செவ்வாய், 14 ஜனவரி, 2014

ஜில்லா ஒரு பார்வை

ஜில்லா 


                    உள்ளே வெளியே போலீஸ் கதையில் கொஞ்சம் ஆக்சன் கொஞ்சம் உளுத்துபோனா சென்டிமென்ட்ஸ் கலந்து வச்சா ஜில்லா பொங்கல்..


                      பிரமாதமா  கதை சொல்லி தயாரிப்பாளர்(அதுவும் R.B சௌத்ரி),ரெண்டு பெரிய நடிகர்களை பிடிக்க தெரிஞ்ச டைரக்டருக்கு அத பிரமாதமான படமா எடுக்கத் தெரியல கடேசியில் வழக்கம் போல ஏமாந்தது விஜயும் விஜய்ய நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்களும் மட்டும் தான். 

                       லால்... இந்தே ஸ்ஷிவேன் இல்லேன்னா ஸ்ஷக்தி இல்லன்னு மதுரை பின்னணியில் கேரள ஸ்லாங்கில் பேசுறார்... இந்த மாதிரி கேரக்டரில் ராஜ்கிரனை பார்த்துப் பார்த்து புளிச்சிபோச்சுன்னு ஒரு விமர்சனம் வந்துடக்கூடாதுன்னுதான் புதுசா லால போட்டிருக்காங்க போல  


                விஜய்... வழக்கமா அவர் கையாள்ர கதாபாத்திரம் தான்.. சிலிண்டர் வெடிப்புகளுக்கு அப்புறம் அவர் காட்டுற முகபாவனைகள்.... உஸ்ஸ்ஸ்ஸ்...ஸப்பா, ஆனாலும் மனுஷன் என்ன லேகியம் சாப்பிடுறார்ன்னு தெரியல படத்துக்கு படம் மனுஷன் மெருகேரிட்டே போறார்... 


           முட்டக் கண்ணி காஜல்.... போலீசாம்... பாவாம் விஜய் மட்டும் தனியா டூயட் பாடமுடியாதுன்னு துணைக்கு போட்டிருக்காங்க மற்றும் சூரி.. சூரியும்,விஜயும் சேர்ந்து சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சி பண்ணிருக்காங்க இந்த இடத்தில் நீங்க சிரிக்கணும்ன்னு ஒரு சப் டைட்டில் போட்டிருந்தா சிரிக்க வசதியா இருந்திருக்கும்.அதுவும் பின்பக்கம் மாவு பிசயுறது என்ன வகை காமெடியோ? இந்த படத்துல பூர்ணிமா பாக்கியராஜ அம்மாவா பிரமோட் பண்ணிருக்காங்க... சரண்யா பொன்வண்ணனுக்கு டப் பைட் கொடுக்க வாய்ப்பில்லை.

                படத்தோட ரொம்ப பெரிய பிளஸ் இமான் இசை தான் மனுஷன் பின்னிட்டார்... கண்டாங்கி கண்டாங்கி,எப்ப மாமா ட்ரீட்டு  இந்த ரெண்டு பாட்டும் மிகப்பெரிய ஹிட் 

            ஒரு வார்த்தைல சொல்றத 5 நிமிஷ பாட்டா இழுத்துட்டான்..இப்படி ஒரு வசனத்த சூரி சொல்வார் இது இயக்குனர் நேசனுக்கும் பொருந்தும் என்னதான் விஜய் நடிச்சிருந்தாலும் 3 மணி நேரம் படமென்பது ரொம்ப இழுவை... இந்த தக்கச்சி கல்யாணம் இழுவையெல்லாம் தேவையா மிஸ்டர் நேசன்.. அதுலயும் விஜய் பந்தில உக்காந்து தானே சாப்ட்றார் அதுக்கு எதுக்கு மண் சோறு சாப்பிடற அளவுக்கு சென்டிமென்ட் பிழிதல்.., எதுக்கு அந்த ஓப்பனிங் சண்டைக்காட்சி.. அப்புறம் இந்த கண்டாங்கி பாட்டுக்கு காஜலுக்கு  மாடர்ன் டிரஸ்...  என்னமாதிரி  ரசனையோ?


 மொத்தத்தில் படம் பார்க்கலாம்... ஆனால் துப்பாக்கி,கில்லிய எதிர்பார்த்து போகாதீங்க... அடுத்து விஜய் ARM கூட படம் பண்றாராம் அந்தப்படம் பிரமாதமாக வர எனது வாழ்த்துகள்.... 
 

           

         











கருத்துகள் இல்லை: