வியாழன், 3 மார்ச், 2016

அவசரமா வந்துட்டா...

அவசரமா வந்துட்டா... 

இப்படி நாள் முச்சுடும் வண்டில சென்னைய சுத்து சுத்துன்னு சுத்துறீங்களே... ஒரு அவசரம்னா எங்கே போவீங்க...

அதான் முக்குக்கு முக்கு தெறந்து வச்சிருக்காங்களே அந்த உயர்தர சைவ பவனுக்குத்தான்...
நான் கேட்டது திடீர்னு வயறு கலக்கினா எங்கேப் போவீங்கன்னு...
நானும் அததான் சொல்றேன்....அவசரமா வயத்த பெசஞ்சதுன்னா பக்கத்துல இருக்கிற உயர்தர பவனுக்கு போய் நின்னா வண்டிய பார்க் பண்ண செக்கியூரிட்டி அரும்பாடுபட்டு இடம்லாம் ஒதுக்கி கொடுப்பாரு
அப்படியே வண்டிய சேப்பா பார்க் பண்ணிட்டு ஹோட்டலுக்குள்ள போய் ஜென்ட்டிலா போன வேலைய முடிச்சிட்டு ஹேண்ட்வாஸ்ட்ட போயி அங்க வச்சிருக்கிற சோப் ஆயில ரெண்டு தடவ கையில ஊத்திக் கழுவி கூடவே முகத்தையும் நல்லா கழுவி நாலஞ்சு டிஸ்யூ பேப்பர எடுத்து கையயும் முகத்தையும் நல்லா தொடச்சிட்டு ஃப்ரஸ்சா கல்லாட்ட போனா கிண்ணத்துல திருத்தணி விபூதி குங்கும்மெல்லாம் வச்சிருப்பாங்க அத எடுத்து சின்னதா நெத்தில இட்டுட்டு அப்படியே கல்லாக்கு பின்னாடி போட்டால மொறச்சிட்டிருக்கிற அண்ணாச்சிக்கும் புன்னகையோட இருக்கும் வாரியார் சுவாமிக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு வெளிய வந்தா பார்க்கிங்ல நெருக்கமா சிக்கிட்டு இருக்கிற நம்ம வண்டிய ஒரு சின்னக்கீறல்கூட விழாம சூதானமா வெளிய எடுத்துக்கொடுப்பாரு செக்யூரிட்டி
சுமைய எறக்குன சந்தோஷத்துல வண்டில ஏறி ஸ்ட்ராட் பண்ணுனா செக்யூரிட்டி டிப்ஸ் கிடைக்குங்கிற நப்பாசைல ஒரு சலாம் வச்சி (சாப்டாதான்டா டிப்ஸு )நம்மள வழியனுப்புவார் பாரு இந்த சுகானுபவம் எந்த ஃபாரின் கன்ட்ரிக்கு போனாலும் கிடைக்காது...
அடப்பாவி இதெல்லாம் தப்பு கிடையாதா...
எது தப்பு... மொதநாள் மீந்து போன ஸ்வீட்ட மறுநாள் ஸ்பெசல் மீல்ஸ்ல வெச்சுதற்றாங்களே அது தப்பில்லைன்னா இதுவும் தப்பில்லை...
மொதல்லாம் பொங்கல்ல முந்திரிபருப்ப தேடுவோம் ஆனா இப்ப அந்த பொங்கலையே தேடுற மாதிரி தக்னியூண்டு (மினி டிபன்)வைக்கிறாங்களே அது தப்பில்லைன்னா நான் செய்யுறதும் தப்பில்ல
முன்னல்லாம் ஒரு சாப்பாடு பார்சல் வாங்குனா ரெண்டுபேர் சாப்பிடலாம் ஆனா இப்ப ரெண்டு சாப்பாடு பார்சல் வாங்குனாதான் ஒரு ஆள் சாப்பிடமுடியும்ங்கிற நிலைக்கு கொண்டு வந்திருக்காங்களே அது தப்பில்லைன்னா இதுவும் தப்பில்ல..

---------------------------------------------------------------------------------------------------------
டிஸ்க்கி 


கருத்துகள் இல்லை: