • சந்தானம் பேக்கரி காரங்க யூஸ் பண்ணற ட்ரை சைக்கிள மிதிச்சிட்டு ஐஸ் வித்துட்டு ஜிம் வில்லன் வீட்டுக்கு போறார்...
  • விக்ரம் ஜிம் வில்லன் மேல எண்ணைய ஊத்தி கொளுத்திவிட்டுட்டு சரியா அறுபது செகண்ட் கழிச்சி தண்ணில நனாச்ச சாக்க போட்டு அணைக்கணும் ஆனா ஸ்டாப் வாட்ச ஆப் பண்ணிட்டு அப்புறம் சாக்க தண்ணில நனைச்சி போடுறார்...
  • விக்ரம் ராம்குமார் மேல சீனித்தண்ணிய உத்தி டயலாக் பேசுறார்.. நீச்சல் குளத்து கரையிலேயே நிக்குற அந்த பேக்கு ராம்குமார் நீச்சல் குளத்துல குதிச்சி தப்பிக்காம தேனிகள் கடிய வாங்கிக்குது...பேக்கு பேக்கு...
  • உன் டிப்பன் பாக்ஸ்ல எச்சிய துப்பிட்டேன் ரகம்தான்... அரவாணி யூஸ் பண்ற கிரீம்களில்ல ஆடுக்கொழுப்பு இன்னும் பிற அயிட்டங்கள சேக்குறது...
  • 110 KVA பஸ் பார்சுண்டு விரல் பட்டாலே உடம்பு கரிக்கட்டையாகத்தான் விழும் ஹை வோல்டேஜ வில்லனை  தொடவைத்து தேவையான அளவு கருக்க விட்டு தள்ளிவிடுவது...சுத்தப்பேத்தல்...
  • டாக்டரை வீழ்த்த மருந்து மாற்றுவது.... நமக்கு பதில் சந்தானமே சொல்லிட்டார் கண்ணாமுச்சி ரே ரே.. காத குட்ட ரே ரே,பீ முட்ட தின்னுட்டு நல்ல முட்ட கொண்டுவா என்று.. 
  • இறுதியில் அந்த ஐந்து வில்லன்களையும் சந்தானம் காலய்ப்பது... படம் பார்ப்பவர்களை எரிச்சல் படத்தான் வைக்கிறது... அதிலும் குறிப்பாக மாடலிங் வில்லன் தோற்றத்தை சந்தானம் கலாய்க்கும் போது ஓடிபோய் சந்தானத்தை ஒரு அப்பு அப்பத் தோன்றுகிறது.
                      வசனம் சுபா திறமையானவர்தான்...  பட் இந்த படத்துக்கு இவர் செட்டாகல... அண்ணன் நாலு பேர போட்டுருக்கார்க்கு சந்தானம் கொடுக்கும் கவுண்டர்...கொடுமைடா சாமி இதுவே நம்ம வாத்தியார் சுஜாதா (போச்சுடா நீயுமா)இருந்திருந்தா... அயல அயலா பாட்டுக்குள்லையே வில்லன் சீண்டல்,சுரேஷ் கோபி தலையிடல்,விக்கிரம புது மாடலா ரம்குமார் அப்ரூவல்ன்னு அந்த ஒரு பாட்டுக்குள்ளேயே  எல்லா பஞ்சாயத்தையும் முடிச்சிட்டு மெயின் பழிவாங்கும் கதைக்கு நிறைய தீனி போட்டிருப்பார்... 

மியூசிக் ரஹுமான்... இந்த படத்துக்கு இவ்வளவு அமஞ்சதே அதிகம்... ஆனா ரகுமான் சார்.. ஜீன்ஸ்ல பிரஷாந்தும் ஐஷும் சந்திக்கும் போதெல்லாம் ஒரு பீஜிஎம் வருமே.... ஸ..ஸ...ரி...ஸ.. ச...ரி..க..ம... இந்த மாதிரி ஒரு பிஜிஎம் மறுபடியும் எப்ப சார் குடுப்பீங்க...

விக்ரம்... உண்மையை சொன்னா நடிக்க நல்ல வாய்ப்பிருந்தும் நடிக்க  வைக்கப்படவில்லை முகத்தை அகோரமாக்கி ஆடுறா ராமா வித்தை காட்ட வைக்கபட்டிருக்கிறார்...ஐந்து வில்லன்களை ஒருசேர சந்திக்குமிடத்தில் வசனமும் காட்சிகளும் பொறி பறந்திருக்கவேண்டாமா... என்னமோ போடா மாதவா... இந்த வகையில் கிருஷ்ணா அவிலாஞ்சி கொடுத்த AL விஜய் போற்றுதலுக்குரியவர்... விகரம் சார் இனிமே கிருஷ்ணா மாதிரியான ரோல்ல ஒரு படம் சாமி மாதிரியான ரோல்ல ஒரு படம்ன்னு வருஷத்துக்கு ரெண்டு படம் பண்ணுங்க... இந்தஉடம்ப கூட்டி குறைக்கிறதெல்லாம் வேண்டாம்...

மொத்தத்துல இந்த படத்த ஆனந்தவிகடன் எப்படி கழுவி ஊத்தப்போதுன்னு காண ஆவலாய் காத்திருக்கிறேன்....


           
           







கருத்துகள் இல்லை: