ஞாயிறு, 14 டிசம்பர், 2014

திருடன் லிங்காவோட அப்பா யாரு...?

             



              தாத்தா ராஜா லிங்கேஸ்வரன் பேரன் லிங்கா இந்த ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கவேண்டிய அப்பா லிங்கேஸ் என்னவானார்ன்னு படம் வந்ததிலிருந்து காத போட்டு கொடஞ்சிட்டே...ச்சே... மனச போட்டு கொடஞ்சிட்டே இருந்துச்சி.. சரி உண்மை என்னன்னு கண்டுபிடிச்சி இந்த உலகத்துக்கு தெரிவிப்போம்னு களத்துல எறங்கி கன்னிமரா மியூசியம் எல்லாம் போய் ஆதாரத்த தெரட்டுனா பல அதிர்ச்சிகரமான உண்மைகளெல்லாம் தெரிய வந்துச்சி.... அந்த உண்மைகள் என்னன்னா...
                    தாத்தா ராஜா லிங்கேஸ்வரனோட தாத்தா முத்து மகாராஜா... அதான் தன்ன ஏமாத்துன சொந்தத்துக்கே தன்னோட எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டு பையன் முத்துவையும் போனஸா அவங்களுக்கே கொடுத்துட்டு பரதேசியா போனாரே அவரேதான்... அந்த முத்து மகாராஜாவோட மகன் முத்துவுக்கும் மீனாவுக்கும் பொறந்தவருதான் இந்த ராஜா லிங்கேஸ்வரன்...
                      அதான் முத்து எல்லா சொத்தையும் சரத்பாபுக்கே விட்டுகொடுத்துட்டு வந்துட்டாரே அப்புறம் எப்படி ராஜா லிங்கேஸ்வரன் பெரும் பணக்கார் ஆனார்ன்னு கேக்காதீங்க... ஏன்னா அவங்களெல்லாம் ஒரே பாட்டுல பணக்காரனாகிற வம்சத்த சேந்தவங்கங்கிறது உங்களுக்கே தெரியும்... அதுபடி ராஜா லிங்கேஸ்வரன் குத்து மதிப்பா ஒரு பத்து பதினஞ்சு பாட்டுகளை பாடி பெரும் பணக்காரராயிட்டாரு.
                         அப்புறம் வழக்கப்படி ராஜா லிங்கேஸ்வரனும் ஓட்டாண்டி யாகி பரதேசம் புறப்பட்ட பிறகு பிறந்தவருதான் ஊருக்கெல்லாம் வாரி வழங்கினாலும் தனக்கு ஒரு வாரிசு இல்லையேன்னு ஏங்குன நம்ம எஜமான் வானவராயர் அய்யா... அப்படின்னா சோனாக்ஷி தானே  வானவராயருக்கு அம்மாவ வரணும் இதுல மனோரமா அம்மா வா இருக்காங்களே அது எப்படின்னு திருப்பி என்ட கேள்வி கேக்காதீங்க ஏன்னா இதப்பத்தின சரித்திர குறிப்புகள நான் எங்க தேடியும் கிடைக்கல...
                                  
                              சரி சரித்திரத்துக்கு வருவோம்... மனைவி மீனா இறந்த துக்கத்துல இருந்த நம்ம எஜமான் மனைவி சாவுக்கு காரணமானவங்கள ஒரு ஆக்ரோசமான சண்டைக்கப்புறம் திரித்திட்டு விருட்டுன்னு வேலைக்காரியும் கணீர் ஆண் குரலழகியுமான ஐஸ்வர்யாவ இழுத்துட்டு போவாரே... அப்படிப்பட்ட எஜமானுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பிறந்தவருதான் இந்த திருடன் லிங்கா..
                                   
                           சரி... அப்படின்னா இந்த பணக்காரன் உழைப்பாளி அண்ணாமலை பாட்ஷா அருணாசலம் பாண்டியன்லாம் யாருன்னு நீங்க கேட்டா அதுக்கு என்னோட பதில் உலகத்துல ஒரே மாதிரி எழுபேரு இருப்பாங்க... இதுல அருணாசலத்தோடா அப்பா மட்டும் ராஜா லிங்கேஸ்வரனோட ஒன்னு விட்ட சித்தப்பா முறைல வர்றாப்புல...
                           
 ஒரு பின்குறிப்பு : மதன் எழுதின வந்தார்கள் வென்றார்கள் புக்குல மொகலாய பேரரசுல முத்து மகாராஜவோட முன்னோர்களில் ஒருவர் தளபதியா இருந்து அலாவுதீனின் அற்புத விளக்குக்காக கமலோட மல்லு கட்டிருகார்ன்னு ஒரு மறைமுக குறிப்பா சொல்லிருக்கார்...

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பேரன் வயது 64 என்ரால் தாத்தாவுக்கு என்ன வயது?

பெயரில்லா சொன்னது…


ரசித்தேன்...மகிழ்ந்தேன்...

துளசி கோபால் சொன்னது…

:-)))))))

சோனாக்ஷிக்கு வயசு அதிகமாகிட்டால் முகத்துக்கு மனோரமா ஜாடை வந்துரும்.


ஆமா....

எங்கே ரொம்பநாளா ஆளைக் காணோம்? ஆணி அதிகமோ?

KAYALVIZHI சொன்னது…

சூப்பரோ சூப்பர்.

Manimaran சொன்னது…

///அதுபடி ராஜா லிங்கேஸ்வரன் குத்து மதிப்பா ஒரு பத்து பதினஞ்சு பாட்டுகளை பாடி பெரும் பணக்காரராயிட்டாரு.//

rofl..... super.

Manimaran சொன்னது…

செம டைமிங் பாஸ்... தொடர்ந்து எழுதுங்க..

பொ.முருகன் சொன்னது…

எங்க FB லேயே கால நீட்டி உக்காந்தாச்சி டக்குன்னு ப்ளாக் வரமுடியிறதில்லை நன்றி திரு துளசி கோபால்