திங்கள், 30 நவம்பர், 2015

ரஜினி சார் நீங்க

ரஜினி சார்.... நீங்க...

ரஜினி சார் நீங்க.....

ஒரு மன்னனா கடேசியா தனக்கு வந்த சொத்தையெல்லாம் உழைக்கும் வர்கத்துக்கே கொடுத்துட்டு விஜயசாந்தியோட அட்டு குடிசைல ஒன்டு குடித்தனம் போனீங்க...
ஒரு பணக்காரனா எனக்கு சொத்து சுகம் வேணாம் சொந்தம் மட்டும் போதும்னு சொத்தை உதறினீங்க...
ஒருஉழைப்பாளியா தனக்கு வந்த சொத்தையெல்லாம் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கே கொடுத்துட்டு என்ட் கார்டு போட்டீங்க....
ஒரு அண்ணாமலையா மறுபடியும் உங்களுக்கு கிடைச்ச சொத்த பிரண்டுக்கே தானம் பண்ணிட்டு மறுபடியும் சைக்கிள எடுத்துட்டு பால் யாவாரத்துக்கே போனீங்க...

ஒரு முத்துவா கேக்கவே வேணாம் அப்பனும் மகனும் சொத்தை தான தர்மம் பண்ணியே அழிச்சீங்க...
ஒரு அருணாசலமா உங்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடி பணத்த மீட்டு மறுபடியும் உங்க அப்பா அமைச்ச டிரஸ்ட்டிக்கே கொடுத்துட்டு துண்ட உதறி தோள்ல போட்டுட்டு கிளம்பிட்டீங்க....
ஒரு பாபாவா வித்தியாசமா தனக்கு கிடைச்ச மந்திரத்த பப்ளிக்குக்காகவே யூஸ் பண்ணி அழிச்சீங்க...

ஒரு சிவாஜியா NRIயா சம்பாதித்த அத்தன சொத்தையும் ஏழை எளிய மாணவர்களுக்காகவே உயிரக்கொடுத்து செலவு பண்ணீங்க....
ஒரு லிங்காவா பொது ஜனங்களுக்காக டேம் கட்டி அதால மொத்த சொத்தையும் இழந்தீங்க....

இவ்வளவு இழந்தப்பிறகும் புயல் வெள்ளம் பாதித்த மக்களுக்காக எதாவது செய்யனும்னு ஃபீல் பண்றீங்க பாருங்க யூ ஆர் வெரி கிரேட்....!

3 கருத்துகள்:

காரிகன் சொன்னது…

கைப்புள்ள கவலைப்படாதீங்க,

ரஜினி அடுத்த படத்தில அதையும் செஞ்சிருவாரு.

J.Jeyaseelan சொன்னது…

சினிமால செஞ்சதை ஏன் சார் நிஜ வாழ்வோடு ஒப்பிடுகிறீர்கள்... அவர் செய்வதும் செய்யாததும் அவர் விருப்பம், அதையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சரியா ? அவர் செய்றது இருக்கட்டும் நம்ம ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை செய்ய சொல்லி ஒரு பதிவ போட்டுவிடுங்க.. அப்பயாச்சும் முதலமைச்சர் எட்டி பாக்குறாங்களான்னு பார்ப்போம்... ;) ;)

Raja சொன்னது…

இந்த சினிமாகாரனுங்க நல்லா அரசியல் பண்ணுவாங்க.
அதே மாதிரி இந்த அரசியல்வாதிங்க நல்லா நடிப்பாங்க.
இந்த ரெண்டுமே உண்மைன்னு நினைக்கிறவன் தான் கோமாளி!
இந்த கோமாளிங்க இருக்குற வரைக்கும் தான் இவனுங்க பொழப்பு ஓடும்!!