புதன், 31 டிசம்பர், 2014

வாங்க.. வந்து ஒரு அவார்டு வாங்கிட்டு போங்க...

ஒவ்வொரு வருஷமும் அரசும் பல TV சானல்களும் அவங்களுக்கு வேண்டியவங்களுக்கு விருது கொடுத்து மரியாத பண்ணிட்டிருக்கு அந்த வகைல நாமும் நமக்கு தெரிஞ்ச பரிச்சயப்பட்ட நபர்களுக்கு விருதுகள் வழங்கி கவனிச்சா என்னன்னு  எங்க ஒ.உ. சிந்தனைகள் கிளப்  முடிவுசெஞ்சி களமிறங்கி தயாரித்த விருதுகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...ஒ.உ.சிந்தனைகள்ன்னா என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க ண்ணுக்கும் தவாத சிந்தனைகள்ங்கிறதை தான் ஒ.உ.சிந்தனைகள்ன்னு சுருக்கி வச்சிருக்கோம் சரி வாங்க விருதுக்கு போவோம்...

1 கட் அண்ட் ரய்ட் இந்தியன் விருது 

                  அம்பது ரூபா கொடுத்து அம்பதுரூபா டெய்லி பாஸ் கொடுங்கன்னு கேட்டாலும் அம்பது ரூபா சிலரையா இருந்தா கொடு இல்லா கீழ எறங்குன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லும் கண்டக்டர்களுக்கு  கட் அண்ட் ரய்ட் இந்தியன் விருது 

2.இதால இந்தஉலகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்க விருது...

           ஓசியா கிடைச்ச டெய்லி காலண்டர்களில் தன் தேவைக்கு போக மீதியிருப்பதை இல்லாதவங்களுக்கு கொடுக்காம வருஷம் பூறா ஒரு பொக்கிஷமா அப்படியே வச்சிருந்து வருஷம் முடிஞ்சவுடனே அந்த டெய்லி கேக்க அப்படியே  விபூதி குங்குமம் மடிக்க கோயில்ல கொண்டுபோய் வைக்கிறவங்களுக்கு இதால இந்தஉலகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்க விருது...
3.சிறந்த குடிமகன் விருது

      பஸ் கன்டக்டர் தரவேண்டிய 50 பைசா பாக்கிக்காக ஒரு நாளைக்கு 50 பைசான்னா ஒரு மாசத்துக்கு 15 ரூபா ஒரு வருசத்துக்கு 180 ரூபா இப்படி எங்கள்ட்ட கொள்ளையடிக்க எத்தன பேருடா களம்பியிருக்கீங்கன்னு அந்நியன் ரேஞ்சுக்கு டயலாக் பேசிட்டு  டாஸ்மாக்ல வெறும் 50 பைசா பொருமானமுள்ள பிளாஸ்டிக் டம்ளர எந்த கேள்வியும் கேக்காம 5 ரூபா குடுத்து வாங்கி அரசு கஜானாவை வாழவைக்கும் குடிமகனுக்கு சிறந்த குடிமகன் விருது
4.சிறந்த வீணா கீழே போறத அப்படியே காசாக்கு விருது...

      மோட்டல்ல பஸ்ஸ விட்டு எறங்குற பயணிங்க  ஹைவே ஓரமாவே போய் ஒன்னுக்கு அடிச்சா அப்படி போற ஒவ்வொரு ஒண்ணுக்கும்  நமக்கு வரவேண்டிய 5 ரூபா வருமானம் போயிடுமேன்னு யோசிச்சி பயணிகள் அப்படி ஒன்னுக்கு போற இடங்களை கண்டறிந்து கையில் குச்சியோட ஆயாக்களை உக்கார வச்சி தனக்கு வரவேண்டிய வருமானம் ஹைவேயில் வீணா போகாமல் பார்த்துக்கொள்ளும் மோட்டல் கான்ட்ராக்டர்களுக்கு சிறந்த வீணா கீழே போறத அப்படியே காசாக்கு விருது... 
5.சிறந்த யார் தலையிலாவது கட்டிவிடு விருது 

     கெட்டுப்போகப்போற நிலையில இருக்கிற ஒன்னார்ரூபா பெறாத ஸ்வீட்ட சாப்பாட்டுல வச்சி ஸ்பெஷல் மீல்ஸ்ன்னு 15 ரூபா எக்ஸ்ட்ராவா வசூல் செய்யும் ஹோட்டல் முதலாளிகளுக்கு சிறந்த தொழிலதிபர் பில்கேட்ஸ் விருது.
6.சிறந்த மார்க்கெட்டிங் தாதா விருது...

     மார்க்கெட்டிங்க்கு பொய் முக்கியம் ஆனா ஜனங்களுக்கு அது பொய்யின்னு தெரிஞ்சதையே மறுபடியும் மறுபடியும் இது உண்மைன்னு அவங்கள நம்பவச்சி அவங்க தலையிலேயே அத கட்டுவதற்கு அசாத்திய திறமை வேண்டும்... அந்த வகையில் என்னை மிகவும் அசத்தியவர்கள் ட்ரெய்னில் காப்பி டீ விற்பவர்கள்தான் ஆகவே ...  ட்ரெயினில் காப்பி டீ விற்பவர்களுக்கு இந்த வருடத்தின் .சிறந்த மார்க்கெட்டிங் தாதா விருது...
7.எளவு விழலை அதால அழலை விருது..

          எங்கேயாவது தமிழ்,தமிழன்ங்கிற பேர்ல எவனாவது எமோஷனலா முடிவெடுத்து தற்கொலை பண்ணிக்கிட்டா அத கண்டிக்காம அந்த வீட்டுக்கே போய் தாரை தாரையா கண்ணீர் விட்டு அழுது அரசியல் பண்ண தலைவர்களுக்கு  இந்த வருஷம் நல்லவேளையா அதுக்கு வழியில்லாமப் போனதால  அந்த தலைவர்களுக்கு எளவு விழலை அதால அழலை விருது..
8. சாலை விதிகளை கடைபிடி காசை அள்ளு விருது...

          சிகப்பு விழுந்தவுடன பரபரன்னு இயங்கியும் கிரீன் விழுந்தவுடன டக்குன்னு ஒதுங்கியும் சிக்னலை சிறப்பாக மதிக்கும் சிக்னல் பிச்சைக்கரர்களுக்கு சாலை விதிகளை கடைபிடி காசை அள்ளு விருது..
9. மாத்தியோசி விருது...

        பெட்ரோல் விலை ஏற ஏற... அதையே  காரணம் காட்டி மீட்டருக்கு மேல காச கறந்த ஆட்டோ ட்ரைவர்கள் பெட்ரோல் விலை எறங்க எறங்க... எஞ்சின் ஆயில் வில கூடிடுச்சி,பால்விலை கூடிடிச்சி, தோணி ரிடையர் ஆயிட்டாரு,லிங்கா சரியா ஓடலன்னு... இப்படி எதுனா சப்ப காரணத்த சொல்லி மீட்டருக்கு மேல காசு வாங்குறத கைவிடாத ஆட்டோ டிரைவர்களுக்கு...  மாத்தியோசி விருது..
10.சீரியல்கள பாரு குடும்ப கவலைகளை மற விருது...

         தினமும் கிட்டத்தட்ட 18 சீரியல்கள போட்டு  இவ எவன் கூட ஓட்டினா,அவ இவனுக்கு எத்தனாவது பொண்டாட்டி,இவன்அந்த மூணாவது பொண்டாட்டியோட ஒழுங்கா குடும்பம் நடுத்துவானா அத ரெண்டாவது பொண்டாட்டி தடுப்பாளா...இதை யெல்லாம் பாத்தா மொத பொண்டாட்டி போலிசுக்கு போவாளா,நாலாவதா எவ இவனுக்கு வாழ்க்கைப்பாடுவான்னு...இப்படிசீரியல் கவலைகளை குடும்ப பெரியவர்களுக்கு கொடுத்து அவர்களின் சுய கவலைகளை மறக்கச்செய்த சானல்களுக்கு சீரியல்கள பாரு குடும்ப கவலைகளை மற விருது 
11.திடீர் ஆடிட்டர்கள் விருது...

    தனக்கு பிடிச்ச நடிகர் படம் ரிலீஸ் ஆயிட்டா,படம் போட்ட மொத நாள்லயிருந்து படத்த தூக்குற ஏழாவது நாள் வரைக்கும் இன்னைக்கு பத்துகோடி கலெக்ஷன் அமிரிக்கால ஒருலட்சம் டாலர் கலெக்ஷன் செவ்வாய் கிரகத்துல ரெண்டு கோடி மங்கல்யான் கலெக்ஷன்ன்னு fb twitter ல கலெக்ஷன் ரிபோர்ட் வாசிக்கிற ரசிகசிகாமணிகளுக்கு திடீர் ஆடிட்டர்கள் விருது.... 
12.சம்பளம்  வாங்கின சந்தோசத்த அனுபவிக்க விடமாட்டோம் விருது...

        உங்க சம்பளம் கிரிடிட் ஆயிடுச்சின்னு ஆபீஸ் SMS வந்த அடுத்த நிமிசமே இந்த மாதம் 5 ம் தேதி ஹௌசிங் லோன் EMI இருபதாயிரத்து சொச்சம் வருது மறந்துறாம பணத்த முன்கூட்டியே பேங்குல போட்டுடுங்கன்னு SMS அனுப்புற வங்கிகளுக்கு....சம்பளம்  வாங்கின சந்தோசத்த அனுபவிக்க விடமாட்டோம் விருது...

           மேற்படி விருதுகளுக்கானா பரிசுக்கோப்பைகள் காசியப்பன் பாத்திரக்கடையில் ஆர்டர் பண்ணி காசு கொடுத்து வாங்க முடியாமல் அங்கேயே இருக்கிறது சம்பந்த பட்ட விருதுகளுக்குரியவர்கள் என்னிடம் அதற்குரிய பணத்தை செலுத்திவிட்டு அந்த கடையிலேயே நேரடியாக விருதுகளை வாங்கிக்கொள்ளலாம்.... முந்துங்கள் விருதுகள் ஸ்டாக் உள்ளவரையே....
அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 




















கருத்துகள் இல்லை: