வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வெல்கம் டு ஆயகார் பவன்



வெல்கம் டு ஆய்கார் பவன்...

வருமான வரித்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

ம்... சொல்லுங்க... வருமான வரி அலுவலகம் வரைக்கும் வந்திருக்கீங்க... செலன் ஃபில் அப் பண்றதுல எதுவும் சந்தேகமாக...?

இல்லைங்க...

வரி கட்டணுமா...?

இல்லைங்க...

பின்ன... வரி கட்றதுல எதுவும் சந்தேகமா...?

ஆமாங்க...

என்ன சந்தேகம் சொல்லுங்க....!?

இந்த வருமான வரி கட்டாம ஏமாத்துறவங்கள பத்தி புகார் கொடுத்தா 15 லட்சரூபா பரிசுன்னு பேப்பர்லயும் TV லயும் பாத்தேன்... அது உண்மையா..?

உண்ம தான்... ஆனா நீங்க புகார்லாம் எழுதித் தரவேண்டியதில்லை... ஆள் யார்னு சொன்னாப் போதும் அவர் வரி கட்டாம ஏய்க்கிறது உண்மைன்னா கண்டிப்பா உங்களுக்கு பணம் கிடைக்கும்... ம்... ஆள் யார்னு சொல்லுங்க...

பேரு G. செல்லத்துரைங்க
32, பிள்ளையார் கோயில் தெரு
திருவான்மியூர்ல குடும்பத்தோட தங்கி ஏஜன்சி பிசினஸ் நடத்துறாருங்க

பரவாயில்லயே இன்ஷியல் மொதக்கொண்டு சொல்றீங்களே...! சரி வரி ஏய்ப்பு செய்றார்னு உங்களுக்கு எப்படி தெரியும்...?

ஆடிட்டர் சொன்னாருங்க


ஓ... ஆடிட்டரே உங்கள்ட உளறிட்டாரோ...? சரி...சரி உங்க பேரயும் அட்ரஸயும் சொல்லுங்க பரிசு பணத்தை தரணும்ல கான்பிடன்ஷியல் தான் வெளிய யாருக்கும் சொல்ல மாட்டோம்...!

எழுதிக்கோங்க...
G.செல்லத்துரை
32 பிள்ளையார் கோயில் தெரு
திருவான்மியூர்

நா கேட்டது உங்க பேர வரி ஏய்ப்பு செஞ்சவர் பேர இல்ல...

அதுவும் நான் தான் இதுவும் நான் தான்...

என்ன...?????

ஆமாங்க தொழில்ல ஒரு லட்சம் வரைக்கும் வரி கட்றமாதிரி இருந்துச்சீங்க இந்த ஆடிட்டர் தான் எனக்கு ஒரு இருபதாயிரம் மட்டும் குடு நீ வரி கட்டாதளவுக்கு கணக்கு எழுதிக் கொடுக்கிறேன்னு எழுதிக் கொடுத்தாருங்க..

தோ இப்ப உண்மைய சொல்லிட்டேங்க என்னப் புடிச்சி நா வெச்சிருக்கிற ஒரு லட்சத்த வாங்கிக்குங்க.... அப்புறம் எனக்கு சேரவேண்டிய 15 லட்சத்தயும் கையோட கொடுத்துட்டீங்கன்னா கிளம்பிடுவேன்...

யோவ்...

பரிசு பணத்த பணமா கொடுப்பீங்களா செக்கா கொடுப்பீங்களா...?

யோவ்... யோவ்..

கேஷா கொடுத்தா ஆயிரம் ரூபா கட்டா கொடுங்க நூறு ரூபா கட்டுங்கன்ணா வெயிட் ஜாஸ்தியாயிடும் தூக்கிட்டு போக சிரமமா இருக்கும்...

@ $ & # .. £ ¥ ¿......